எளிமையான திருமணத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்: சேமிப்பின் அவசியம் உணர்த்திய கொரோனா தொற்று.. ஒரு அலசல்..

கொரோனா தொற்றானது எது முக்கியம் எது முக்கியம் இல்லாதது என்று கற்றுக் கொடுத்துள்ளது.

எளிமையான திருமணத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்: சேமிப்பின் அவசியம் உணர்த்திய கொரோனா தொற்று.. ஒரு அலசல்..
திருமணம்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 8:23 AM IST
  • Share this:
இந்தியாவில் திருமணங்கள் பெரும்பாலும், அதிக பணத்தை செலவு செய்து ஆடம்பரமாக நடத்தப்பட்டு வருகின்றன. என்னுடைய உறவினர் ஒருவர் இந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் ஊரடங்கின் காரணத்தால், அவரது திருமணமானது ஒத்திவைக்கப்பட்டது. திருமணத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது மிக குறைவான நபர்களே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

’ஒரு பெரிய திருமணத்தை நடத்துவதே எனது உறவினரின் திட்டமாகும்.இந்த திருமணத்திற்காக இரு தரப்பினரும் சுமார் ரூ.25 லட்சம் செலவாகும் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது இரு தரப்பினரும் எளிய திருமணத்தை நடத்த ஒப்பு கொண்டுள்ளனர்.

ஆகையால் நெருங்கிய விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே அழைப்பு தந்தது மட்டுமல்லாமல் முழு திருமணத்தையும் தற்போது சுமார் 7 முதல் 8 லட்சத்தில் நடத்த முடியும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். எனவே இந்த எளிய திருமணமானது இரு தரப்பினருக்கும் மொத்தம் 17 முதல் 18 லட்சம் சேமிக்க உதவும். மேலும் 17 லட்சம் என்பது ஒரு சிறிய தொகை அல்ல, இதனால் எனது உறவினர் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், இதில் இருக்கும் நல்லதை அவருக்கு காட்ட முயற்சித்தேன்’ என்று ஒருவர் தெரிவிக்கிறார்
மகத்தான சேமிப்பு :

எளிய திருமணத்தின் மூலம் அவர் பெற்ற ரூ.15 லட்சத்தை அவர் நீண்ட கால முதலீடு செய்தால் அதை அவர் மிகப் பெரிய தொகையாக மாற்ற முடியும். இப்போது 30 வயதுடைய அவர், அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த பணம் 8 சதவீத வருமானத்தில் முதலீடு செய்தால் உறுதியாக ரூ.1.5-க்கும் மேற்பட்ட கோடியாக மாறும். ஈபிஎஃப் (மற்றும் விபிஎஃப்), பிபிஎஃப், ஈக்விட்டி ஃபண்டுகள் போன்றவற்றின் மூலம் சேமிப்பிற்கு கூடுதலாக ஓய்வூதியத்தின் போது இது ஒரு எளிய தொகை.மேலும், பணம் ஈக்விட்டி ஃபண்டுகள் 10 முதல் 12 சதவிகிதம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, கடன் கொடுத்தால் 7 முதல் 8 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த ஜோடியின் வாழ்க்கையின் தொடக்கத்தில் உள்ள இந்த நிதியானது நீண்ட காலத்திற்கு அவர்களின் நிதி பாதுகாப்பிற்கு உறுதியான அடித்தளத்தை அளிக்கும்.

இருவரும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். எனவே, அவர்கள் ஒரு சிறிய தொகையை அவசர செலவுகளுக்காக ஒதுக்கலாம். இது பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வதற்காகவோ அல்லது அவர்களின் வீடுகளை அழகானதாக மாற்ற ஒதுக்கலாம். பொதுவாக, பண சேமிப்பு என்பது ஓய்வூதியத்திற்காக சேமிக்கப்படலாம் அல்லது எதிர்காலத்தில் ஒரு வீடு வாங்குவதற்காக கூட உதவும். ஆகையால், அவசரகாலத்திற்காக சில நிதியை ஒதுக்குவதும் ஒரு நல்ல யோசனையாகும்.தற்போதைய காலத்திற்கு ஏற்ற குறைந்த செலவு திருமணங்கள் :

கொரோனா நோய்தொற்று அனைவரது வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், திருமணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு அது பாடங்களையும் கொடுத்துள்ளது. அதில் பெரும்பாலானவர்களுக்கு பணத்தின் சேமிப்பானது தற்போதுள்ள நிலையில் தெரியாவிட்டாலும், ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களது எதிர்கால வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை சந்திக்க நேரிடக்கூடும். இந்திய திருமணங்களில் பெற்றோர்கள் பல ஆண்டுகளாக சேமித்து வைத்து, பின்னர் அவர்களின் குழந்தைகளின் திருமண செலவுகளுக்காக அதிக அளவு பணத்தை செலவிடுகிறார்கள்.இது மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோருக்கானது :

உங்களிடம் போதுமான ஓய்வூதிய சேமிப்பு இல்லையென்றால், சமூக அழுத்தம் காரணமாக உங்கள் குழந்தையின் திருமணத்திற்கு நிறைய பணம் செலவழிக்க திட்டமிட்டிருந்தால், தயவுசெய்து சேமித்த பணத்தை கொடுக்க வேண்டாம் உங்கள் குழந்தைகளுக்கு குறைந்த செலவு திருமணம் செய்து விடுங்கள்.

உங்கள் ஓய்வூதியத்திற்காக அந்த பணத்தை வைத்திருங்கள்:

இந்திய திருமணங்கள் பண ரீதியில் பண்பட்டு வருகிறது, இந்த நோய்த்தொற்று அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளது. மேலும் எது முக்கியம் எது முக்கியம் இல்லாதது என்று கற்றுக் கொடுத்துள்ளது. எனவே, தொற்றுநோயின் தாக்கத்தால் நீங்களோ அல்லது உங்கள் பெற்றோர்களோ பணத்தை சேமிக்கிறீர்கள் என்றால், இந்த நெருக்கடியான காலத்தில் உங்கள் சேமிப்பை ஒழுங்கமைக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்துங்கள்.

(இதன் எழுத்தாளர் StableInvestor.com இன் நிறுவனர்)
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading