மாற்றுச் சாதியில் திருமணம் செய்ய ஆர்வம் காட்டும் வட இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

தென் இந்தியர்களைக் காட்டிலும் வட இந்தியர்களே மாற்றுச் சாதியில் திருமணம் செய்துகொள்ள அதிகமானோர் முன் வருவதாக ஆய்வு கூறுகிறது.

news18
Updated: June 18, 2019, 4:01 PM IST
மாற்றுச் சாதியில் திருமணம் செய்ய ஆர்வம் காட்டும் வட இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
மாற்றுச் சாதியில் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டும் இந்தியர்கள்
news18
Updated: June 18, 2019, 4:01 PM IST
மேட்ரிமோனியல் இணையதளங்களின் அடிப்படையில் வட இந்தியர்கள் மாற்றுச் சாதியில் திருமணம் செய்து கொள்வதில் அதிக விருப்பம் காட்டுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அதேசமயம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்களுடைய கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் செலுத்துவதையும் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்தியாவில் வாழும் இந்தியர்களைக் காட்டிலும் மாற்றுச் சாதியில் திருமணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை வெளிநாடுகளில் மிகக் குறைவு என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழகம் (University of Michigan) 3,13,000 இந்தியர்களின்,  மேட்ரிமோனியல் கணக்குகளை வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அந்த இணையதளங்களில் மாற்றுச் சாதியில் திருமணம் செய்து கொள்ள விருப்பமா என நேரடியாகவே கேள்வியை முன் வைப்பதாகக் கூறுகிறது.


”அரசாங்கம் மற்றும் சில சமூகக் குழுக்கள் சாதி மனப்பான்மைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் மக்கள் வாழ்வதற்குச் சாதியையும் முக்கியமாகக் கருதுகின்றனர். அதேபோல் இணைய தளங்களில் மேட்ரிமோனியல் கணக்கு உருவாக்கத்திற்கு முதல் கேள்வியாக நீங்கள் என்ன சாதி என்றே கேட்கப்படுகிறது” என அஷ்வின் ராஜதேசிகன் கூறுகிறார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

பாரம்பரியமாக இந்தியத் திருமணங்கள் சாதி, கல்வி , சொத்து மதிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. சமூகக் கட்டமைப்பில் உயர்வு தாழ்வு என்னும் பிரிவினை உண்டாகிறது. இதனால் பின் தங்கிய மக்களுக்குக் கண்ணியம், சுயமரியாதை மறுக்கப்படுவதுடன், கல்வி , வேலைகளும் மறுக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.

அந்த ஆய்வில் என்னதான் கல்வித் தரத்திலும், சொத்து மதிப்பிலும் உயர்ந்தவர்களாக இருந்தாலும், மணமக்களின் பெற்றோர்கள் படித்திருந்தாலும், சாதி அடிப்படையில் அவர்கள் பின் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர் பிற்படுத்தப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர்.

Loading...

அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர முயற்சிகளால் இன்றைய இளைஞர்களிடம் மாற்றுச் சாதியில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. அதேசமயம் தென் இந்தியர்களைக் காட்டிலும் வட இந்தியர்களே மாற்றுச் சாதியில் திருமணம் செய்துகொள்ள அதிகமானோர் முன் வருவதாகக் கூறுகிறது.

அதேபோல் தன் அம்மாவைப் பார்த்துக்கொள்ள, குடும்பத்திற்கு ஏற்ற பெண் வேண்டும் என்ற எண்ணங்களைக் கடந்து தனக்குப் பிடித்த, தன் குணத்திற்கு ஒத்துப்போகக்கூடிய பெண்ணையே அதிகமாகத் தேடுவதாகக் கூறுகிறது.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மாற்றுச் சாதியில் திருமணம் செய்யத் தயங்குவதாகவும். குறைவானோரே முன் வருவதாகவும் குறிப்பிடுகிறது. இது இந்தியாவில் வாழும் 23 சதவீத இந்தியர்களில் 14 சதவீதத்தினரே என்கிறது அந்த ஆய்வு.

இதையும் படிக்க :

கிரெடிட் கார்டு எடையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் மனிதர்கள்... அதிர்ச்சி தரும் ஆய்வு...!

எங்குப் பார்த்தாலும் இரட்டையர்களாக இருக்கும் அதிசயக் கிராமம் : இந்தியாவில் எங்கு உள்ளது
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...