Home /News /lifestyle /

ஓரினச்சேர்க்கையாளர் என வீட்டில் சொல்ல தயக்கமா..? எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வு

ஓரினச்சேர்க்கையாளர் என வீட்டில் சொல்ல தயக்கமா..? எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வு

மாதிரி படம்

மாதிரி படம்

பல பெற்றோர்கள் ஆரம்பத்தில் தடையாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதைப் பற்றி புரிந்துகொண்டு பிள்ளைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

கேள்வி : ஒரு மகனாக பழைமைவாதம் பேசும் பெற்றோரிடம் நீங்கள் என் நெருங்கிய நண்பன் என நினைத்துக்கொண்டிருப்பவன் என் காதலன் என்றும், நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் எப்படி கூறுவது..? பிரச்னைகளை தவிர்க்க எப்படி வீட்டை விட்டு வெளியேறுவது..?

பதில் : முதல் விஷயம் நீங்கள் பொருளாதார ரீதியாக வளமாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறீர்களா அல்லது பெற்றோரை நம்பி இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுங்கள். பல பெற்றோர்கள் ஆரம்பத்தில் தடையாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதைப் பற்றி புரிந்துகொண்டு பிள்ளைகளை ஏற்றுக்கொள்கின்றனர். இருப்பினும் இந்தியக் குடும்பங்களில் ஓரினச்சேர்க்கை என்பதும் எதார்த்தமான விஷயமாக மாறுவதற்கு பல காலம் எடுக்கும்.

இரண்டாவதாக.. இதைப் பற்றி பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசிவிடுவதே நல்ல காரியம். இந்த விஷயத்தை எவ்வளவு பொருமையாக , பக்குவமாக , இனிமையாகக் கூறினாலும் நிச்சயம் இது அவர்களுக்கு ஆச்சரியம் என்பதைவிட அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும். எனவே மனதளவில் என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தைரியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நிதானம் மிக அவசியம்.அதேபோல் முதலில் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை ஆழமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இதனால் எத்தனை அவமானங்களை சந்தித்தாலும் அது பெரிதளவில் பாதிக்காது. எல்லாவற்றிற்கும் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கலாம், உங்கள் முன் கண்ணீர் விட்டு அழலாம், திட்டலாம், அடிக்கலாம் இப்படி எது வேண்டுமென்றாலும் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். எனவே இதையெல்லாம் தாங்கும் பக்குவமும், தைரியமும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கெல்லாம் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் நண்பன் என நினைத்துப் பேசியவரை உங்கள் காதலன் என சொல்லும்போது அவரை உங்கள் பெற்றோர் வெறுக்க ஆரம்பிக்கலாம். அவரை திட்டலாம். இதனால் உங்களுடன் மீண்டும் பழகுவதையோ, சுற்றுவதையோ அனுமதிக்காமல் போகலாம்.

துணை உங்களை ஏமாற்றுகிறார், பொய் சொல்கிறார் எனில் அவரது செல்ஃபோன் அழைப்புகளை ஆடியோ டிராக்கிங் செய்வது சரியா..?

இப்படி பல விஷயங்கள் அரங்கேறலாம். எதுவாயினும் உங்கள் ஆண் நண்பருடனான நெருக்கத்தை குறைத்துவிடாதீர்கள். ஏனெனில் அவரிடமிருந்து மட்டும்தான் உங்களுக்கான மன அரோக்கியத்தையும், மன நிம்மதியையும் அளிக்க முடியும். பெற்றோர் இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியேறி இயல்பு நிலைக்கு வரும்போது மீண்டும் பொருமையாக இதைப்பற்றி கூறி  ஒப்புக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் இந்த வாய்ப்புக்கு நீண்ட காலம் எடுக்கும். உடனே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டார்கள். எனவே அவர்களை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு அவர்களின் இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருங்கள். அதுவரை வீட்டில் பரபரப்புகளுக்கும், சண்டைக்கும் பஞ்சமிருக்காது. எதுவாயினும் அதுவரை உங்கள் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.முதலில் இதை ஒட்டுமொத்த குடும்பத்திடமும் சொல்வதை விட உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அம்மாவிடமோ, சகோதர சகோதரியிடமோ, உறவினர் அல்லது அப்பா இப்படி யாராவது ஒருவரிடம் முதலில் கூறுங்கள். பின் அவர்கள் சில யோசனைகளை தரக்கூடும். அவர்களும் புரிந்துகொண்டால் உங்களுக்கு துணை நிற்க்கலாம். பின் சில நாட்கள் அப்படியே விட்டுவிட்டு அப்பா அல்லது அம்மாவிடம் கூறுங்கள். இதனால் இருவருக்கும் ஷாக் இல்லாமல் இருக்கும்.  பெரிதாகக்கூடிய பிரச்னை கொஞ்சம் குறையும். சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இதுவே ஒரே வழி. என்னுடைய இந்த வார்த்தைகள் மூலம் உங்களுடைய பலம் என்ன என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்..!

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy sex Life, Homosex, Relationship, Sexual Wellness

அடுத்த செய்தி