இயற்கையாக மனிதன் அனுபவிக்கக் கூடிய பேரின்பம் தான் செக்ஸ். ஏறக்குறைய எல்லோருமே வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் இந்த பேரின்பத்தை அனுபவித்து விடுகின்றனர். துரதிருஷ்டவசமாக இதில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கின்றனர். அதாவது இளமைப் பருவத்தை தாண்டியும் கூட பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காதவர்களாக இருக்கின்றனர்.
சில சமயம், 40, 50 வயதில் கூட முதல் முறையாக பாலியல் உறவு கொள்ளும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படலாம். ஆனால், இத்தனை காலம் நாம் இதை செய்ததே இல்லையே, இனி நம்மால் இது முடியுமா என்ற சந்தேகம் அவர்களது மனதில் எழக் கூடும். அந்த சந்தேகத்திற்கான தெளிவான பதில் இந்தச் செய்தியில் இருக்கிறது. பாலியல் உறவு கொள்வதற்கு அதிக வயது என்பது ஒரு தடையில்லை. இவ்வளவு நாள் தாமதமாகிவிட்டதே என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை. வாழ்வின் எந்த வயதிலும் முழுமையான பாலியல் இன்பத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.
கொஞ்சம் மாற்றம் இருக்கலாம்
40 வயதில் நீங்கள் முதல்முறையாக பாலுறவு கொள்ளும் போது, உங்களுக்கான அனுபவம் சற்று வேறு மாதிரியானதாக இருக்கலாம். 20 வயதில் உடம்பு ஒத்துழைப்பு கொடுப்பதை போன்ற சௌகரியம் கிடைக்காமல் போகலாம். ஆனால், முழுமையான திருப்தி என்பது உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.
காதலுக்கும், காமத்திற்கும் எந்தவொரு வரையறையும் கிடையாது.
கன்னித்தன்மை என்பது ஒரு மாயை
கன்னித்தன்மை என்பது மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடு தான். குறிப்பாக, கன்னித்தன்மை என்பது பெரும்பாலும் பெண்களோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது முன்பெல்லாம் பாவச் செயலாக கருதப்பட்டது. ஆனால், இப்போதெல்லாம் மக்கள் தங்களுக்கான விருப்பம் எதுவென தாங்களே தேர்வு செய்கின்றனர். சமூகத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. இத்தகைய சூழலில் வயது ஆகிவிட்டதே என நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
இந்த செக்ஸ் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இந்த குறைபாடு ஏற்படுமாம்..!
செக்ஸ் வைத்துக் கொள்ளாத பலர் இருக்கின்றனர்
உங்களுக்கு நேரடியாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், சமூகத்தில் பலர் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாதவர்களாக இருப்பார்கள். சிலருக்கு அதன் மீது நம்பிக்கை இருக்காது. சிலர் பாலியல் உறவுக்காக பிறரை அணுகுவதில் மிகுந்த தயக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆகவே உங்களைப் போலவே பலர் இருக்கின்றனர்.
இது மிக இயல்பானது
40 வயதிலும் கன்னித்தன்மையுடன் இருப்பது இயல்பான விஷயம் தான். இதுவரையிலும் நீங்கள் திருமணம் செய்யவில்லை அல்லது யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என்றால், அதுகுறித்து கவலை தேவையில்லை. இதனால், மற்றவர்கள் முன்னால் நீங்கள் தலைகுனிந்து நிற்க வேண்டியதில்லை. இது முற்றிலும் உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆகவே, செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள மனதளவிலும், உடல் அளவிலும் நீங்கள் தயாராகிவிட்டால், அச்சங்களை தகர்த்து, உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.