RELATIONSHIP HOW TO MANAGE WHEN YOUR PARTNER SELFISH AND LAZY IN BED ESR SWPB
படுக்கையில் உங்கள் துணை சோம்பேறியாக இருக்கிறாரா..? சுயநலமாக இருக்கிறாரா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!
முதலில் தொடங்குபவராக இருங்கள்: உடலுறவில் கட்டுபாடு மற்றும் ஆதிக்கம் என்பது யார் முதலில் தொடங்குவது என்பதை பொறுத்துதான். உங்கள் துணை அதனை செய்வார்கள் என்று காத்திருந்து நீங்கள் சோர்வுற்று இருந்தால், அதற்கு நேரமாகும். எனவே அதை நீங்களே தொடங்குங்கள். படுக்கையறையில் உங்கள் கூட்டாளரை வழிநடத்துங்கள், படுக்கை அறையில் நெருக்கமாக இருங்கள். எக்காரணத்தை கொண்டும் வெட்கப்படாதீர்கள்.
உடலுறவில் ஒரு நபர் மட்டுமே அனுபவிக்கிறார் எனில் அது சுயஇன்பத்திற்கு சமமானது. பாலியல் அல்ல.
கேள்வி : என் கணவர் படுக்கையில் எப்போதும் சோம்பேறித்தனமாகவும், சுயநலமாகவும் செயல்படுகிறார். இதை எப்படி என் கணவரிடம் சொல்வது என தெரியவில்லை. மூன்று வருட திருமண வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் ஓரல் செக்ஸை அனுபவித்தேன். ஆனால் அவர் அதை தினமும் என்னிடமிருந்து பெறுகிறார். அதுகூட வெறுமனே கட்டிலில் படுத்தபடி இருப்பார் நான் அனைத்தையும் செய்ய வேண்டும். இதை அவர் மனதை காயப்படுத்தாமல், ஆண்மைக்கு களங்கம் வராமல் எப்படி கூறுவது..?
பதில் :உங்கள் கணவரிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்வதில் இருக்கும் தயக்கத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில், உங்கள் கணவரிடமிருந்து பாலியல் திருப்தியைக் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், பாலியல் குறித்த ஆரோக்கியமான பரிமாற்றங்கள்தான் உங்கள் திருமண பந்தந்தை உறுதி செய்யும். அதுதான் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ தீர்மானிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் இதைப் பற்றி நிச்சயம் பேச முயற்சி செய்ய வேண்டும். அவரிடம் நேரடியாகச் சொல்வது அவரது ஆண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால் அவ்வாறு செய்ய பல மறைமுக வழிகள் உள்ளன.
நீங்கள் ஒருமுறை வாய்வழி செக்ஸ் பெற்றுள்ளதால், அடுத்த முறை நீங்கள் படுக்கையில் இருக்கும்போது அந்த தருணத்தை பற்றி அவரிடம் பேசலாம். அந்த அனுபவத்தைப் புகழ்ந்து பேசுங்கள். அது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று அவரிடம் சொல்லுங்கள். அவர் அந்த குறிப்பை எடுக்கக்கூடும்.
இதைப் பற்றிய சில நல்ல கட்டுரைகள் அல்லது வீடியோக்களை அவருக்குக் காட்டவும் முயற்சி செய்யலாம். படுக்கையறையில் சில மசாலா விஷயங்களை சேர்க்கலாம். அதற்கு நீங்கள் சில வாசனை திரவியங்கள் அல்லது உள்ளாடைகளை செக்ஸியாக அணிந்து மூட் வரவழைக்கலாம். மென்மையான விளக்குகள் மற்றும் நறுமணத்தைத் தூண்டுவதன் மூலம் அவருக்கு செக்ஸ் மூட் அதிகரிக்கலாம். செக்ஸில் வெட்கப்படுவது உங்கள் இருவருக்கும் உதவப்போவதில்லை. இது நீங்கள் மட்டுமல்ல, நீங்கள் இருவரும் அந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போது இன்பத்திற்கான இந்த வாய்ப்பை இழக்கிறீர்கள்.
இதில் ஒரு நபர் மட்டுமே அனுபவிக்கிறார் எனில் அது சுயஇன்பத்திற்கு சமமானது. பாலியல் அல்ல. எனவே, இதைப் பற்றி மறைமுகமாக புலம்புவதை விட, தீர்வுக்கு சில சிக்கல்களைத் சமாளிக்க வேண்டும். ஏனெனில் இந்த பிரச்சினை எதிர்காலத்தில் உங்கள் திருமணத்தை புண்படுத்தக்கூடும். உடலுறவின் போது உங்கள் உடல் மொழி மூலம் நீங்கள் நிறைய தொடர்பு கொள்கிறீர்கள். எனவே இதை நேரடியாக பேசாமல் உடல் செய்கைகள் மூலம் வெளிப்படுத்தலாம்.