Home /News /lifestyle /

உங்களை பிறர் உருவ கேலி செய்யும் போது அவர்களுக்கு நீங்கள் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்..?

உங்களை பிறர் உருவ கேலி செய்யும் போது அவர்களுக்கு நீங்கள் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்..?

உருவ கேலி

உருவ கேலி

உங்களுக்கு யார் என்றே தெரியாத, அதாவது உங்களுடன் தொடர்பில்லாதவர்கள் உங்கள் உடலைப் பற்றி கருத்துத் தெரிவித்தால், முதலில் உங்கள் சொந்த உடலின் மீது 'கான்ஃபிடென்ட்' ஆக இருங்கள்.

குண்டு கத்திரிக்காய், ஒல்லி பிச்சான், பனை மரம், குட்ட வாத்து போன்ற வார்த்தைகள் நம்மைச் சுற்றியுள்ள மக்களால் நிகழ்த்தப்படும் பிறரைப் பற்றிய சில தீர்ப்புகள் ஆகும். அம்மாதிரியான ஆட்கள் "பேச்சு சுதந்திரம்" என்கிற காரணியின் கீழ் இதையெல்லாம் தங்களது உரிமை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை; ஒரு உரிமையும் அல்ல. அதன் பெயர் - உருவக்கேலி, அதாவது பாடி ஷேமிங்!

உங்களை பற்றி இப்படி முட்டாள்தனமாக பேச யாருக்குமே உரிமை இல்லை. மேலும் மக்கள் எப்போதுமே உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள், ஏனென்றால் இன்று நாம் வாழும் உலகில், மனிதர்கள் 'டிஸ்டர்ப்டு' ஆகவும், 'நெகட்டிவ்' ஆகவும் மாறிக்கொண்டே போகிறார்கள். அவர்களையெல்லாம் மாற்ற முடியாது, ஆனால் உங்களை நீங்களே 'ஃப்ரீ பேர்ட்' ஆக மாற்றிக்கொள்ளலாம்.

அதாவது உருவக்கேலிகளுக்கு ஆளாகி, காயப்பட்டு அழுவதற்குப் பதிலாக, கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை மண்டைக்குள் ஏற்றி நீங்கள் எதற்குமே கவலைப்படவில்லை என்பதை பிறருக்கு தெரியப்படுத்துங்கள். அதாவது உங்கள் சொந்தங்களும், மற்ற நபர்களும் உங்களை பாடி ஷேமிங் செய்யும் போது எப்படி நடந்துகொள்வது என்பதற்கான சில குறிப்புகள் இதோ!

தெரியாதவர்கள் பாடி ஷேமிங் செய்யும் போது...

உங்களுக்கு யார் என்றே தெரியாத, அதாவது உங்களுடன் தொடர்பில்லாதவர்கள் உங்கள் உடலைப் பற்றி கருத்துத் தெரிவித்தால், முதலில் உங்கள் சொந்த உடலின் மீது 'கான்ஃபிடென்ட்' ஆக இருங்கள், பின்னர் குறிப்பிட்ட உருவக்கேலியை புறக்கணிப்பது உங்கள் ஸ்டைல் அல்ல என்றால், "இப்படி இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது, நன்றி" என்று சொல்லுங்கள், அல்லது "உங்க வேலையை மட்டும் பார்க்கலாமே!" என்றும் கூறலாம்.உங்களை பற்றி கமெண்ட் செய்யும் நபரை கோபப்படுத்தாமல் சேதப்படுத்த, " நீங்கள் என்னைப்பற்றி கருத்து தெரிவிப்பதை நான் பாராட்டுவதாய் இல்லை, இது என் உடல், என் விருப்பம்." என்று கூறலாம். ஒருவேளை அந்த நபர் ஒரு ஆக்ரோஷமான ஆளுமையாகத் தோன்றினால், அவரையும் அவரின் கருத்தையும் புறக்கணிப்பது நல்லது, ஏனென்றால் அத்தகையவர்கள் சின்ன விஷயத்தை பெரிதாக்கவே பார்ப்பார்கள், நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

ஸ்மார்ட்டான நபர்களிடம் இருக்கும் தனித்தன்மைகள் என்ன..?

வீட்டில் உள்ளவர்கள் பாடி ஷேமிங் செய்யும் போது...

பாடி ஷேமிங் விடயத்தில் வெளியில் இருப்பதை விட வீட்டிற்குள் இருக்கும் 'கல்பிரேட்களே' இங்கு அதிகம். உங்களின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது பிற உறவினர்கள் உங்களை "குண்டு" என்று அழைத்தால், பரவாயில்லை. அதை சமாளிக்க நீங்கள் முதலில் உங்களை நேசிக்க வேண்டும், எந்தவொரு கேலியையும் மண்டைக்குள் கொண்டு செல்லக்கூடாது. மேலும் பதிலடி தரும் வண்ணம், "நான் இருக்கும் விதம் எனக்குப் பிடிக்கும், உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று கூறலாம். சிலர் பாராட்டுகிறோம் என்று நினைத்து உருவக்கேலி செய்வார்கள். சொல்லி முடிக்கும் வரை பலருக்கும் அது தவறு என்று கூட தெரியாது. இது போன்ற சொந்தகளுக்கு, நீங்கள் சொல்வது பாராட்டு அல்ல என்பதை மறைமுகமான கருத்துக்களால் தெரியப்படுத்தலாம், எதிர்காலத்தில் அவர்கள் இப்படி சொல்லாமல் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம்.ஆன்லைன் வழியாக பாடி ஷேமிங்..

இணையம் ஒரு கொடிய உலகமாக இருக்கலாம். வெறுப்பை உமிழ ஆன்லைன் ஒரு சிறந்த இடமாக இருக்கலாம். இந்த இடத்தில் நீங்கள் பதிலளிக்காமல் இருப்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் ஆன்லைன் உலகில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதை நாம் அறிவோம். பெரும்பாலும் நம்மை காயப்படுத்தவே மக்கள் முனைவார்கள். எனவே பதில் அளிப்பதை தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் உண்மையிலேயே பதிலளிக்க விரும்பினால் சர்காஸத்தை கையில் எடுங்கள்! வேறு யார் மீதும் அல்ல, உங்கள் மீதே அந்த அம்பை எய்திடுங்கள்! உங்களைப் பற்றி நீங்கள் கேலி செய்யும் போது, பாடி ஷேமிங் செய்ய நினைப்பவர்களுக்கு கன்டென்ட் கிடைக்காது.

உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வரை எந்தவொரு உடல் சார்ந்த நிறைகுறைகளும் பெரிதல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எடையைக் குறைப்பது முக்கியம் என்று நீங்கள் நினைத்தால், அதில் வேலை செய்ய தொடங்குங்கள்; மற்றவர்களுக்கு விளக்கமளிப்பதை நிறுத்துங்கள். உங்களுக்காக எடையை குறைக்கவும், மற்றவர்களுக்காக அல்ல!

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Body positivity, Body Shaming

அடுத்த செய்தி