பொறாமை என்பது ஒரு உறவையே அழித்துவிடும். அது நட்பாக இருந்தாலும் சரி, காதல், திருமணம், சகோதர, சகோதரி உறவு என எதுவாக இருந்தாலும் சரி. குறிப்பாக காதல் அல்லது திருமண உறவில் பொறாமை என்பது இருந்தால் அது நிச்சயம் அந்த உறவையே நாசப்படுத்திவிடும். பொதுவாக, இதுபோன்ற காதல் உறவில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பொறாமைப்படுவார்கள் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.
பொறாமை என்பது எப்போது ஏற்படுகிறது. காதலனோ காதலியோ மற்றவர்களோடு பேசும் போதும், அவர்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திலும் ஏற்படுகிறது. அதேபோல பிற காதல் ஜோடிகளையோ அல்லது திருமணமான ஜோடிகளையோ பார்த்து நம்மால் அப்படி ஏன் இருக்க முடியவில்லை என யோசிப்பது ஆகியவை இருவரிடையே பிரச்சனையை அதிகப்படுத்துகின்றன.
நாம் பாதுகாப்பின்மையாக உணர்ந்தால், எப்போது நம்முடைய இணை உறவு அல்லது நண்பர் மற்றவர்களுன் இருப்பதைப் பார்த்தாலும், நாம் பொறாமைப்படத் தொடங்கிவிடுகிறோம். மேலும் பொறாமை குணத்தால் ஒரு உறவுக்குள் சண்டைகள் அதிகரிக்கும். இருப்பினும், இந்த பொறாமை உறவை சமாளிக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினாலே போதும், உங்கள் உறவில் காதல் மலரும்.
1. அங்கீகாரம் :
நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள், உங்கள் துணை செய்யும் சில விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
2. பட்டியல் :
உங்களைத் தொந்தரவு செய்வதாக நீங்கள் கண்டறியும் அனைத்து பாதுகாப்பின்மை விஷயங்களையும் பட்டியலிடுங்கள். அதன் மூலம் உங்கள் உறவில் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.
3. தன்னம்பிக்கை :
உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதில் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறீர்களோ அந்த விஷயத்திற்கான தீர்வினை காணுங்கள்.
4. பாதுகாப்பின்மையின் ஆதாரம் :
மிக அமைதியாக அமர்ந்து சிந்திக்கவும். ஆழமாக யோசித்து உங்கள் பாதுகாப்பின்மைக்கான மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிக்கவும்.
5. உணர்வுகளை பகிர்தல் :
உங்கள் துணையுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுங்கள். அவை உங்களைத் தொந்தரவு செய்வது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது..!
6. சுய பாதுகாப்பு பயிற்சி :
சுய பாதுகாப்பை வளர்த்துக் கொள்ள பயிற்சி செய்யுங்கள். உங்கள் உணர்ச்சி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
7. நினைவாற்றல் கலை :
நீங்கள் நினைவாற்றல் கலையை பயிற்சி செய்யும் போது, உங்கள் எண்ணங்கள் மீது கவனம் செலுத்த உங்கள் மனதை தயார்படுத்திக்கொள்ள முடியும். இந்த பயிற்சி மூலம் நீங்கள் யாரையும் விமர்சிக்க கூடாது என பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
8. சிகிச்சை :
உங்களால் இந்த பொறாமை குணத்தை கைவிட முடியவில்லை என்றால் ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது சிறந்தது. ஓரளவு பொறாமை குணம் என்பது ஒரு உறவில் ஆரோக்கியமானது. ஒருவர் உங்கள் உறவை இழக்க பயப்படுகிறார் என்பதை அறிவது எப்போதும் நல்லது. ஆனால் அது அளவுக்கு மீறி போகும் போது தான் உறவை அழிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Relationship Fights, Relationship Tips, Toxic Relationship