வாழ்க்கை இப்பவும் அழகுதான்...விவாகரத்திற்குப் பின் வாழ்க்கையை புதிதாகத் தொடர வழிகள்..!

இருவரின் ஒப்புதலோடு நடந்த விவாகரத்து என்றாலும் அதிலிருந்து மீள்வது கடினம்தான். இருப்பினும் மீண்டு எழுவதே வாழ்க்கையின் அழகு.

வாழ்க்கை இப்பவும் அழகுதான்...விவாகரத்திற்குப் பின் வாழ்க்கையை புதிதாகத் தொடர வழிகள்..!
விவாகரத்து
  • News18
  • Last Updated: November 6, 2019, 7:01 PM IST
  • Share this:
இருவரின் ஒப்புதலோடு நடந்த விவாகரத்து என்றாலும் வாழ்ந்த நினைவுகளை மனதிலிருந்து அகற்ற முடியாது. அது கெட்டதாக இருந்தாலும் நல்லதாக இருந்தாலும் மறக்க முடியாத நினைவுகளை தடம் பதித்திருக்கும். இருப்பினும் அதிலேயே உறைந்துவிடாமல் மீண்டு எழுவதே வாழ்க்கை. அப்படி மீண்டும் பிறப்பெடுக்கும் வாழ்க்கையாக விவாகரத்திற்குப் பின் எப்படி தொடங்குவது என்று பார்க்கலாம்.

ரியாலிட்டியை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள் : மறக்க வேண்டும் என்பதை விட இதுதான் அப்பட்டமான உண்மை என்பதை ஏற்றுக்கொள்ள பக்குவப்படுங்கள். இந்த சமூகம், பெற்றோர், அலுவலகம் என்ன சொல்லும் என்பதை கொஞ்சமும் சிந்தனையில் ஏற்றாதீர்கள். எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுத்துங்கள். அந்த முடிவுகள் உங்களுடையதாக இருக்கவேண்டும்.
ஆசைகளை இனியும் கட்டுப்படுத்தாதீர்கள் : சிறு வயது ஆசை, இதையெல்லாம் செய்ய வேண்டும், இங்கெல்லாம் போக வேண்டும் என நீண்ட நாட்களாக போட்டு வைத்த விருப்பப் பட்டியல் என எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய சிறந்த தருணம் இதுவே. எனவே உடனே திட்டமிட்டு செயல்படுத்தத் துவங்குங்கள்.

வல்லுநர்களின் உதவி : நிச்சயம் இந்த மாற்றம் மனதளவில் அழுத்ததை உண்டாக்கும். ஒரே இரவில் அனைத்தையும் சரி செய்துவிடவோ, மறந்துவிடவோ முடியாது. எனவே நீங்கள் அதற்கான முயற்சிகள் எடுத்தாலும் மனநல மருத்துவர்களை அணுகி ஆலோசனைகள் பெறுவது நல்லது. மனதில் ஆழமாக வாட்டி வதைக்கும் விஷயங்களை கொட்டித் தீர்க்கவும் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.

மாற்றம் ஒன்றே மாறாதது : உங்களுக்கும் துணைக்குமான ஒற்றுமையான விஷயங்கள், பொழுதுபோக்கு விஷயங்களை முற்றிலும் தவிறுங்கள். அவை மீண்டும் நினைவலைகளை எழுப்பலாம். அதற்கு மாறாக புதிய விஷயங்களில் ஈடுபாடு செலுத்துங்கள். திருமண வாழ்க்கையில் இழந்த நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அன்பு செலுத்துங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வதற்கான பொறுப்பு உங்களுடையது.

சமூக அக்கறை : இன்று நிறைய தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கங்கள் உள்ளன. அங்கெல்லாம் உங்களுக்கான இடம் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே இன்றே அவர்களோடு கை கோர்த்து சமூகத்திற்காக தொண்டாற்றுங்கள். சமூக ஆர்வலர்களோடு நல்ல தொடக்கத்தை தொடங்குங்கள். இதனால் கிடைக்கும் மன ஆறுதல் வேறு எதிலும் கிடைக்குமா என்றால் சந்தேகமே..!

இறுதியா டேட்டிங் : விவாகரத்திற்குப் பின் உடனே டேட்டிங்கா என தோன்றலாம். ஆனால் அதை உங்கள் மனம் விரும்புகிறது எனில் தயங்காமல் சிறந்த துணையைத் தேர்வு செய்து டேட்டிங் செல்லுங்கள். இதனால் புதிய நபர்களை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைப்பது மனதிற்கு நல்ல மாற்றமாக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்