இந்த லாக்டவுனில் காதல் பிரேக்அப் ஆகிவிட்டதா..? மனம் உடையாதீர்கள்...இதை கொஞ்சம் படியுங்கள்

புகைப்படங்களை பார்ப்பது, வாட்ஸ்அப் மெசேஜுகளை மீண்டும் படிப்பது , அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை பார்ப்பது போன்ற விஷயங்கள் இழப்பின் வலியை அதிகரிக்கும்.

இந்த லாக்டவுனில் காதல் பிரேக்அப் ஆகிவிட்டதா..? மனம் உடையாதீர்கள்...இதை கொஞ்சம் படியுங்கள்
மாதிரி படம்
  • Share this:
எது நடந்தாலும் அது நன்மைக்கே என சொல்வது போகிற போக்கில் சொல்வதல்ல..அதை ஆழமாக உணர்ந்தால்தான் அதன் நன்மையை நீங்கள் அடைய முடியும். அப்படி நீங்களும் இந்த காதல் பிரேக்அப் என்பது ஏதோ ஒரு நன்மைக்காகத்தான் என நினைத்து உங்களை திடமாக்க இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.


வெளிப்படையாக இருங்கள் : நடந்து முடிந்ததை முடிந்ததாகவே விட்டுவிடுங்கள். அதேபோல் உங்கள் சோகங்களை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்காமல் வெளிப்படையாக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.


தனிமையை அகற்றுங்கள் : உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உறவினர்கள் , நண்பர்களுடன் நேரம் ஒதுக்கி அதிலிருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள். இத்தனை நாள் தவிர்த்த மெசேஜ், நட்பு, உறவுகளுக்கு தற்போது முக்கியதுவம் கொடுங்கள். முடிந்தால் முன்னாள் காதலன், காதலியுடன் பேசுவது கூட ஆறுதல் அளிக்கலாம்.நினைவுகளுடன் ஒதுங்கியிருங்கள் : புகைப்படங்களை பார்ப்பது, வாட்ஸ்அப் மெசேஜுகளை மீண்டும் படிப்பது , அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை பார்ப்பது போன்ற விஷயங்கள் இழப்பின் வலியை அதிகரிக்கும். எனவே இந்த செயல்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.


உளவு பார்க்காதீர்கள் : பிரிந்தவுடனும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என ஃபேஸ்புக், ட்விட்டர் என போய் ஸ்டேடஸ் பார்ப்பது , அவர்களின் நண்பர்களுடன் பேசி அவர்களை தெரிந்துகொள்ள நினைப்பது போன்ற உளவு பார்க்கும் விஷயங்களையும் முற்றிலும் தவிருங்கள். வேண்டாம் என முடிவு செய்த விஷயத்தை கிளறுவதில் பிரயோஜனமில்லை.


உங்களின் மாற்றமே எதிர்கால நன்மை. உங்களை சுற்றி இருப்பவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். எனவே மாற்றத்தை நோக்கி பயணித்தாலே உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் நன்மை தானாக கிட்டும்.
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading