40 வயதைக் கடக்கும் ஆண்கள் எவ்வளவு நேரம் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் ?

காட்சி படம்

45 வயதிற்கு மேல் ஏதேனும் உடல் நல பாதிப்புகள் வருவது சகஜம்.

 • Share this:
  40-45 வயதைக் கடக்கும் ஆண்களுக்கு ஆண்குறி விறைப்பின்மை மற்றும் நீண்ட நேரம் உடலுறவு கொள்வதற்கான ஆற்றலும் குறையும். ஆனால் அதற்காக ஆசைகளைக் கட்டுப்படுத்துவதும் ஏதேனும் பாதிப்புகளை உண்டாக்கலாம். அதேசமயம் உடலுறவில் ஈடுபடலாமா என மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதும் அவசியம்.

  ஏனெனில் 45 வயதிற்கு மேல் ஏதேனும் உடல் நல பாதிப்புகள் வருவது சகஜம். அப்படி இருந்தாலும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போகலாம். அப்படி எதுவுமே இல்லை ஆக்டிவாக இருக்கிறீர்கள் எனில் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

  சிகிச்சை : ஆண்குறி விறைப்பின்மைக்கு மருத்துவர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கின்றனர். இந்த மாத்திரைகள் ஆற்றல் மிக்கவை. எனவே இதை மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்திப் பாருங்கள்.

  வயது செல்ல செல்ல டெஸ்டோஸ்டெரோன் ( testosterone)சுரத்தல் குறையும். ஆனால் இதை ஹார்மோன் சமநிலையால் சரி செய்யலாம். இதன் குறைபாடு கூட ஆண்குறி விறைப்பின்மைக்கு காரணமாக இருக்கலாம். எனவே இதைப்பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது ஒரு யோசனையை தரலாம். ஏன் குறைவாக இருக்கிறது. இதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று கேளுங்கள்.

  மனநல ஆலோசனை : லிபிடோ குறைதல், ஆண்குறி விறைப்பின்மை காரணமாக நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம். இதனால் உங்களுக்கு உடலுறவில் ஈடுபாடு குறையலாம். எனவே இதை சரிசெய்ய மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது. மன அழுத்தம், மனப்பதட்டம் போன்ற காரணங்களாலும் உங்களால் உடலுறவில் ஈடுபட முடியாமல் போகலாம். எனவே இதை அவரிடம் வெளிப்படையாக பேசி தீர்வு காணலாம்.

  Also Read : உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் உடலில் இந்த பிரச்சனைகள் வருமாம்..

  துணையிடம் பேசுங்கள் : உங்களுக்கு செக்ஸ் ஆசை இருந்தும் அதற்கு உங்கள் துணை ஒத்துழைக்கவில்லை.அவருக்கு ஆசை குறைந்துவிட்டது எனில் இதைப்பற்றி வெளிப்படையாக அவரிடம் பேசுங்கள். உங்கள் தேவை , ஆசைகளைக் கூறுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம். உங்களுக்கு ஏற்ற பார்ட்னரை துணையின் ஒப்புதலுடன் தேர்வு செய்யுங்கள்.

  உடலுறவுக்கான நேரம் : வயது அதிகரிக்க அதிகரிக்க பொருப்புகளும், கடமைகளும் அதிகரிக்கும். இதனால் உடலுறவுக்கு நேரம் இல்லாமலும் போகலாம். இது முற்றிலும் செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் நீங்களும் துணையும் இணைந்து செக்ஸுக்காக நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் உங்கள் செக்ஸ் இன்ப வாழ்க்கையை பரிமாறிக்கொள்ளுங்கள். இது 100 வயதைக் கடந்தாலும் உங்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: