Home /News /lifestyle /

‘நெகட்டிவ் வைப்’ பிரண்ட்ஷிப்பை புறந்தள்ளுவது எப்படி? ஓர் அலர்ட் பதிவு!

‘நெகட்டிவ் வைப்’ பிரண்ட்ஷிப்பை புறந்தள்ளுவது எப்படி? ஓர் அலர்ட் பதிவு!

நல்ல நண்பர்கள் நீங்கள் உயர்வதையும், உயர்வதற்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள்.

நல்ல நண்பர்கள் நீங்கள் உயர்வதையும், உயர்வதற்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள்.

நல்ல நண்பர்கள் நீங்கள் உயர்வதையும், உயர்வதற்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள்.

நண்பர்களாக இருப்பவர்கள் ஒரு கால கட்டத்தில் துரோகிகளாக மாறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆடுகளின் உடையில் இருக்கும் ஓநாய் என்பதுபோல் நம்முடன் கூடவே இருந்து, நமக்கு எதிராக திரும்புவர்கள் உண்மையில் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு இயல்பாகவே இரு முகங்கள் இருக்கும். ஆரம்பத்தில் அவர்களுடைய செயல்பாடுகள் இனிமையாக தோன்றினாலும், கடைசியில் மிகப்பெரிய சிக்கலில் தள்ளிவிட்டுவிடுவார்கள்.

இதனால் மன ஆரோக்கியம், உறவுகள் உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து பக்கங்களும் நரக்கத்துக்கு சென்றுவிடும். இத்தகைய நண்பர்களுடன் பழக்கம் வைத்திருப்பது ஆபத்து என்பதால், உங்கள் நண்பர் வட்டத்தில் இருக்கும் அத்தகையவர்களை முதலில் அடையாளம் கண்டு, விலக்கி வைத்துவிடுவது சிறந்தது.

சூழ்நிலைகளை பொருட்படுத்தாமை:

உங்கள் சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மெசேஜ் செய்வது, கால் செய்வது அவருடைய பழக்கமாக இருக்கும். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள். நீங்கள் செய்யும் வேலைகள் குறித்து ஒருபோதும் அக்கறை கொள்ளாமல், தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புகள் உள்ளன.

புண்படுத்துதல்:

உங்கள் கடினமான நேரத்தை புரிந்து கொண்டு மென்மையாக நடந்து கொள்பவர்கள் உண்மையான நண்பர்கள். ஆனால், உங்களின் வார்த்தைகளுக்கு காது கொடுக்காமல், புரிந்து கொள்ளாமல் செயல்படுபவர்கள் ஆபத்தானவர்கள். உங்கள் உணர்வுகள் புண்படும் விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். நேரடியாக அல்லது மறைமுகமாக உடனிருந்து கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபடும் அவர்கள், உங்களின் உணர்ச்சிகளையும், சூழ்நிலைகளையும் பொருட்படுத்தவே மாட்டார்கள். நீங்கள் புண்படுகிறீர்கள், கவலை கொள்கிறீர்கள் என தெரிந்தாலும், அதனை நிறுத்தாமல் செய்து கொண்டே இருப்பார்கள்.

Must Read | இனி மழைக்காலம்… உங்க கார பத்திரமா பாத்துங்கோங்க!! இதோ சில டிப்ஸ்..!

சோர்வடைதல்:

உங்கள் இருவருக்கும் இடையே நல்ல கனெக்டிவிட்டியே இருக்காது. எப்போது பேசினாலும், சோர்வாக இருப்பதுபோல் மட்டுமே உணர்வீர்கள். இப்படி இருந்தால், இருவருக்கும் இடையில் நேர்மறையான தாக்கம் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்குள் நெகடிவ் வைப்ரேஷனைக் கடத்துகிறார். அவர்களின் உரையாடல்கள் எப்போதும் வலி மற்றும் பிரச்சனைகளை சுற்றியே இருக்கும். எல்லா விஷயங்களையும் எதிர்மறை கண்ணோட்டத்துடன் அணுகும் அவர்கள், குறை சொல்வதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

புறம்பேசுதல்:

மற்றவர்களைப் பற்றி அதிமாக உங்களிடம் பேசும் நபர்கள் ஆபத்தானவர்கள். பிறரை மறைமுகமாக விமர்சிக்கும் அவர், அவர்கள் எப்போதும் கீழானவர்கள் என்பதை உங்களுக்குள் விதைத்துக் கொண்டே இருப்பார். பார்ட்டி உள்ளிட்ட நேரங்களில் உங்களோடு இணைந்துகொள்ளும் அந்த நபர், பிறரை தரக்குறைவாக பேசி அந்த நேரத்தை ஜாலியாக என்ஜாய் செய்வார். அதேநபர் மற்றொரு இடத்திற்கு செல்லும்போது உங்களைப் பற்றியும் தரக்குறைவாக பேசுவார்.

போட்டி மனப்பான்மை:

நல்ல நண்பர்கள் நீங்கள் உயர்வதையும், உயர்வதற்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். ஆனால், விஷம எண்ணம் கொண்டவர்கள் உங்களின் வளர்ச்சியை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். உங்களை கீழே இழுப்பதற்கு அல்லது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள். இத்தகைய எண்ணம் உடையர்வர்களை நீங்கள் அடையாளம் கண்டு, நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் உடனடியாக விலகலைக் கடைபிடிப்பது ஆரோக்கியமானது.
Published by:Archana R
First published:

Tags: Friends, Friendship, Healthy Lifestyle

அடுத்த செய்தி