பிறர் மனம் புண்படாமல் NO சொல்வது எப்படி?

மாதிரி படம்

நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சில வழிகளில் மறைமுகமாக உங்களின் எண்ணத்தை அவர்களுக்கு உணர்த்திவிடலாம்.

  • Share this:
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களது மனம் புண்படாமல் உணரவைப்பது என்பது கொஞ்சம் சங்கடமான சூழல். டேட்டிங் அழைப்பது அல்லது உங்களை விரும்புகிறார் என்றால், அது உங்களுக்கு பிடிக்காதபோது, தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய மனதில் தேவையற்ற ஆசையை வளர்த்து, அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நீங்கள் சந்திப்பது என்பது மன வலியையும், மன அழுத்தத்தையும் கொடுத்துவிடும். நேரடியாக சொல்லமுடியாவிட்டாலும், ஒரு சில வழிகளில் மறைமுகமாக உங்களின் எண்ணத்தை அவர்களுக்கு உணர்த்திவிடலாம்.

வெளிப்படையாக பேசுதல்

பிடிக்காத ஒருவர், மீண்டும் மீண்டும் உங்களை அணுகுவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. ஏதாவதொரு தருணத்தில் நீங்கள் அவர்களை அழைத்து புரியம்படி பக்குவமாக உங்களின் எண்ண ஓட்டத்தை எடுத்துக்கூறுங்கள். நீங்கள் அழகாக இல்லை, எனக்கு பிடிக்கவில்லை என கூறி காயத்தை ஏற்படுத்த வேண்டாம். மாறாக, உங்களுடனான இந்த உறவு எனக்கு பொருந்தாது, நான் உங்களை அப்படி நினைக்கவில்லை என கூறிவிடுங்கள். Soft Approach நல்ல பலனைக் கொடுக்கும்.வேலையை முன்னிலைப்படுத்துதல்

உங்களுக்கு பிடிக்காதவரை தவிர்ப்பதற்கு, வேலையை காரணம் காட்டுவது எளிமையான வழியாகும். வெளியே செல்ல அழைக்கும்போது, டேட்டிங் கூப்பிடும்போது வேலையை பிரதானப்படுத்தி நேரமில்லை எனக் கூறிவிடுங்கள். தொடர்ந்து இதுபோன்ற அழைப்புகளை நிராகரிக்கும்போது ஒரு கட்டத்தில் அவர் உங்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அவர்களை விட வேலையே முக்கியம் என்றவாறு உங்கள் பேச்சு இருக்கட்டும்.

 

முடிவில் உறுதியாக இருத்தல்

உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் அதில் தெளிவாக இருங்கள். உங்களை கவரும் நோக்கில் எப்போது பேச்சு எடுத்தாலும், அதனை கவனமாக திசைதிருப்பி விடுங்கள். ஒருவேளை உங்கள் நண்பராக இருந்தால், அவர் உங்களின் நண்பராகவே தொடர வேண்டும் என்பதை ஏதாவதொரு நிகழ்வை சுட்டிக்காட்டி கூறிவிடுங்கள். பிடிக்காத ஒருவருடான வாழ்க்கையை எந்தவொரு சந்தர்பத்திலும் தேர்தெடுக்க அனுமதிக்க வேண்டாம்.தொடர்புகளை தவிர்த்தல்

உங்களை நேசிக்க விரும்புவரின் தொடர்பை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். தொலைபேசி, தனியாக செல்ல வேண்டிய சூழல் இருந்தால் அதனை முற்றிலுமாக நிராகரித்துவிடுங்கள். கண்களால் பார்த்துக் கொள்வது, ஒரே இடத்தில் இருவர் மட்டும் நீண்ட நேரமாக இருப்பது ஆகியவை அவர்கள் அட்வான்டேஜ் எடுப்பதற்கு ஏதுவாக அமையும்.

Work From Home : வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான டிப்ஸ்!

பிறரை பற்றி பேசுதல்

நேசிக்க விரும்புபவர் இருக்கும்போது, அவர் முன்னால் பிறரைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள். மற்றொருவரை நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்பதை உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ பேசுங்கள். இது நிச்சயம் அவர்களின் எண்ண ஓட்டத்தில் புயலைக் கிளப்பி, உங்களை அணுகுவதை தவிர்த்துவிட வழிவகுக்கும். உங்களின் எண்ண ஓட்டத்தை மறைமுகமாக உணர்த்துவதற்கு மிகச்சிறந்த வழி.

 
Published by:Sivaranjani E
First published: