புதிய உறவை தொடங்க பழைய காதல் நினைவுகள் தடையாக உள்ளதா..? உளவியல் காரணங்களும்..தீர்வுகளும்...

காதல் தோல்வி | Love failure

நல்லதோ சரியோ..எதுவாயினும் பழைய காதலிலிருந்து வெளியேறுவதே நல்லது. அதற்கு உங்களை நீங்களே தயார் படுத்துக்கொள்ள வேண்டும்.

  • Share this:
கேள்வி : நான் இன்று வரை புது உறவில் இணைய தயராக இல்லை. அதற்கு என் மனமும் ஒத்துழைக்கவில்லை..இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..?

பதில் : இப்போது இல்லையா அல்லது எப்போதும் வேண்டாம் என்ற எண்ணம் தோன்றுகிறதா இப்படி எதுவானாலும் அது உங்களின் கடந்த கால உறவைப் பொறுத்தது. அந்த உறவு எப்படி முறிவுக்கு வந்தது என்னும் அனுபவத்தைப் பொறுத்தே உங்கள் எண்ணங்களும் மாறுபட்டிருக்கும். முன்னாள் உறவு நீங்கள் எதிர்பாராமல் நிகழ்ந்தது எனில் நிச்சயம் நீங்கள் புதிய நபர்களை சந்திக்க வேண்டும், டேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். காதல் வலி இன்னும் ஆறாத காயமாக இருந்தால் நிச்சயம் உங்களால் வேறொரு புதிய உறவில் இணைய மனம் இருக்காது. எனவே இந்த போராட்டத்திலிருந்து விலக வேண்டுமெனில் அவரை நீங்கள் மறந்துதான் ஆக வேண்டும். புதிய வாழ்க்கை உங்களுக்கு மன அமைதியை தரலாம்.ஒருவேளை ஒருவரும் ஒத்துப்போய் காதல் முறிவை முடிவு செய்தீர்கள் எனில், அவ்வறு செய்தது சரி என்றும் முழுமையாக நினைக்கிறீர்கள் எனில், உங்கள் மனம் சில நாட்கள் இப்படியே இருந்து பார்க்கலாம் என நினைக்கலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியுடனும் இருக்கலாம். இதனாலும் புதிய வாழ்க்கைக்குள் நுழய மனமில்லாமல் இருக்கலாம்.

எனவே உங்கள் மனநிலை என்ன என்பதற்கான பதில் உங்களிடத்தில்தான் உள்ளது. ஆனால் ஒரே ஒரு அறிவுரையை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...நீங்கள் இரவு மீந்துபோனா உணவை மறுநாள் ஃபிரெஷாக சமைக்கும் உணவுடன் சேர்த்து சமைத்தால் அந்த உணவு ருசி தராது. அதுபோலத்தான் நீங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது அதில் பழைய காதல் அனுபவங்களை சேர்க்காதீர்கள்.எந்த நினைவுகளாக இருந்தாலும் அதை இந்த காதலுடன் பொருத்திப் பார்க்காதீர்கள். பழைய காதலன்/ காதலியிடம் பல விஷயங்களை ரசித்திருக்கலாம். ஆனால் அதை இந்த காதலன்  காதலியிடமும் எதிர்பார்க்காதீர்கள். மாறாக அந்தக் காதலில் என்னவெல்லாம் மிஸ் செய்தீர்களோ..என்னவெல்லாம் செய்ய நினைத்தீர்களோ அதை இந்தக் காதலில் செய்யுங்கள். காதல் மேலும் அழகாகும். இல்லையெனில் மீண்டும் புதிய காதலும் முடிவுக்குத்தான் வழிவகுக்கும்.

முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகள் அடிக்கடி வருகிறதா..? சில ஆலோசனைகள் உங்களுக்காக..!

 

ஒருவேளை உங்களுக்கு புதிய உறவில் நுழைய பதட்டம் , பயம் இருப்பின் அதற்கு சிறந்த வழி டேட்டிங் செய்வதுதான். இந்த பதட்டம் இருக்கும் வரை உங்களால் எந்த உறவிலும் ஈடுபட முடியாது. எனவே பழைய காதலால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் உண்டான பயத்தையும், பதட்டத்தையும் சரி செய்தே ஆக வேண்டும். இதற்கு டேட்டிங் என்னும் கடலில் குதித்து நீந்தி கற்றுக்கொள்ளுங்கள். இதனால் பயம், பதட்டம் போகும். அவ்வாரு டேட்டிங் செய்பவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் சிந்தனைகள், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். புதுபுது நபர்களை சந்தியுங்கள். இதனால் மனதில் உள்ள பழைய காதலையும் மறக்க முடியும்.நல்லதோ சரியோ..எதுவாயினும் பழைய காதலிலிருந்து வெளியேறுவதே நல்லது. அதற்கு உங்களை நீங்களே தயார் படுத்துக்கொள்ள வேண்டும். அதை இன்று வரை செய்யாததே உங்களுடைய மிகப்பெரிய தவறு. என்னுடைய கருத்து என்னவெனில் பழைய காதலிலிருந்து முற்றிலும் வெளியேறிய பின் அந்த நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டு பின் புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும். அந்த புதிய வாழ்க்கையில் எந்த மிச்ச மீதியும் இருக்கக் கூடாது...பொருட்கள், புகைப்படங்கள் உட்பட....

அப்படி உங்களால் அந்த காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை, அல்லது ஒரு குறிப்பிட்டல் மனநிலைக்கு வர முடியவில்லை. இப்படி நான் தனியாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நினைக்கிறீர்கள் எனில் நல்ல விஷயம் தனியாகவே இருங்கள். இதில் ஒரே வழி உங்களை நீங்களே நேசிப்பதுதான். அதேசமயம் காதலிலிருந்து தப்பிக்க இதுதான் ஒரே வழி என்பதும் தவறான முடிவு. நம்மை நாமே நேசிப்பது என்பது நல்ல விஷயம்தான். அதேசமயம் காதலுக்கு பயந்து சொல்கிறீர்கள் எனில் அதை எதிர்கொள்வதே சிறந்த வழி. எனவே நன்கு ஆழமாக சிந்திந்து உங்களுக்கு எத்ய் தேவை என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள். அவசரமில்லை.

 

 
Published by:Sivaranjani E
First published: