உங்கள் நண்பர் ஓரினச்சேர்க்கையாளர் எனில் நீங்களும் அவ்வாறு மாறிவிடுவீர்களோ என்ற பயம் உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனை

உங்கள் நண்பர் ஓரினச்சேர்க்கையாளர் எனில் நீங்களும் அவ்வாறு  மாறிவிடுவீர்களோ என்ற பயம் உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனை

மாதிரி படம்

உங்களுடைய பாலியல் பார்வை , பாலியல் கண்ணோட்டம் என்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. மற்றவர்கள் என்ன ஆசைபடுகிறார்கள் என்பதில் நீங்கள் அடங்கிப் போக மாட்டீர்கள்.

  • Share this:
கேள்வி  : என் நண்பர் ஓரின சேர்க்கையாளர், நான் ஓரின சேர்க்கையாளராக இருக்க விரும்பவில்லை. என்னை சுற்றியுள்ள சிலரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ளனர். இதனால் நானும் அவர்களைப்போல் மாறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

பதில் : பாலியல் பார்வைக்கும் செக்ஸுக்கும் நிறைய வித்தியாசங்கள். உள்ளன. நாம் எதை நோக்கி ஈர்க்கப்படுகிறோம் என்பது நம்முடைய பாலியல் நோக்கத்தை பொறுத்தது. அதாவது நான் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவது ஒரு பெண்ணுடனா, ஆணுடனா அல்லது திருநங்கைகளுடனா என்பது நம் விருப்பத்தை பொறுத்தது. உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற ஆசை நம் விருப்பத்தின் அடிப்படையில் செய்யக் கூடியது. அதேசமயம் பாலியல் என்பது நினைப்பதற்கு மேலாக பெரியது. அதற்கு பாலினம், பாலின வகைகள், பாலின ஈர்ப்பு இப்படி பரந்து விரிந்த, ஒரு குடைக்குள் அடங்கும் தன்மை கொண்டது.



உங்கள் கேள்வியிலிருந்து நான் புரிந்துகொண்டது. உங்களை சுற்றியுள்ளவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதால் என் பாலினமும் அவ்வாறு மாறிவிடுமோ என்பதுதான் உங்களுடைய பயமாக உள்ளது. என் புரிதல் சரி எனில்...நிச்சயம் நீங்கள் அவ்வாறு ஈர்க்கப்பட மாட்டீர்கள். உங்களுடைய பாலியல் பார்வை , பாலியல் கண்ணோட்டம் என்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. மற்றவர்கள் என்ன ஆசைபடுகிறார்கள் என்பதில் நீங்கள் அடங்கிப் போக மாட்டீர்கள்.

உங்கள் ஓரினச்சேர்க்கையாளர் நண்பரின் பெற்றோர்கள் ஹெட்ரோசெக்‌ஷுவல் (heterosexual) கொண்டவர்களாக இருக்கலாம். ஏன் நம் இந்திய சமூகத்தின் பெரும்பான்மையானோர் ஹெட்ரோசெக்ஸுவலைதான் கொண்டுள்ளனர். நாம் பார்க்கும் படங்கள், படிக்கும் புத்தகங்கள் என அனைத்தும் ஆண், பெண் காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதையும்தான் கற்பிக்கிறது. நம்மை சுற்றியுள்ளவர்களும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி உங்கள் நண்பர் எப்படி ஓரினச்சேர்க்கையாளராக மாறினார்..? நம்மை சுற்றியுள்ள விஷயங்கள், பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் நாம் நம் பாலியல் சார்ந்த வாழ்க்கையைதான் வாழ வேண்டும் என மறைமுகமாக திணிக்கிறது. வீட்டில் பெற்றோர்களும் அவ்வாறுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நிச்சயம் நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.



ஏன்...நீங்களும் ஹெட்ரோசெக்‌ஷுவலாக இருக்கவே விரும்புகிறீர்கள்..இதனால் உங்கள் நண்பர் உங்களால் ஈர்க்கப்படமாட்டாரா..? அவருக்கு அந்த பயம் இருக்காதா..? அவர் மாறமாட்டார் என்பதில் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ..அப்படித்தான் நீங்களும் மாற மாட்டீர்கள். நீங்கள் அவருடன் ஒரே வீட்டில் வசித்து ஒன்றாக இருந்தாலும் உங்களால் அப்படி மாற முடியாது.

படுக்கையில் உங்கள் துணை சோம்பேறியாக இருக்கிறாரா..? சுயநலமாக இருக்கிறாரா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!

உண்மையில் ஹெட்ரோசெக்‌ஷுவல் மக்களுக்கு மத்தியில் ஹோமோசெக்‌ஷுவல் நபர்கள்தான் பல அவமானங்களையும், பாகுபாட்டையும் சந்திக்கின்றனர். அவர்களை மற்றவர்களைப் போல் வாழ கட்டாயப்படுத்துகிறார்கள். நீங்கள் நினைப்பதுபோல் ஒரு ஹெட்ரோசெக்‌ஷுவலை ஹோமோசெக்‌ஷுவலாக மாற்றுவதும், ஹோமோசெக்‌ஷுவலை ஹெட்ரோசெக்‌ஷுவலாக மாற்றுவதும் எளிது எனில் இந்நேரத்திற்கு நம் ஆட்கள் ஹோமோசெக்‌ஷுவலாக இருக்கும் நபர்களை அழைத்து ஹெட்ரோசெக்‌ஷுவலாக மாற்ற ஒரு முகாமே நடத்தி அதில் வெற்றி கண்டிருப்பார்கள்.



ஆனால் அது முற்றிலும் நடக்காத காரியம். அது எந்தவிதத்திலும் எடுபடாது. எனவே தேவையில்லாமல் கவலைப்படாதீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஓரினச்சேர்கையாளர்களாக இருப்பதால் தானும் அவ்வாறு மாறிவிடுவேனோ என்ற பயம் தேவையற்றது. அவர்களுடன் எப்போதும் போல் இயல்பாகவே பழகுங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published: