• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் திருமணத்திற்கு முந்தைய பதட்டம் , கவலைகள் தொற்றிக்கொண்டுள்ளதா..? சரி செய்ய இதை டிரை பண்ணுங்க..!

உங்கள் திருமணத்திற்கு முந்தைய பதட்டம் , கவலைகள் தொற்றிக்கொண்டுள்ளதா..? சரி செய்ய இதை டிரை பண்ணுங்க..!

திருமணம் என்றால் பெரும்பாலானோருக்கு சற்று பயம் இருக்கும். திருமண நடுக்கங்கள் கவலைகளுக்கு வழிவகுக்கின்றன. இது ஆரோக்கியமானதல்ல, ஆனால் உங்கள் திருமணத்திற்கு முன்பு மிகவும் பதட்டமாக இருப்பது அசாதாரணமானது அல்ல, ஆனால் மிகவும் சாதாரணமானது. திருமணத்திற்கு முந்தைய கவலைகளை கையாளக்கூடிய எளிய வழிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

திருமண நடுக்கங்கள் கவலைகளுக்கு வழிவகுக்கின்றன. இது ஆரோக்கியமானதல்ல...

  • Share this:
திருமணம் என்றால் பெரும்பாலானோருக்கு சற்று பயம் இருக்கும். திருமண நடுக்கங்கள் கவலைகளுக்கு வழிவகுக்கின்றன. இது ஆரோக்கியமானதல்ல, ஆனால் உங்கள் திருமணத்திற்கு முன்பு மிகவும் பதட்டமாக இருப்பது அசாதாரணமானது அல்ல, ஆனால் மிகவும் சாதாரணமானது. திருமணத்திற்கு முந்தைய கவலைகளை கையாளக்கூடிய எளிய வழிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

நிலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் : நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மறுப்பதில் எந்த பயனும் இல்லை, எனவே நீங்கள் என்ன உணர்கிறீர்களா அதனை ஏற்று கொள்ளுங்கள். சிலர் திருமணத்தின் போது அந்த உணர்வுகளை அடக்க விரும்புவீர்கள், ஆனால் அதற்கு பதிலாக, நீங்கள் அவற்றை அடையாளம் காண வேண்டும், அப்போது தான் யதார்த்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே, உங்கள் மனதைத் திறந்து உங்களுக்கு நேர்மையாக இருங்கள்.

சுய வழக்கம் : திருமணம் குறித்த மன அழுத்தத்தின் போது ஓய்வெடுக்க உதவும் சில நல்ல தோல் பராமரிப்பு வழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். இத்தகைய சுய வழக்க நடைமுறைகள் உங்கள் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். திருமணத் திட்டத்திலிருந்து உங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால், ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் சில நல்ல திரைப்படத் தொடர்களைப் பாருங்கள், சில சுவையான உணவை சமைத்து சாப்பிடுவது அல்லது சுறுசுறுப்பாக உணர உடற்பயிற்சி செய்யுங்கள்.

உங்களை அமைதிப்படுத்துங்கள்  : யோகா, சுவாச பயிற்சி , தசை தளர்வு, நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற பல தியான நுட்பங்கள் உங்கள் பதற்றத்தை எளிதாக்குவதற்கான சிறந்த வழிகள். இந்த வழிகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் மனதையும், உடலையும் நிதானப்படுத்தலாம். இது உங்கள் ஒட்டுமொத்த மன அழுத்தத்தையும் குறைக்கும். இது உங்கள் திருமணத்திற்கு முந்தைய நிதானத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

உங்கள் நெருங்கியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் : இந்த நேரத்தில் உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம். திருமண கவலை உங்களுக்கு ஒரு கடுமையான சிக்கலை ஏற்படுத்தினால், உங்கள் நெருங்கியவர்கள் உங்களுக்கு சரியான பரிந்துரைகளை வழங்க முடியும். அவர்களின் வழிகாட்டுதலை கேட்டு அதற்கேற்ப செயல்படுங்கள். ஏனெனில் ஏற்கனவே அவர்களுக்கு திருமணம் நடத்திய அனுபவம் இருக்கும் என்பதால், இதை நீங்கள் மட்டும் எதிர்கொள்ள வேண்டியதில்லை அவர்களிடம் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறவும் : திருமணத்தின் போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் எப்போதாவது மட்டும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தவதால் எந்த பிரச்னையும் இல்லை, இருப்பினும் நீங்கள் அதில் மூழ்கும் பழக்கம் உடையவராக இருந்தால், சிறிது நேரம் அதிலிருந்து வெளியேறி திருமண வேலைகளில் மீது கவனம் செலுத்துவது நல்லது. அதிக நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது எதிர்மறை எண்ணங்களை உருவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: