ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகள் அடிக்கடி வருகிறதா..? சில ஆலோசனைகள் உங்களுக்காக..!

முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகள் அடிக்கடி வருகிறதா..? சில ஆலோசனைகள் உங்களுக்காக..!

Love | காதல்

Love | காதல்

முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகள் வருகிறது எனில் இன்னும் நீங்கள் அவரை காதலிக்கிறீர்கள் என்ற அர்த்தம் அல்ல, மாற்றாக அவரை மறக்க நீங்கள் இன்னும் முயற்சிக்க வேண்டும் என்பதே காரணம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

காதலில் பிரிவு என்பது ஒரு முழு சவாலாக உணரும் வேலை என்பதால் பிரிந்து செல்வது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. உங்கள் முன்னாள் காதலர்/ காதலியை விட்டு நீங்கள் பிரிய நேர்ந்தால் அவர்களின் நினைவுகளை மறப்பது கடினமாகிறது. அதற்காக சிலர் அந்த இடத்தில் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறார்கள். இந்த எண்ணங்கள் மிகவும் ஆரோக்கியமற்றவை, ஆனால் முழுமையாக உறவு முறிந்த பின்னரே புதிய உறவை தேடி செல்ல வேண்டும். நீங்கள் அதை எப்படி செய்வது? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

சில நேரங்களில் உங்கள் மூளை அறிந்த விஷயத்தை இதயம் ஏற்றுக்கொள்வதில்லை :

உங்கள் புதிய காதலருடன் இருக்கும் போதும் உங்கள் முன்னாள் காதலரை பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் அவரை மறக்கவில்லை என்றே அர்த்தம். ஆனால் இது இன்னும் நீங்கள் அவரை காதலிக்கிறீர்கள் என்ற அர்த்தம் அல்ல, மாற்றாக அவரை மறக்க நீங்கள் இன்னும் முயற்சிக்க வேண்டும். முதலாவதாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நீங்கள் முன்பு நேசித்தவர் இனி உங்கள் வாழ்க்கையில் இருக்க மாட்டார்.

எனினும் உங்கள் கடந்த காலத்தை மறப்பது ஒரே இரவில் நடக்காது, ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற நினைவுகளை தூக்கி சுமப்பது துயரத்தை தரும் என்பதால், எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்வின் அடுத்த திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களில் கவனம் செலுத்துங்கள், விரைவில், நீங்கள் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள் :

உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். ஏற்றுக்கொள்ள வேண்டியதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன், உங்கள் அச்சங்கள் நீங்கி விடும். உங்கள் புதிய துணையுடன் நேரம் செலவிடுங்கள். அவர்கள் செய்யக்கூடிய அனைத்து புதிய விஷயங்களையும் கவனியுங்கள். அவருடன் ஒன்றாகப் பார்க்கக்கூடிய எல்லா இடங்களையும் பற்றி சிந்திக்கத் தொடங்குங்கள். இது உங்கள் இதயத்தை உடைக்கும், ஆனால் நீங்கள் எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொண்ட பின்னர் இது உங்களை கடந்த காலத்தில் இருந்து மீட்டெடுக்கும். ஒரு கட்டத்திற்குப் பிறகு, தேவையற்ற பழைய நினைவுகள் உங்களை அதிகம் பாதிக்காது.

விழிப்புணர்வாக இருங்கள் :

உங்களது நிலைமையை மாற்ற சுய விழிப்புணர்வுடன் இருங்கள். சுய விழிப்புணர்வு என்பது எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றி பாசிட்டிவ் எண்ணங்களை தரும். மற்றவர்களை விட சிறந்தவராக இருப்பது, உங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்த உதவும். நீங்கள் விரும்பாத எண்ணங்களை அழிக்க இது உங்களுக்கு உதவும். நினைவுகளை மறப்பது கடினம் என நீங்களே தேவையற்ற விஷயங்களை கற்பனை செய்யாதீர்கள். உங்கள் கற்பனைகள் உண்மையானவை அல்ல என்பதை அங்கீகரிப்பதே சுய விழிப்புணர்வின் குறிக்கோள். எப்போதும் சோர்வாக இருக்காமல் உற்சாகமாக இருங்கள். அதற்காக உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்

உங்களை சுற்றியுள்ள யதார்த்தமான விஷயங்களை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் உலகத்தை உருவாக்கும் சக்தி உங்கள் மனதிற்கு உண்டு, உங்கள் முன்னாள் காதலரை பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்திக்கிறீர்கள் என்றால், எப்படி உங்களால் ஒரு வாழ்க்கையை சந்தோசமாக வாழ முடியும். அவரை பற்றி நினைப்பதை எப்படி நிறுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதனை கேளுங்கள்.

சன்னி லியோன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் ஹோலி புகைப்படங்கள் வைரல்...!

இந்த கட்டத்தில், உங்கள் எண்ணங்களை மாற்றத் தொடங்க வேண்டும். உங்கள் முன்னாள் காதலரை பற்றி நீங்கள் நினைக்கும் தருணம், அங்கேயே நின்று, உங்களைச் சுற்றியுள்ள விஷயத்தைப் பார்த்து நிகழ்கால சந்தோஷத்தை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என உங்களை நீங்களே வினவுங்கள். உங்கள் ஐந்து புலன்களையும் இயக்கவும், நீங்கள் காண்பது என்ன? நீங்கள் எதை கேட்டீர்கள்? நீங்கள் எந்த வாசனையை உணர்கிறீர்கள்? என ஒவ்வொன்று குறித்தும் சிந்தித்து செயலாற்றுங்கள். குறிப்பாக நம்மால் முடியாது எதுவும் இல்லை என்கிற மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளத்தை விட்டு வெளியேறுங்கள்

முன்னாள் காதலரை மறக்கும் விஷயத்தில் மற்றவர்கள் கூறுவதை கேட்பதை விட நீங்களே உங்களை மாற்ற சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் அதை அனுமதித்தால் கண்டிப்பாக உங்கள் முன்னாள் காதலர்/ காதலியை மறந்து ஒரு அழகான வாழக்கையை உங்களாலும் வாழ முடியும். உங்கள் கடந்த காலம் உங்களுக்கு சரியாக இல்லாதபோது அதனை ஏன் உங்கள் வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்து வருத்தப்பட வேண்டும்? என நீங்களே சற்று யோசித்து பாருங்கள்.

உங்களது முன்னாள் காதலரை பிரிந்து விட வேண்டும் என நீங்கள் முடிவு செய்தால் அவரை வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக வெளியேற்றிவிட்டு நிம்மதியாக இருங்கள். அவருடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்ளுங்கள், எந்த ஒரு பொய்யான உறவிலும் இருக்க முயற்சிக்க வேண்டாம். சமூக வலைத்தளங்களில் அவரை பின்தொடர்வதை நிறுத்துங்கள், மேலும் அவர்கள் நண்பர்களுடனும் பேசுவதை நிறுத்துங்கள்.

First published:

Tags: Love breakup