உலகிலேயே இந்தியர்களுக்கு தான் நண்பர்கள் அதிகமாம் - ஆய்வில் தகவல்

மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் நட்பு என்றால் நேர்மை மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர்.

news18
Updated: June 29, 2019, 8:56 AM IST
உலகிலேயே இந்தியர்களுக்கு தான் நண்பர்கள் அதிகமாம் - ஆய்வில் தகவல்
உலகிலேயே இந்தியர்களுக்கு தான் நட்பு வட்டாரம் அதிகம்
news18
Updated: June 29, 2019, 8:56 AM IST
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியர்களுக்குதான் நட்பு வட்டாரங்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, மலேஷியா, சவுதி அரேபியா, லண்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்படுள்ளது.

ஆய்வானது நண்பர்களுக்குள்ளான உறவு, பகிர்தல், கலாச்சாரம், நடந்துகொள்ளும் முறை என பல தரப்பட்ட கோணத்தில்  நடத்தப்பட்டுள்ளது.


”உலகம் முழுவதும் நட்பு வட்டாரங்கள் வெவ்வேறு வகையான வடிவில் இருக்கலாம். ஆனால் அந்த உறவின் ஒரே நோக்கம் மகிழ்ச்சி. தங்களுடைய மகிழ்ச்சியைக் கொண்டாடவே இந்த உறவு என்பது மட்டும் இந்த ஆய்வில் வெளிப்படுகிறது “ என்கிறார் ஆராய்ச்சியாளர் எமி மௌசவி.இந்தியர்கள் சராசரியாக ஆறு நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறது ஆய்வு. சவுதி அரேபியாவில் 6.6 சதவீதமும் , லண்டனில் 2.6 சதவீதத்தினர் மட்டுமே அதிக நண்பர்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிக நண்பர்களை வளர்த்துக் கொள்ள தங்களுக்கும் ஆசை இருக்கிறது என மற்ற நாடுகளில் உள்ள மக்களில் 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...

”நண்பர்களை கண்டறிவது ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா போன்ற கிழக்கு, மேற்கு நாடுகளில் தங்களுடைய குணாதிசயங்கள் ஒத்து போவோரிடம் மட்டுமே நட்பு கொள்வார்கள். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பல வகையான, வித்தியாசமான கலாச்சாரம், குணம், மொழி கொண்ட நட்பு வட்டாரங்களையே விரும்புகின்றனர். உறவுகளுக்கு மாற்றாகவே நண்பர்களை காண்கின்றனர் “ என்று விளக்கம் அளிக்கிறார் அமித் தேசாய். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் பேராசிரியராக இருக்கிறார்.அதேபோல்  மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் நட்பு என்றால் வரும்போது நேர்மை மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர். அதேசமயம் 23 சதவீதம் எளிதில் நண்பர்களைக் கண்டறியும் வல்லமை கொண்டவர்களாக இருக்கின்றனர்.  மூன்று பங்கு இந்தியர்களுக்கு ’பெஸ்ட் ஃபிரெண்ட்’ என்று இருந்தால் அது எதிர் பாலினமாகவே இருக்கின்றனர் . அதேசமயம் அது ஒரே நாடு ஒரே மொழி , கலாச்சாரம் கொண்டவராக இல்லாமல் மற்ற நாடு, மொழி, கலாச்சரம் கொண்டவர்களையும் சிறந்த, நெருங்கிய நண்பர்களாகக் கொண்டிருக்கின்றனர் என்கிறது அந்த ஆய்வு.

ஒரு வேளை அவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும் பெற்றோர் காட்டும் தெரியாத நபரை திருமணம் செய்து கொள்வதைக் காட்டிலும் நன்கு புரிந்த நண்பரை திருமணம் செய்து கொள்ளவே விரும்புகின்றனர் என்கிறது ஆய்வு.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...