காதல் துணைக்கு உங்கள் மீது அன்பு அதிகரிக்க இந்த விஷயங்களைச் செய்யுங்கள்

காதலில் திளைத்திருப்பதும் ஆனந்தமே..!

news18
Updated: May 11, 2019, 6:01 PM IST
காதல் துணைக்கு உங்கள் மீது அன்பு அதிகரிக்க இந்த விஷயங்களைச் செய்யுங்கள்
காதல்
news18
Updated: May 11, 2019, 6:01 PM IST
காதலில் திளைத்திருப்பதும் ஆனந்தமே..! அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே ஆழம் தெரியும். நீங்கள் அதை உணரவில்லை எனில் இன்னும் நீங்கள் சரியான துணையாக இல்லை என்று அர்த்தம். அதனால்தான் உங்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. நீங்களும் காதலில் சிறக்க இந்த விஷயங்களைப் பின்பற்றுங்கள்..!

பேசுவதைக் கவனித்தல் : உங்கள் துணை பேசிக் கொண்டிருக்கும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது மிகப்பெரும் தவறு. அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள். அதற்குப் பதில் பேசுங்கள். இது ஆரோக்கியமான உறவுக்கு வித்திடும்.

சுயநலமாக இருக்காதீர்கள் : எந்த விஷயமாக இருந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். இந்த விஷயத்தில் பெண்கள் எப்போதும் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆண்கள் முந்திக் கொண்டு விட்டுக் கொடுத்தால் துணைக்குக் காதல் அதிகரிக்கும்.
ரொமான்ஸில் கவனம் தேவை : நீங்கள் ரொமான்ஸ் மூடில் இருந்தாலும் உங்கள் துணை எந்த மைண்ட் செட்டில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுங்கள். உங்கள் துணை ரொமான்ஸ் மூடில் இருந்தாலும் அதையும் புரிந்து கொண்டு செயலாற்றுங்கள். இந்த புரிதல் உங்கள் உறவை மேன்மேலும் சிறக்கச் செய்யும்.

துணைக்கான சுதந்திரம் அளிப்பது அவசியம் : இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். உங்கள் துணை காதலுக்குப் பின்னோ அல்லது திருமணத்திற்குப் பின்னோ தனியாக நேரம் கழிப்பதையோ, விரும்பியதைச் செய்யவோ சுதந்தரமில்லை என நினைப்பது மிகவும் தவறு. எதுவாக இருந்தாலும் இணைந்தே செய்ய வெண்டும் என்று நினைப்பதும் தவறு. என்னதான் காதலித்தாலும் அவர்களுக்கென தனி வாழ்க்கை இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு அதற்கு இடமளித்தால் உங்கள் துணை உங்கள் வசம்.

Loading...

உங்கள் கருத்தை ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்தாதீர்கள் : என்னதான் உருகி உருகிக் காதலித்தாலும் நிச்சயம் ஆண், பெண் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் , கருத்து மோதல்கள் இருக்கும். அது ஆரோக்கியமாகத் தொடங்கி முடிந்தால் ஆபத்தல்ல. அது தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். உங்கள் கருத்தை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் குறிக்கோளாக இருக்காமல் அதை விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.நண்பர்களாக இருங்கள் : என்னதான் பரஸ்பரம் காதலித்தாலும் இருவருக்கும் இந்த விஷயத்தைச் சொல்லலாமா என்கிற பயம் இருக்கும். அதுபோன்ற பயங்களைக் களைந்து முழு சுந்தரம், வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுங்கள். சிறந்த நண்பர்களைப் போல் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். சிறந்த நண்பராகவும், தோழியாகவும் நீங்கள்தான் இருக்க வேண்டும்.

விட்டுக் கொடுங்கள் , மன்னிப்புக் கேளுங்கள் : பல காதல் பிரிவுகளுக்கு இந்த இரண்டும் இல்லாததுதான் காரணம். சண்டை நேர்ந்தால் விட்டுக் கொடுத்துப் போவதும் சண்டையில் இருக்கும்போது மன்னிப்புக் கேட்டு சமாதானம் பேசுவதும் இருந்தாலே பல காதல் பிரிவுகளைத் தவிர்க்கலாம்.

இதையும் படிக்க : 

மகிழ்ச்சியான துணை அமைந்தால் நீண்ட நாள் வாழலாம் - ஆய்வில் தகவல்

தாம்பத்திய உறவில் சிறக்க இந்த விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்...!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...