முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Sadhguru : கடினமான மனிதர்களை கையாள்வது எப்படி? சத்குரு விளக்கம்

Sadhguru : கடினமான மனிதர்களை கையாள்வது எப்படி? சத்குரு விளக்கம்

சத்குரு

சத்குரு

வேலை ஆக வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு விஷயத்தை அணுகாதீர்கள். யார் மிகவும் கடினமாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து புன்னகை செய்யுங்கள். அவர்களைப் பற்றிய எந்த முன்முடிவுகளுக்கும் இடம் கொடுக்காமல் அவர்களை ஆழமாகப் பாருங்கள்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

அலுவலகம், வீடு, பள்ளி என்று சமூகத்தில் பலநிலைகளில் பல கடினமான மனிதர்களை வாழ்க்கையில் நாம் எதிர்கொண்டிருப்போம். இப்படிப்பட்ட கடினமானவர்களை கையாள்வது எப்படி என்று சத்குருவிடம் கேட்டபோது....

சத்குரு:

கடினமான மேலதிகாரி சிங்கப்பூரில் நான் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இளம்பெண் ஒரு கேள்வி கேட்டார். "சத்குரு, கடினமான மனிதர்களைக் கையாள்வது எப்படி," என்பதுதான் அந்தக் கேள்வி.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பெண்ணின் மேலதிகாரியும் அவருக்கு அருகிலேயே அமர்ந்திருந்தார். நான் அவரை சுட்டிக்காட்டி, "உங்கள் கேள்வி இந்த மனிதரைப் பற்றியதா?" என்று கேட்டேன். அந்த மனிதரோ அந்தக் கேள்வி தன்னைப் பற்றியதல்ல என்று உணர்த்தும் விதமாக தலையை வேகமாக ஆட்டினார். ஆனால் அந்தப் பெண்ணோ கேள்வி அவரைப் பற்றியதுதான் என்று உறுதி செய்தார்.

வேலை மட்டும் நடக்கவேண்டுமென்றால்...

உங்களுக்கு அந்த மனிதரிடம் வெறுமனே வேலை நடக்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது கடினமாக நடந்து கொள்கிற அந்த மனிதரைக் கையாள்வது மிகவும் எளிதான விஷயம். ஏனென்றால் எந்த மனிதர் நடிக்கிறாரோ அவரைக் கையாள்வது மிகவும் எளிது. அவருக்குத் தனக்குள் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. கடினமாக நடந்து கொண்டால்தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற கற்பனையில் அவர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் உங்களுக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியிருந்தால் அவர்களைக் கையாள்வது மிகவும் எளிது.

அவர்களை எப்படி அணுகுவது?

ஆனால் உங்களுக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு விஷயத்தை அணுகாதீர்கள். யார் மிகவும் கடினமாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து புன்னகை செய்யுங்கள். அவர்களைப் பற்றிய எந்த முன்முடிவுகளுக்கும் இடம் கொடுக்காமல் அவர்களை ஆழமாகப் பாருங்கள். நீங்கள் இவ்வாறு செய்தால் கடினமானவராக நடந்து கொள்ளும் அந்த மனிதர் திணறிப் போவார். அவரிடம் யாருமே இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள். அவரது தாயாரோ ஆசிரியரோ வாழ்க்கைத் துணைவரோ இப்படியொரு கவனத்தை அவருக்குத் தந்திருக்க மாட்டார்கள்.

நேர்மறையாக சிந்திப்பதில் இருக்கும் ஆபத்து என்ன..? சத்குரு விளக்கம்..!

எனவே அவர் தன்னுடைய நடிப்பை விட்டுவிட்டு வேறொரு மன இயல்புக்குத் திரும்புவார். அதைவிட ஒன்றின்மேல் வெறுமனே கவனம் செலுத்தும் தன்மை உங்களுக்கு வருவது மிகவும் நல்லது. வானில் நிலவு இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறது. அதனால்தான் சிவன் கூட அதைத் தன் அணிகலனாக அணிந்து கொண்டார். இதில் நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால், வானத்தில் நிலவை நீங்கள் ஒருமுறை கண்டுவிட்டால் அதன்பிறகு நிலவு வானத்தில் இல்லை. உங்கள் மனத்தில்தான் இருக்கிறது.

கவனியுங்கள்!

நிலவையே பார்த்திராத ஒருவர் கண்களை மூடிக்கொண்டு நிலவைக் காண்பது சாத்தியமில்லை. ஆனால் நிலவை ஒருமுறை கண்டுவிட்டால் பிறகு கண்களை மூடிக்கொண்டு உருவகித்தால் நிலவு வானத்தில் இல்லை. உங்கள் மனத்தில்தான் இருக்கிறது. எனவே நிலவை நிலவாகப் பார்க்காமல் அதை உங்கள் புரிதலாக மட்டுமே பார்க்கிறீர்கள். ஒரு படைப்பையே அதன் சுய இயல்போடு உள்வாங்கிக் கொள்ளாத நீங்கள், படைத்தவனின் தன்மையை எப்படி உங்கள் உள்நிலையில் உணரப் போகிறீர்கள்?

அடுத்தவர் மீது வெறுப்புணர்வு ஏன் வருகிறது? சத்குரு விளக்கம்

நிலவைப் பார்த்து இது நிலவு அல்லது சந்திரன் என்று உங்களுக்குத் தெரிந்த தகவல்களை அதன் மேல் ஏற்றிக் கொண்டிராமல் நிலவை நிலவாக மட்டுமே பார்க்கத் தெரிந்தால்தான் நிலவை உங்கள் கவனத்துக்குள் கொண்டு வருகிறீர்கள் என்று பொருள்.

top videos

    இப்படிப் பார்க்கும்போது நிலவை நீங்கள் முற்றிலும் வேறுவிதமாக உங்கள் கவனத்துக்குள் கொண்டு வருவீர்கள். எனவே தன்னைக் கடினமாக வெளிப்படுத்தும் மனிதர்களுக்கு உங்கள் முழு கவனத்தை நிபந்தனையின்றியும் முன் முடிவுகள் இன்றியும் கொடுங்கள். இப்படியொரு கவனத்தை இதற்கு முன் யாரும் அவர்களுக்கு வழங்கியதேயில்லை. எனவேதான் கடினமாக நடந்து கொள்கிறார்கள்.

    First published:

    Tags: Sadguru, Sadhguru