உங்களின் முன்னாள் காதலி அல்லது காதலனை பற்றியே நினைத்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!
உங்களின் முன்னாள் காதலி அல்லது காதலனை பற்றியே நினைத்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!
காதல்
உங்களின் ஆழ்மனதில் இருந்து கொண்டு எந்தவித புது செயலையும் உங்களை செய்ய விடாமல் தடுத்து கொண்டிருக்கும் எண்ண அலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடக்க முயற்சியுங்கள்.
காதல் என்கிற அழகான ஆழமான உறவில் பயணம் செய்ய புரிதல் மிக அவசியம். புரிதலற்ற காதல் உறவுகள் மிக விரைவிலேயே பிரிந்து விடும். நாம் நினைப்பது போன்று காதல் உறவு அவ்வளவு எளிதல்ல. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு காதல் உறவு என்பது மிக எளிதாக தெரியக் கூடும். ஆனால் அந்த உறவை நிலைத்திருக்க வைக்க இருவரும் சமமான அளவு முயற்சி எடுத்தால் மட்டுமே நீண்ட கால உறவாக மலரும்.
சில காதல் உறவுகளில் பிரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். இதனால் காதல் முறிவு ஏற்படும். இந்த வேதனையை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது என்பது தான் உண்மை. இருப்பினும் உங்கள் காதலி அல்லது காதலனை பற்றியே நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் விரைவில் அதை கடந்தாக வேண்டும் என்று அர்த்தம். இதற்கான வழிகள் பற்றி இந்த பதவில் பார்ப்போம்.
நினைவுகள் :
உங்களின் முன்னாள் காதலி அல்லது காதலன் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை பற்றியே நினைத்து கொண்டிருப்பதால் இங்கு எதுவும் மாற போவதில்லை. உங்களின் ஆழ்மனதில் அவரை பற்றிய நினைவுகள் இருந்தாலும் மெல்ல மெல்ல அவற்றை மறக்க முயற்சியுங்கள். அல்லது அந்த நினைவுகளை சிறந்தவையாக ஏற்று கொண்டு நடைபோடுங்கள்.
முதல் காதல் :
பலருக்கும் முதல் காதலில் பிரிவு ஏற்பட்டால் அதை நிச்சயம் மறக்க முடியாது. காரணம் அவர்கள் விட்டுச்சென்ற அழகிய தருணங்கள் தான். மேலும் உங்களின் வாழ்க்கையில் மிக முக்கிய நபராக அவர் இருந்துள்ளார். இதனாலே ஒருவரை மறப்பது கடினமாக இருக்கும். காதல் நினைவுகளை சுகமானதாக கடந்து சென்றால் மட்டுமே அவரை பற்றிய எண்ணங்கள் தோன்றி உங்களை காயப்படுத்தாது.
அடுத்த நிலை :
உங்களின் ஆழ்மனதில் இருந்து கொண்டு எந்தவித புது செயலையும் உங்களை செய்ய விடாமல் தடுத்து கொண்டிருக்கும் எண்ண அலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடக்க முயற்சியுங்கள். உங்களின் முன்னாள் துணையை பற்றி நினைத்து கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். அடுத்த நிலையை நோக்கி செல்லுங்கள்.
காலம் கடந்த பிறகு இழந்த காலத்தை உங்களால் திருப்பி கொண்டு வர இயலாது. எனவே காதல் முறிவு ஏற்பட்ட சில நாட்களுக்கு பிறகும் நீங்கள் அப்படியே இருக்க கூடாது. உங்கள் வாழ்க்கையில் புது புது முயற்சிகளை செய்ய தொடங்குங்கள். இது ஒருவரை பற்றிய நினைவுகளை மறக்கடிக்க உதவும் சிறந்த வழி.
எழுதுங்கள் :
உங்களின் எண்ணங்களை ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு நோட்டில் எழுத பழகுங்கள். இப்படி செய்து வருவதால் மன அழுத்தம் குறைந்து இலகுவாக உணர்வீர்கள். மேலும் உங்களின் கனவுகளை நினைவாக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்குவீர்கள்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.