Home /News /lifestyle /

காதலில் ஏமாற்றுபரைக் கண்டறிவது எப்படி..? இளசுகளுக்கு அலர்ட்..!

காதலில் ஏமாற்றுபரைக் கண்டறிவது எப்படி..? இளசுகளுக்கு அலர்ட்..!

மன்னிப்பு : மன்னிப்பு என்ற வார்த்தைக்கு சக்தி அதிகம். எனவே எப்பேர்பட்ட கோபம் இருந்தாலும் சாரி என மன்னிப்புக் கேட்பது அனைத்தையும் மாற்றிவிடும். அப்படி துணை உங்களின் கோபத்தால் நிதானம் இழந்து இருக்கிறார். வீட்டில் சூழலே சரியில்லை என்றால் அதை மாற்றும் சக்தி நீங்கள் அவரிடம் கேட்கும் மன்னிப்பில் உள்ளது. உண்மை என்ன, நியாயம் என்ன என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த சூழ்நிலையை மாற்ற இதுவே சிறந்த வழி.

மன்னிப்பு : மன்னிப்பு என்ற வார்த்தைக்கு சக்தி அதிகம். எனவே எப்பேர்பட்ட கோபம் இருந்தாலும் சாரி என மன்னிப்புக் கேட்பது அனைத்தையும் மாற்றிவிடும். அப்படி துணை உங்களின் கோபத்தால் நிதானம் இழந்து இருக்கிறார். வீட்டில் சூழலே சரியில்லை என்றால் அதை மாற்றும் சக்தி நீங்கள் அவரிடம் கேட்கும் மன்னிப்பில் உள்ளது. உண்மை என்ன, நியாயம் என்ன என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த சூழ்நிலையை மாற்ற இதுவே சிறந்த வழி.

அனைவரையும் நம்புங்கள். அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள். நடப்பவை எதிலும் உங்கள் தவறு இல்லை என்பதையும் நினைக்க மறந்துவிடாதீர்கள்.

  • RedWomb
  • Last Updated :
ஷாலினி என்ற மாணவி பள்ளி விட்டு வீடு திரும்பும் சாலையில் ஒரு இளைஞரை சந்திக்கிறார். அவர் தினமும் ஷானிலியை பின் தொடர்ந்துள்ளார். இப்படி பள்ளி, டியூஷன் என பின் தொடர அதைக் கண்ட ஷாலினியின் தோழிகள் அந்த இளைஞரின் பெயர் சொல்லி கிண்டல் செய்கின்றனர். அந்த கிண்டல்கள் பதின்பருவத்தில் யாருக்குத்தான் பிடிக்காது. அவரும் வலையில் விழுகிறார். திடீரென ஒருநாள் அந்த இளைஞர் காதலை வெளிப்படுத்த ஷாலினி அதை ஏற்றுக்கொண்டுள்ளார். நாட்கள் செல்ல செல்ல அந்த இளைஞருக்கு ஷாலினி ஆண் நண்பர்களுடன் பேசுவது எரிச்சலூட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து ஷாலினி மீது கோபம் காட்டுவது , சந்தேகிப்பது என நடந்துகொண்டுள்ளார். இதனால் பயந்த ஷாலினி பள்ளிக்குச் செல்வதையே தவிர்த்துள்ளார். வீட்டிலேயே முடங்கி பாதுகாப்பின்மையை உணர்ந்த ஷாலினி தினமும் இரவில் அழுவது, தூக்கத்தில் புலம்புவது, தனிமையை நாடுவது என இருந்துள்ளார்.

இந்த சம்பவம் என்பது ஷாலினிக்கு மட்டும் நேர்ந்ததல்ல. இது சமூகத்தில் தினம் தினம் நடக்கும் பிரச்னைதான் என்பது படிக்கும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் அதிலிருந்து மீளாமல் சிக்கிக்கொள்ளும் அவலமே நடக்கிறது. இனியும் இப்படி நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வழிகள் என்ன?

