Home /News /lifestyle /

திருமணமான பெண்களுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

திருமணமான பெண்களுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

திருமண வாழ்க்கை என்பது இரு மனங்கள் இணைந்து புதிய உறவுகளோடு சங்கமிக்கும் கலாச்சார அடையாளமாக உள்ளது. பலருக்கும் புதிய பாதையை உருவாக்கிக்கொடுக்கும் திருமணம், சிலருக்கு கசப்பானதாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, திருமணத்துக்கு பிந்தைய வாழ்வில் சில பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பேசவோ அல்லது களமாடவோ பலரும் தயாராக இல்லை என்பதால், சட்டம் அவர்களுக்கு ஒரு சில உரிமைகளை கொடுத்துள்ளது. அதன்மூலம், தங்களுக்கு தேவையான வாழ்க்கையை பெண்கள் தேர்தெடுத்துக்கொள்ள முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

திருமணத்துக்கு பிந்தைய வாழ்வில் சில பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பேசவோ அல்லது களமாடவோ பலரும் தயாராக இல்லை என்பதால், சட்டம் அவர்களுக்கு ஒரு சில உரிமைகளை கொடுத்துள்ளது.

திருமண வாழ்க்கை என்பது இரு மனங்கள் இணைந்து புதிய உறவுகளோடு சங்கமிக்கும் கலாச்சார அடையாளமாக உள்ளது. பலருக்கும் புதிய பாதையை உருவாக்கிக்கொடுக்கும் திருமணம், சிலருக்கு கசப்பானதாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, திருமணத்துக்கு பிந்தைய வாழ்வில் சில பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பேசவோ அல்லது களமாடவோ பலரும் தயாராக இல்லை என்பதால், சட்டம் அவர்களுக்கு ஒரு சில உரிமைகளை கொடுத்துள்ளது. அதன்மூலம், தங்களுக்கு தேவையான வாழ்க்கையை பெண்கள் தேர்தெடுத்துக்கொள்ள முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

புகுந்த வீடு : திருமணமாகி செல்லும்பெண்கள், அந்த வீட்டில் எத்தகைய சூழலிலும் வசிக்கும் உரிமை சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உண்டு. கணவர் இறந்துவிட்டால் அல்லது விவாகரத்துக்கு விண்ணபித்து இருந்தால், எங்கு தங்குவது என தேர்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. தான் இருப்பதற்கு சரியான இடம் ஒன்றை தேர்வு செய்யும் வரை புகுந்தவீட்டில் வசிக்கலாம். கால வரையறை என எதுவும் இல்லை. அவர்கள் விரும்பும் வரை அந்த வீட்டில் அவர்கள் வசிக்கலாம்.

விவாகரத்து : நம்பிக்கை துரோகம், உடல் மற்றும் உணர்ச்சி வன்முறை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்கள், யாருடைய ஒப்புதல் இல்லாமல் திருமண வாழ்க்கையில் விவாகரத்து கோருவதற்கு பெண்களுக்கு உரிமை உண்டு. இந்து திருமணச் சட்டம் 1995, பிரிவு 13ன் படி கணவருடைய ஒப்புதல் கூட தேவையில்லை. இந்திய தண்டனைச் சட்டம் 125ன் படி, வாழ்வதற்கு, குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு கணவரிடம் இருந்து நிதி உதவிகோர முடியும்.

சீதனத்தில் பங்கு : திருமணத்துக்குப் பிறகு, தன் வாழ்நாளில் பெறக்கூடிய அசையும், அசையா சொத்துக்கள் அனைத்துக்கும் பெண்கள் உரிமைகோர முடியும். திருமணத்தின்போது தான் கொண்டு வந்த பொருட்கள், குழந்தை பிறப்பின்போது கிடைத்த சீதனங்கள் எதுவாக இருந்தாலும் பெண்கள் அதனை சட்டப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, இந்து வாரிசு சட்டம் 1956, சட்டப்பிரிவு 14, இந்து திருமண சட்டம் 1955, சட்டப்பிரிவு 27 ஆகியவை வழிவகுக்கிறது. தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைச் சட்டம், சட்டப்பிரிவு 19ஏ -வின் கீழ் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

குழந்தை பாதுகாப்பு : கணவரை பிரிந்து செல்ல முடிவெடுத்த பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கு உரிமைகோர பெண்களுக்கு முழு அதிகாரமும் உண்டு. 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தையை தாங்கள் எடுத்துக்கொள்வதற்கு சட்டம் முழு முதல் அதிகாரத்தையும் பெண்களுக்கு வழங்குகிறது. சட்டப்பூர்வ உத்தரவுகள் இல்லாமல் கூட குழந்தையை தன்னுடன் எடுத்துச் செல்வதற்கு பெண்களுக்கு அனுமதி உண்டு. புகுந்த வீட்டிலேயே கூட தன் குழந்தையுடன் வசிக்கும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

கருக்கலைப்பு உரிமை : தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால் கணவர் அல்லது புகுந்த வீட்டின் அனுமதி ஏதும் இல்லாமல் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கருக்கலைப்பு தொடர்பான மருத்துவச் சட்டம் 1971 -ன் படி கர்ப்பம் தரித்து 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி வழங்குகிறது. ஒரு சில சிறப்பு வழக்குகளில் 24 வாரங்களுக்கு பிறகும் கூட கருக்கலைப்பு செய்ய நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன.

சொத்து உரிமை : இந்து வாரிசுரிமைச் சட்டம் 1955ல் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் பெண் குழந்தை, தனது தந்தையின் சொத்தில் உரிமைகோர முடியும். ஒருவேளை கணவர் முறையாக சொத்துகளை கொடுக்காதபட்சத்தில் பெண்களும் கணவரின் சொத்தில் உரிமைகோர முடியும். மேலும், முறையான விவாகரத்து இல்லாமல் கணவர் 2வது திருமணம் செய்து கொண்டால், அவரின் சொத்துக்கு உரிமைகோரும் முழு அதிகாரமும் முதல் மனைவிக்கு மட்டுமே உண்டு.

பாதுகாப்புக்கோரி புகார் : குடும்ப வன்முறையில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மீது பெண்கள் புகார் அளிக்கலாம். உடல், உடலுறவு, உணர்ச்சி, பொருளாதாரம் மற்றும் தரக்குறைவாக நடத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் கொடுக்கலாம்.

வரதட்சணைக் கொடுமை : வரதட்சணைக் கேட்டு தாய், தந்தையை புகுந்த வீட்டார் தொந்தரவு செய்தால், வரதட்சணைத் தடுப்பு சட்டம் 1961, சட்டப்பிரிவு 304 பி, இந்திய தண்டனைச் சட்டம் 498 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் கொடுக்க பெண்களுக்கு உரிமை உண்டு. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய காரணத்தால், நாடு முழுவதும் தற்போது திருமணத்தின் பெயரில் நிகழும் வரத்தட்சணைக் கொடுமைகள் பெருமளவில் குறைந்துள்ளன.

Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy sex Life, Relationship, Women safety

அடுத்த செய்தி