Home » News » Lifestyle » RELATIONSHIP HOW TO KEEP YOUR LOVE INCREASE DURING LOCKDOWN ESR

லாக்டவுன் சமயத்தில் தம்பதிகள் காதலை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்..?

காதலை வெளிப்படுத்த நேரமில்லை என புலம்பியவர்களுக்கு 144 தடை சிறந்த வாய்ப்பு.

லாக்டவுன் சமயத்தில் தம்பதிகள் காதலை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்..?
காதல்
  • Share this:
கணவன் மனைவி இருவரும் பேச, மகிழ்ச்சியான தருணங்களை அதிகரிக்க, காதலை வெளிப்படுத்த நேரமில்லை என புலம்பியவர்களுக்கு 144 தடை சிறந்த வாய்ப்பு. வீட்டில் இருக்கும் இந்த சமயத்தில் காதலை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்.

புதிய விஷயங்களை முயற்சித்தல் : இருவரும் இணைந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல், புதிய விஷயங்களை முயற்சி செய்தல் காதலை அதிகரிக்கும். உதாரணத்திற்கு புதிய ரெசிபீஸ் செய்து பார்த்தல், உடற்பயிற்சி செய்தல், தோட்டம் வைத்தல், இணைந்து புதிய தொழில் முயற்சி போன்ற விஷயங்களை முயற்சிக்கலாம்.

முழு கவனம் : இருவரும் அமர்ந்து டீ டைமை ஒதுக்குகிறீர்கள் எனில் அந்த நேரத்தில் செல்ஃபோன், கேட்ஜெட்டுகளை தூரம் வைத்துவிடுங்கள். பேசுவதில் கவனம் செலுத்துங்கள்.


குறும்புத் தனங்கள் : ரொமாண்டிக் வாழ்க்கை தொடங்குவதற்கு முன் இருவருக்குள்ளும் கிண்டல் செய்துகொள்வது, கலாய்ப்பது போன்ற விஷயங்கள் இருந்திருக்கும். அதை மீண்டும் செய்யுங்கள். மகிழ்ச்சி சிரிப்பு என சந்தோஷமாக இருங்கள். இந்த விஷயம் கணவன் மனைவி உறவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் என ஆய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஆச்சரியங்கள் : வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பரிசுகள், வெளியே கூட்டிச் செல்லுதல் என செய்ய முடியாது. இருப்பினும் வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு எப்படியெல்லாம் சர்ப்பிரைஸ் செய்யலாம் என யோசியுங்கள். நீங்களே கைகளால் கிஃப்ட் செய்து கொடுக்கலாம். வேலைகளை செய்யலாம். அவர் காலை எழுவதற்கு முன் காஃபி போட்டுக் கொடுக்கலாம்.கேம் : இருவரும் இணைந்து கேம் விளையாடலாம். இதனால் காதல், நட்பு என நெருக்கம் அதிகரிக்கும்.

பார்க்க :
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading