ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வாழ்நாளில் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் என தெரியுமா.? வருத்தமும் அதிர்ச்சியும் தரும் உண்மைகள்!

வாழ்நாளில் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் என தெரியுமா.? வருத்தமும் அதிர்ச்சியும் தரும் உண்மைகள்!

மாதிரிப்படம் source : Shutterstock

மாதிரிப்படம் source : Shutterstock

பள்ளி, கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், காதலன் / காதலி, குழந்தைகள் என்று காலம் மாறிக்கொண்டே இருக்கும். தற்போதெல்லாம் பலரும் இணையத்தில், சோஷியல் மீடியாவிலேயே தங்களுடைய பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு காலகட்டத்திலும், குறிப்பிட்ட நபர்களுடன் நாம் அதிகமாக நேரம் செலவழிப்போம். உதாரணமாக முதல் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்போம். அதன் பிறகு பள்ளி, கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், காதலன் / காதலி, குழந்தைகள் என்று காலம் மாறிக்கொண்டே இருக்கும். தற்போதெல்லாம் பலரும் இணையத்தில், சோஷியல் மீடியாவிலேயே தங்களுடைய பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலையை உண்மையிலேயே நம்முடைய வாழ்நாளை எப்படி செலவழிக்கிறோம், யாருடன் அதிகம் நேரம் செலவழிக்கிறோம் என்பதை பற்றி சமூகவலைத்தள இன்ஃப்ளூயன்சர் மற்றும் பிரபலமான சாஹில் ப்லூம் அதிர்ச்சியூட்டும் பலவித தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

இவர் பகிர்ந்த டேட்டா மற்றும் கிராஃபிக்கல் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. யாருடன் நாம் அதிகமாக நேரம் செலவழிக்கிறோம் என்பது ஒரு சில இடங்களில் ஊக்கமளிப்பதாகவும் மற்ற இடங்களில் மன சோர்வு அளிப்பதாகவும் இருக்கிறது!

குடும்பம் மற்றும் சகோதர சகோதரிகளுடன் செலவழிக்கும் நேரம்

பெற்றோர், உடன் பிறந்தவர்களுடன் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் செலவழிக்கும் நேரம் என்பது இருவது வயதுக்கு மேல் பெரிதாகக் குறைந்து விடுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறோம். உட்கார்ந்து பேசக்கூட நேரமில்லை, ஓடிக் கொண்டே இருக்கிறோம் அல்லது முன்னுரிமைகள் மாறிவிட்டன என்ற வாழ்க்கைமுறையில் முதலில் அடிபட்டுப் போவது குடும்பம் தன.

நண்பர்களுடன் செலவழிக்கும் நேரம்

எல்லா வயதிலுமே, அனைவருக்குமே நண்பர்கள் இருக்கிறார்கள். நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது என்பது 18 வயதில் அதிகமாக இருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து 30, 40களில் மிகவும் குறைவான நேரத்தை தான் நண்பர்களுடன் செலவழிக்கிறோம் என்பதை இவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். திருமணம், குழந்தைகள் மற்றும் வணிகத்தில் கவனம் செலுத்துவது ஆகியவை காரணத்தால், நண்பர்களுடன் குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதிகமான நேரம் செலவழிக்க முடியாது என்பதை இது வெளிப்படுத்துகிறது. ஒருவகையில் இது உண்மையும் கூட!

நட்பில், நட்புக்காக, நண்பர்களுடன் நம்முடைய நேரத்தை செலவழிப்பது எப்போதும் வீண் போகாது.

அடுத்ததாக காதல், திருமணம், வாழ்க்கைத்துணை

ஆச்சரியமூட்டும் விதமாக, காதலன் அல்லது காதலி, திருமணமான பின்பு வாழ்க்கைத் துணையுடன் நாம் அதிகமான நேரத்தை செலவிடுகிறோம். இது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது, குறைவதில்லை! இருபதுகளின் மத்தியில் தொடங்கி வாழ்நாள் காலம் வரை வாழ்க்கை துணையுடன் தான் அதிகமாக நேரம் செலவழிக்கிறோம் என்பது இந்த அட்டவணை வெளிப்படுத்துகிறது.

நம் வாழ்க்கையின் அனைத்து முக்கியமான முடிவுகளையும் சேர்ந்து எடுக்கக்கூடிய ஒரு நபராக, வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! மனதார நேசித்து, திருமணம் செய்து கொள்வது வாழ்க்கையை மிக அழகாக்கும்.

தற்போது, பல திருமணங்கள், பல உறவுகள், பிளவு பட்டு வந்த நிலையிலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தம்பதிகள் இணைந்து வாழும் சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையை இந்த அட்டவணை குறிக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவு

என் குழந்தைக்காக தான் வாழ்க்கையே, குழந்தைக்காக தான் இவ்வளவு ஓடியாடி சம்பாதிக்கிறேன், எல்லாமே என் குழந்தைகளுக்காக தான் என்று தற்போதைய பெற்றோர்கள் கூறுகிறார்கள்! ஆனால் குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியுடன் கூடியதாக இருக்கிறது. இருபதுகளின் மத்தியில் அல்லது இறுதியில் திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமல்ல, முப்பதுகளில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் கூட தங்களுடைய 30களில் மட்டுமே குழந்தைகளுடன் அதிகமாக நேரம் செலவழிக்கிறார்கள். நாற்பதுகளில் குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் கணிசமாக குறைந்துவிடுகிறது.

உடன் பணியாற்றுபவர்களுடன் செலவழிக்கும் நேரம் என்று வரும் போது, 20களில் தொடங்கி, பணி ஓய்வு பெறும் 60 வரை ஒரே சீராக இருக்கிறது.

இந்த கிராஃப் அட்டவணைகள் வைரலாகப் பரவி வருகின்றன. பெரும்பாலும் வேலையிலேயே நேரம் செலவழிக்கிறோம் என்பது ஒரு பக்கம் தெளிவாக இருக்கிறது. அதே நேரத்தில், இந்த அட்டவணைகள் மிகவும் மேலோட்டமாக உள்ளன என்றும், வயதாகும் போது குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் ஏன் அதிகரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Family, Life threat, Life Tips