International Kissing Day: முத்தமிடுவதால் 5 ஆண்டுகள் ஆயுள் கூடுமாம்?

 மனிதன் சராசரியாக  தன் ஆயுளில் இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிப்பதாகக் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது.

news18
Updated: July 6, 2019, 10:55 PM IST
International Kissing Day: முத்தமிடுவதால் 5 ஆண்டுகள் ஆயுள் கூடுமாம்?
உலக முத்த தினம்
news18
Updated: July 6, 2019, 10:55 PM IST
முத்த தினம் 2006-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்த தினம் என்றாலே அதன் நோக்கம் பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றைய தினம் முத்தத்தின் முக்கியம் குறித்து பேசுவதற்கு மட்டுமல்ல முத்தத்தை பரிமாறி அன்பை வெளிப்படுத்தவும்தான்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதற்காக வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தி காதலர்களை அழைத்து முத்தமிட ஏற்பாடு செய்கிறார்கள்.

இப்படி முத்தம் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாக நிகழ்ந்தாலும், உடலளவில் மிகப்பெரிய செயல் நடைபெறும். அதாவது ஒரே ஒரு முத்தத்திற்கு 112 தோரணை தசைகளும் (postural muscles ) 34 முகத் தசைகளும் செயலில் ஈடுபட்டால்தான் உங்களால் முத்தம் கொடுக்க முடியும். இப்படி முத்தமிடும்போது ஒரு நிமிடத்திற்கு 26 கலோரிகள் குறைகின்றன.
உங்களுக்குத் தெரியுமா... 45 வயதிற்கு மேற்பட்ட மக்களில் ஐந்து சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 31 முறையாவது முத்தமிடுகிறார்கள். அதேபோல் மனிதன் சராசரியாக  தன் ஆயுளில் இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிப்பதாகக் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. அப்படி கணக்கு செய்தால் 336 மணி நேரங்கள் ஒரு மனிதன் முத்தமிட்டுக்கொள்கிறார். முத்தத்தில் சாதனையாக 58 மணி நேரங்கள், 35 நிமிடங்கள் மற்றும் 58 நொடிகள் என முத்தமிட்டு ரெக்கார்டில் இடம் பெற்ற ஜோடியின் செய்திகளும் நிகழ்ந்துள்ளன.

அதேசமயம் சிலருக்கு முத்தம் என்றாலே அலஜ்ரி என்று பயந்து ஓடுவார்கள். அதற்குக் காரனம் ஃபில்மா ஃபோபியா (Philemaphobia ) என்கின்றனர் மருத்துவர்கள்.

Loading...

உண்மையைச் சொல்லப்போனால் கை விரல்களைக் காட்டிலும் 100 மடங்கு உதட்டிற்கு அதிக உணர்ச்சி இருப்பதால்தான் முத்தத்திற்கு அத்தனை சக்தி இருக்கிறது.முத்தத்தில் மூன்று வகைகள் இருக்கின்றன. அதில் முதல் வகை என்பது சாதாணமாகக் கன்னத்தில் முத்தமிடுவது. இரண்டாவது உதட்டில் ஒரு முறை மட்டும் ஒற்றி எடுப்பது. மூன்றாவது வகை என்பதுதான் ஆழமாக நாக்குகளை நீட்டித்து கொடுக்கும் பிரெஞ்சு முத்தம்.

இப்படி முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் பரிமாறிக்கொள்ளும்போது கிட்டத்தட்ட 80 மில்லியன் நுண்ணுயிரிகளையும் பரிமாறிக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை எப்பேர்பட்ட ஞாபக மறதி கொண்டோரும் அந்த முதல் முத்தத்தை மறக்க மாட்டார்கள்.

முத்தத்தின் அறிவியல் பெயர் கேடக்குளோடிசம் (Cataglottism).உலக அளவில் ஒவ்வொரு நாடுகளிலும் முத்தத்தை ஒவ்வொரு விதமாகப் பார்க்கின்றனர். உதாரணமாக கிபி 3-ம் நூற்றாண்டில் ரோமானியர்கள், கணவர் வேலை முடித்து வந்தால் மனையை உதட்டில் முத்தமிடுவார்களாம். காரணம் காதல் அல்ல. அவர்கள் மது அருந்திவிட்டு வந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறியவே இந்த பழக்கம். அதேபோல் சீனாவில் பிரெஞ்சு முத்தம் ஆபாசமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பப்புவா நியூ கினியாவில் பொது இடத்தில் பிரெஞ்சு முத்தம் கொடுத்தால் பெரும் சிரிப்புடன் குலவையிடுகின்றனர். பாலித்தீவுகளில் உள்ள மக்களுக்கு உதட்டில் முத்தமிட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லை. அதற்கு பதிலாக முகத்தை நுகர்ந்து ஒட்டிக்கொள்கின்றனர்.

முத்தமிட்டுக்கொள்வதால் மனஅழுத்தம் குறைகிறது. சராசரி வாழ்நாளைவிடக் கூடுதலாக ஐந்து வருடங்கள் வாழலாம். ஆண் , பெண் உறவு முறையில் திருப்த்தி மகிழ்ச்சி அதிகரிக்கும். முத்தமிடும்போது இதயம் நிமிடத்திற்கு 100 முறை வேகமாகத் துடிக்கிறது. இதனால் கொழுப்புகள் குறைகிறது. இது உடற்பயிற்சிக்கு சமமான நன்மை என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...