Home /News /lifestyle /

பெண்களின் தொப்புள் மீது ஈர்ப்பு உருவாவது தவறானதா?

பெண்களின் தொப்புள் மீது ஈர்ப்பு உருவாவது தவறானதா?

கோப்பு படம்

கோப்பு படம்

Sexual Wellness Q & A | ஒரு சக்திவாய்ந்த எரோஜெனஸ் மண்டலமாக இருக்கும் தொப்புள் உடலின் மற்ற பகுதிகளை விட மிகவும் உணர்திறன் கொண்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கேள்வி : பெண்களின் தொப்புள் மீது எனக்கு ஈர்ப்பு உள்ளது. அதை தவறு என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இது ஒரு கற்பனையான செயல் போன்றது. மேலும் சில பெண்கள் இதை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றே செய்கிறார்கள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை, எதிர்காலத்தில் எனது பெண் துணையிடம் இதைப்பற்றி நான் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? அல்லது இந்த எண்ணத்தை அவளிடம் சொல்ல வேறு வழி இருக்கிறதா?

பதில் : ஒரு அழகான புடவையில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கும் கோலிவுட் பட காட்சியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம், மெதுவாக வீசும் தென்றல் அவளது தொப்புளை பலருக்கும் காட்சிப்படுத்துகிறது, மேலும் அந்தக் காட்சியை கேமரா பெரிதாக்குகிறது மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான முறையில் பிரேம்கள் வெளி வருகின்றன. கோலிவுட்டில் மட்டுமல்ல, வரலாற்று ரீதியாக கலாச்சாரங்களில் தொப்புள் எப்போதுமே காண்போர் மனதை சலசலக்கும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, இதனால் தான் என்னமோ பல நடனக் கலைஞர்கள் தொப்புளில் துளையிடுகின்றனர்!

தொப்புள் மிக முக்கியமான ஈரோஜெனஸ் மண்டலங்களில் ஒன்றாகும். பெண்களால் ஈர்க்கப்படும் ஒருவர், அவர்களின் தொப்புளைப் பார்ப்பது மேலும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது பெண்ணின் இடை வளைவுகள், இடுப்புக் கோடு, இடுப்பை முன்னிலைப்படுத்துதல் போன்றவை மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. இதனால் ஆண்கள் பெண்களை நோக்கி ஈர்க்கப்படுவது முற்றிலும் இயல்பானது. மேலும் பெல்லி பட்டன் என்பது 2012ம் ஆண்டில், உலகில் 2வதாக அதிகம் தேடப்பட்ட ஒன்றாக கூகுளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.உங்களின் முதல் டேட்டிங்கின்போது ஒரு பெண்ணிடம் நீங்கள் பெல்லி பட்டன்களை பற்றி பேசினால் அவர்கள் உண்மையில் ஈர்க்கப்படலாம் அல்லது அவர்கள் விசித்திரமாகவும் உணரலாம். இருப்பினும், டர்ட்டி டாக்ஸில் ஈடுபடும்போதோ அல்லது உடலுறவின் போது தொப்புள்களை நீங்கள் கவர்ச்சிகரமானதாகக் காணலாம். உண்மையில், ஒரு சக்திவாய்ந்த எரோஜெனஸ் மண்டலமாக இருக்கும் தொப்புள் உடலின் மற்ற பகுதிகளை விட மிகவும் உணர்திறன் கொண்டது.

ஆண்களே உடல் பருமனால் நிறைய பாதிப்புகளைச் சந்திக்கிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்தான் இவை..

இது பிறப்புறுப்புகளைப் போல் உணர்ச்சி தூண்டக்கூடியதாக இருப்பதால் அவை கவர்ச்சியாக உள்ளது. அதைத் தொடுவது, முத்தமிடுவது, நாக்கை கொண்டு நக்குதல் என இவற்றை செய்யும்போது புதுவித உணர்வுகளை உருவாக்கும். ஏனெனில் இது சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் யோனிக்கும் இடையில் சரியான இடத்தில் அமைந்துள்ளது, இது பிறப்புறுப்புகளைத் தூண்டும் நரம்புகளைக் கொண்டுள்ளது, கிட்டத்தட்ட யோனியில் உணரக்கூடிய தூண்டுதல் அது.

இருப்பினும், இது உங்கள் கூட்டாளருக்கு கூச்சமாக இருக்கிறதா/இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது உங்கள் கூட்டாளரை உடலுறவில் இருந்து திசை திருப்பவும் செய்யும். இதன் மீதான உங்கள் ஈர்ப்பு கட்டுப்படுத்த முடியாதது அல்லது பாலியல் குறித்த உங்கள் மன ஓட்டத்தை அதிகரிக்காத வரை, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மையில், விருப்பமுள்ள கூட்டாளருடன், இந்த எரோஜெனஸ் மண்டலத்தை ஆராயுங்கள், இதன்மூலம் நீங்களும் உங்கள் கூட்டாளியும் சில புதிய இன்பங்களைக் கண்டறியலாம்.
இது போன்ற லைப்ஸ்டைல் தொடர்பானவற்றை அறிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published:

Tags: Belly button, Sex, Sexual Wellness

அடுத்த செய்தி