மன ரீதியாக அல்லது உடல் ரீதியாக என இரு வகைகளில் வன்கொடுமைகள் நிகழ்கின்றன. உணர்வு ரீதியான வன்கொடுமை என்பது பாதிக்கப்படுவோரின் உணர்வுகளை உறைய வைக்கிறது. எதற்கும் உதவாதவர் என தன்னம்பிக்கையை இழக்க வைத்து முடக்கிப் போடுகிறது. உடல் ரீதியாக என்பது அவர்களை அடிப்பது, உதைப்பது அடித்த காயத் தழும்புகள் கூட ஆறாமல் இருக்கும். இவை தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

நோட்டமிடுதல் : உங்களுக்கே தெரியாமல் மறைமுகமாக உங்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிப்பார். செல்ஃபோன் அழைப்பு, மெசேஜுகளை நோட்டமிடுவார். இந்த செயல்கள் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை சீர்குலைப்பதாக இருக்கும். மனப்பதட்டத்தை உண்டாக்கும்.

பயமுறுத்துதல் : இது நோட்டமிடுவதற்கு அடுத்த கட்டம். நீங்கள் அவர் சொல்வதற்கு ஒத்துழைக்கவில்லை. கட்டளைகளை ஏற்கவில்லை எனில் அடிப்பது, ஆசிட் வீச்சு , தொந்தரவு செய்வது என நடந்துகொள்வார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்ட வைத்து பணிய வைப்பார்கள்.

மிரட்டுதல் : நீங்கள் அவர் சொல்வதை உறுதியாக மறுப்புத் தெரிவிக்கிறீர்கள் எனில் உடனே நீங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டுவார்கள். இதனால் நீங்கள் அவரின் மிரட்டலுக்கு பயந்து அடிபணிய நேரும்.மட்டம் தட்டுதல் : ஏமாற்ற நினைப்பவர்கள் தங்கள் துணையின் உடலமைப்பை வைத்து குண்டு, கருப்பு, முட்டாள் என அழைப்பது, அவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும். அதுவும் பதின்பருவத்தில் இப்படியான வார்த்தைகள் கூடுதல் பாதிப்பை உண்டாக்கும். இதனாலேயே தங்களைத் தாழ்வாக நினைத்து அந்த காதலில் வெளியேற நினைப்பார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

நிராகரித்தல் : சில நேரங்களில் திடீரென தொடர்புகளைத் துண்டித்து பேசாமல் அலைய விடுவார்கள். இதுவும் அவர்கள் தரும் வேறுவிதமான தண்டனை. இந்த உறவில் அவர்கள் விலகவும் மாட்டார்கள். உடன் இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெளியே செல்வதாக கூறினால் நிராகரிப்பார்கள். அப்படியே சென்றாலும் தன் நட்பு வட்டாரங்கள், பொதுவெளியில் இவர்தான் என் காதலி/காதலன் என காட்டிக்கொள்ள மாட்டார்கள். அந்த உறவை தக்க வைக்க பொருப்புடன் இருக்க மாட்டார்கள்.

தன்னம்பிக்கையை குலைத்தல் : உன்னால் முடியாது, உனக்கு வராது , அதை உன்னால் செய்ய முடியாது என உங்கள் முயற்சிகளை எப்போதும் சீர்குலைக்கும் வேலையைச் சிறப்பாக செய்வார்கள். இதுபோன்ற வார்த்தைகள் உங்கள் தன்னம்பிக்கையை உடைக்கும். நீங்களும் முயற்சி செய்யாமல் விட்டுவிடுவீர்கள். இது சில சமயம் உங்களை நினைத்து நீங்களே தவறாகக் கருதுவீர்கள்.பாலியல் வன்கொடுமை : உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களை தொட நினைப்பது, உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது என நடந்துகொள்வார்கள். அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் பயமுறுத்துதல், மிரட்டல் விடுத்தல், அடித்தல், துன்புறுத்துதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள்.

மேலே குறிப்பிட்டவை ஆண், பெண், ஓர்பாலினச் சேர்க்கையாளர்கள், வயதானவர்கள் என யாருக்கும் நிகழலாம். யாரும் உங்களை ஏமாற்றலாம். எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும் அதை புரிந்துகொள்ளும் பக்குவமே அவசியம். இப்படி மேலே குறிப்பிட்ட எது ஒன்றை நீங்கள் உணர்ந்தாலும் அந்த உறவிலிருந்து வெளியேறுவது நல்லது. அனைவரையும் நம்புங்கள். அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள். நடப்பவை எதிலும் உங்கள் தவறு இல்லை என்பதையும் நினைக்க மறந்துவிடாதீர்கள்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Lifestyle

அடுத்த செய்தி