ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் மனைவிக்கு செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஒருவித பயம் உள்ளதா..? தாம்பத்தியத்தை தவிர்க்கிறாரா? என்ன காரணம்?

உங்கள் மனைவிக்கு செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஒருவித பயம் உள்ளதா..? தாம்பத்தியத்தை தவிர்க்கிறாரா? என்ன காரணம்?

மாதிரி படம்

மாதிரி படம்

அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களுடைய மனநிலையை மாற்ற அழுத்தம் கொடுக்கக் கூடாது. ஒருவர் விருப்பத்துடன் செக்ஸ் இன்பத்தைக் கொடுப்பதும் பெறுவதும் மிகவும் முக்கியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேள்வி : எனக்கு புணர்ச்சியில் மிகவும் ஆர்வம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் என் மனைவி அதற்குத் தயாராக இல்லை.. என்ன செய்யலாம்..?

பதில் : மன்னிக்கவும்...இதை கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும் இந்த இடத்தில் உங்கள் மனைவியின் எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடத்திலிருந்து பார்க்கும் போது இந்த சூழ்நிலை சற்று சங்கடமான விஷயம்தான்.ஒருவேளை மனைவி உங்களை இப்படி கெஞ்ச வைப்பதில் மகிழ்ச்சி காணலாம். ஆனால் அதை செய்வதற்கு நீங்கள் சங்கடமாகவும், அசௌகரியமாகவும் உணரலாம்.

அப்படியில்லை எனில் சிலர் இப்படியான செக்ஸ் புணர்ச்சிகளில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அசௌகரியமாக உணரலாம். சில கற்பனைகளில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். எனவே அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களுடைய மனநிலையை மாற்ற அழுத்தம் கொடுக்கக் கூடாது. ஒருவர் விருப்பத்துடன் செக்ஸ் இன்பத்தைக் கொடுப்பதும் பெறுவதும் மிகவும் முக்கியம். அதில் இருவருடைய விருப்பம் முக்கியமானது. அப்போதுதான் அதில் முழுமையான திருப்தி கிடைக்கும்.

வாழ்க்கை என்பது நாம் பெற நினைக்கும் அனைத்தையும் கொடுத்துவிடாது. நீங்கள் எதை கொண்டிருக்கிறீர்களோ அதில் இன்பம் கொள்ளுங்கள். வாழ்க்கையில் சில விட்டுக்கொடுத்தல் அவசியம். குறிப்பாக மற்றவர்களும் நம் வாழ்க்கையில் இருக்கும் போது கூடுதல் கவனம் அவசியம். ஒருவேளை நீங்கள் புணர்ச்சி இன்பத்தில் தீவிரமாக இருந்தால் அதில் விருப்பம் உள்ள மற்ற எவரையேனும் தேர்வு செய்யுங்கள். ஆனால் அது உங்கள் மனைவிக்கு தெரிந்திருக்க வேண்டும். அவருடைய சம்மதத்துடன் செய்யுங்கள். ஆனால் அவர் அசௌகரியமாக நினைக்கும் விஷயத்தை செய்யச் சொல்லி வர்புறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.

உடல் எந்த நிறத்தைக் கொண்டிருந்தாலும் அந்தரங்கப் பகுதிகள் மட்டும் கருமையாக இருக்க என்ன காரணம்..?

இல்லையெனில் மனைவிடம் ஒருமுறை வெளிப்படையாக பேசிப்பாருங்கள். அவர் உண்மையிலேயே அசௌகரியமாக உணர்கிறாரா..? அதற்கு என்ன காரணம்..? அவ்வாறு புணர்வதில் அவருக்கு பயம் , பதட்ட உள்ளதா என்பதை பேசி ஆராயுங்கள். அவரை வெளிப்படையாக பேச வையுங்கள். அவரிடம் இதுகுறித்து பேசும் முன் நீங்கள் அதைப் பற்றிய முழுமையான தெளிவுடன் தயாராகிக்கொள்ளுங்கள். பின் அவற்றை பற்றி எடுத்துக்கூறி புரிய வையுங்கள்.

ஆனால் உங்களுடைய பேச்சு ஒருப்போதும் அவரைக் காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது. அப்படி அவர் புரிந்துகொண்டால் நல்ல விஷயம். ஒருவேளை அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை எனில் நீங்கள் விட்டுவிடுங்கள். இதுதான் வாழ்க்கை..இனி இப்படித்தான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருவருக்கு சில விஷயங்கள் மீது இருக்கும் பயம், பதட்டத்தை மாற்ற முடியாது. ஆனால் அந்த பயம் ஏன் என்பதையும் புரிந்துகொள்ள முடியாது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sivaranjani E
First published:

Tags: Anal sex, Sex Fantasies