Home /News /lifestyle /

பாலியல் வன்கொடுமைகளை குறைக்க என்ன செய்யலாம்? கலந்துரையாடல்கள், போராட்டம், கட்டுரைகள் மட்டுமே போதுமா..?

பாலியல் வன்கொடுமைகளை குறைக்க என்ன செய்யலாம்? கலந்துரையாடல்கள், போராட்டம், கட்டுரைகள் மட்டுமே போதுமா..?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அடிப்படையில் பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க சரியான தீர்வு என்ன என்று கேட்டால் யாராலும் ஒரு 450 வார்த்தையில் கூட தெளிவாக சொல்ல முடியாது.

கேள்வி : சில உண்மைகளை வெளிப்படையாக நீங்கள் பேசுவதை மிகவும் பாராட்டுகிறேன். அதேபோல் நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியுமா..? அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன..? நான் பல பாலியல் வன்கொடுமை செய்திகளை கவனிக்கிறேன். ஆனால் அதை எப்படி குறைப்பது என்பது பற்றி யாரும் கலந்துரையாடுவது இல்லை. அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது..எனவே அதைப்பற்றிய ஒரு பதிவை நீங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

பதில் : நிச்சயமாக.. இது எந்தவித தீர்மானத்தின் அடிப்படையிலும் பேசவில்லை.. ஆனால் கன்னியத்துடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய கற்றலை, கவனித்தலை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். நீங்கள் சொல்வது போல் பாலியல் குற்றங்கள் , வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த குற்றங்களை விட பன்மடங்கு அதை ஒழிப்பது பற்றியும், குறைப்பது பற்றியும் கலந்துரையாடல்கள், கட்டுரைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதனால் அந்த வழக்குகள் அதிக கவனம் பெறப்பட்டுள்ளன. செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைன் தளங்கள், செய்தி சேனல்கள் , ரேடியோ ஏன் கூட்டங்கள் கூட போட்டு இதைப்பற்றி கலந்துரையாடல் செய்கின்றனர். எனவே நான் நேர்மையாக சொல்கிறேன் ஒருவேளை நீங்கள் இதுபோன்ற கலந்துரையாடல்களை கவனிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். நீங்கள் எதையும் பரந்த பார்வையுடன் கவனிப்பதில்லை எனில்...இனியும் அப்படி இருக்காதீர்கள் பிளீஸ்..இது ஒரு தனிப்பட்ட அல்லது ஒருவருக்குள் நடக்கும் பாலியல் இன்பம் மற்றும் நெருக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு நெடுவரிசையாகும். அதேபோல் இதுபோன்ற தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என்று கெஞ்சக் கூடிய அளவிற்கு சாதாரண விஷயம் அல்ல. அதோடு இதை வெறும் கலந்துரையாடலாக மட்டுமே நிகழ்த்திவிட்டு நகரும் விஷயமும் அல்ல. பாலின அடிப்படையிலான வன்முறை நீதி, குற்றம், மற்றும் தண்டனை-பழிவாங்கும் / திருத்தும் செயல்கள் பற்றிய விவாதங்களை மட்டுமல்லாமல், மிகவும் ஆணாதிக்க, பாலியல் பழமைவாத சமூகத்தில் சமூக மேம்பாடுகளையும் தனிநபர் மற்றும் கூட்டு உளவியலையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

அடிப்படையில் பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க சரியான தீர்வு என்ன என்று கேட்டால் யாராலும் ஒரு 450 வார்த்தையில் கூட தெளிவாக சொல்ல முடியாது. அந்த மேஜிக்கை யாராலும் நிகழ்த்த முடியாமல் இருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாலியல் குற்றங்கள் நடக்க இரண்டு அல்லது மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும் என்று சுருக்கவும் முடியாது. அதற்கு தனி நபரின் உளவியல் ரீதியான காரணம் இருக்கலாம், கூட்டு உளவியல் அல்லது நாம் இருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகமாகவும் இருக்கலாம். எனவே பாலின அடிப்படையிலான வன்முறை என்னும் நுணுக்கமாக சிக்கலைத் தீர்ப்பதற்கு பல முனைகளில் நடவடிக்கை தேவைப்படுகிறது. தீவிர மாற்றம் தேவைப்படுக்கிறது.ஒரு நெருக்கமான பயிற்சியாளர் மற்றும் பாலியல் கல்வியாளர் என்ற முறையில், நான் என்ன செய்ய முடியும் எனில் சம்மதம் என்னும் வார்த்தைக்கான புனிதத்தைக் கற்றுக்கொடுப்பதாகும். மனிதனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் சம்மதம் மிக முக்கியமானது. ஒவ்வொரு 'இல்லை' என்னும் வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள்..அது எவ்வளவு அற்பமானதாக தோன்றினாலும், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தீவிரமாக ஆரோக்கியமான சம்மதக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான வேலையில் இறங்குங்கள்.

ஒருவரின் எல்லைகள், தனிப்பட்ட இடம், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், மேலும் அனுமதி கேட்பதில் பெருமிதம் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் கேளுங்கள். உங்கள் பங்குதாரர் "நான் இருக்கலாமா?" என்று கேட்பதைக் காட்டிலும் கவர்ச்சியான வார்த்தை எதுவும் இருக்க முடியாது. எதை செய்வதற்கு முன்பும் - நீங்கள் ஒருவருக்கொருவர் தெரிந்திருந்தாலும், நீங்கள் திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட நிராகரிப்பைக் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.

Sexual Wellness : திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது சரியா..?

மனிதர்களாகிய அனைவரும் நம் விருப்பத்தேர்வுகள் உண்டு. அனைவருக்கும் வெவ்வேறு மனநிலைகள், வெவ்வேறு செக்ஸ் இயக்கங்கள் உண்டு. நாம் பலவற்றிற்கு தகுதியுடையவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திறந்த மற்றும் நேர்மையான தொடர்பு, பரஸ்பர மரியாதையுடன் உறவுகளில் ஆரோக்கியமான சம்மத கலாச்சாரத்தை வளர்ப்பதில் திறந்த மனதுடன் செயல்படுங்கள். ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், அனைவரையும் பாரபட்சமின்றி அவர்கள் யார், எந்த பாலினம் என எந்த அடையாளத்தையும் பொருட்படுத்தாமல், குறைந்தபட்சம் அதே மரியாதையோடு நடந்து கொள்ளுங்கள். அதுவே இந்த நாட்டுக்காக நீங்கள் செய்யும் அதிகபட்ச நன்மை.
Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy sex Life, Rape case, Relationship, Sexual Wellness

அடுத்த செய்தி