கேள்வி : எனக்கு 45 வயதாகிறது. என் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது இளமைக் காலத்தில் இரண்டு பெண்களை காதலித்தேன். அதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து தற்போது 2 மகன்கள் உள்ளனர். அந்த சமயத்தில் என் முன்னாள் காதலியை எதர்ச்சையாக சந்திந்தேன். அப்போது பழைய ஞாபகங்கள் சேர்ந்து காதல் மீண்டும் மலர்ந்தது. அவளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவளும் அவள் கணவருடன் வாழ்ந்து வருகிறாள். இருவரும் பல முறை உடலுறவு வைத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் அவள் கர்ப்பமடைந்தாள். தற்போது 12 வயதில் எங்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இப்படி இரண்டு பெண்களை காதலிக்கும் ரகசியம் யாருக்கும் தெரியாது. இந்த உறவில் எங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை மிகவும் பிடிக்கும். ஆனால் எங்களால் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ முடியவில்லை என்பதால் பல நேரங்களில் அவளையும் , என் மகனையும் மிகவும் மிஸ் செய்கிறேன். என்னையும், என் சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ளும் குணம் கொண்டவள். என் மீது மிகுந்த மரியாதையும் வைத்திருக்கிறாள்.
நானும் அவள் மீது காதலைவிட அதிகமாக மரியாதை வைத்திருக்கிறேன். எங்களுக்கு இடையே என் மகனைதான் அருகில் இருந்து கவனிக்க முடியாமல் தவிக்கிறேன். அவனை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும், அவள் கணவருடன் நடந்த சட்டப்பூர்வமான திருமணத்தையும் உடைக்க விரும்பவில்லை..எனவே என்ன செய்வது..? இதில் எனக்கான சாத்தியங்களைக் கூறவும்..
பதில் : உங்கள் கேள்வியிலிருந்து, திருமணமான உங்கள் காதலியுடனான உறவின் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அவளும் உங்கள் இருவருக்கும் பிறந்த மகனும் உங்கள் வாழ்க்கையில் அதிகம் இருக்க வேண்டும் என்று நீங்கள் இப்போது விரும்புகிறீர்கள்.
ஆனால் இதற்கு தீர்வாக சட்டரீதியாகவும் நெறிமுறையிலும் நீங்கள் செய்ய வேண்டியது சிறு காரியம்தான். அதாவது இந்திய சட்டத்தின்படி விபச்சாரம் ஒரு குற்றமல்ல என்றாலும், அது விவாரத்து கோருவதற்கான வாய்ப்பாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே இந்த உறவு வெளிச்சத்திற்கு வந்தால், உங்கள் மனைவி அல்லது காதலியின் கணவர் அல்லது இருவருமே விவாகரத்து கோரலாம். இரண்டு திருமணங்களும் வீழ்ச்சியடைவதை நீங்கள் விரும்பாததால், இதைச் செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது.
நான் கவனித்த வரையில், உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றைதான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதாவது , நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த பிரச்னைக் குறித்து உங்கள் மனைவியிடம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் கூற வேண்டும். அதேபோல் உங்கள் காதலியையும் அவருடைய கணவரிடம் இதைப் பற்றி வெளிப்படையாக பேசச்சொல்லுங்கள். இருவரும் உங்கள் தவறை ஒப்புக்கொண்டு வெளிப்படையாகப் பேசுவதால் இருவரையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.
ஆனால் இதனால் இரண்டு திருமணங்களும் உடைவதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன. ஏனெனில் அதன் வேரில் இருக்கும் உங்கள் இருவரின் நேர்மையின்மை காரணம். இருப்பினும், இவ்வாறு செய்வதால் உங்கள் விருப்பம் போல் அன்புக் காதலியுடனும், மகனுடனும் வெளிப்படையான வாழ்க்கையை வாழ முடியும். எனவே, இனி இருக்கப்போகும் உங்கள் வாழ்நாள் முழுவதையும் அன்புக் காதலியுடன் வாழ விரும்பினால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய வழி நேர்மையாக இருக்க வேண்டும்.
நெருங்கிப் பழகும் நபரிடம் மட்டும்தான் காதல் ஈர்ப்பு வருகிறதா..? இது இயல்பான உணர்வுதானா..?
ஒருவேளை அதற்கு பதிலாக உங்கள் மனைவியுடன் இருப்பதை விரும்பினால் நீங்கள் அவளுடன் நேர்மையாக நடந்து கொள்ளும் பட்சத்தில், உங்கள் மனைவியின் கருணை மட்டுமே உங்களுக்கு உதவலாம். அதாவது உங்கள் காதலி மற்றும் மகனுடனான உறவையும் உங்கள் மனைவி ஏற்றுகொண்டால் உங்களுக்கு சாத்தியமாக இருக்கும் அல்லது அவர்களுடைய உறவை முற்றிலுமாக துண்டிக்கச் சொன்னால் அதையும் செய்தாக வேண்டும். எனவே அதை ஏற்பதும், தவிர்ப்பதும் உங்கள் மனைவியின் கருணையில் உள்ளது.
எனவே நீங்கள் விரும்புவது போல் இரண்டு திருமணங்களையும் பாதிக்காமல் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நீங்கள் செய்துகொண்டிருப்பதை தொடர்வதாகும். அதாவது இத்தனை நாள் நீங்கள் மறைத்த ரகசியத்தை ரகசியமாகவே கட்டிக்காப்பதும், அந்த உறவை முற்றிலும் உடைப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது.
நிச்சயமாக, உங்கள் தேர்வு எதுவாயினும் மீண்டும் தற்போது அனுபவிக்கும் அதே பிரிவையும், ஏக்கங்களையும் சுமந்துதான் ஆக வேண்டும். தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது. உங்கள் காதலியுடன் நீங்கள் விரும்பும் அளவுக்கு அதிக நேரத்தை செலவிட முடியாமல் போவதையும் குறிக்கும். இல்லையெனில் உங்கள் மனைவியும், காதலியின் கணவரும் உங்கள் உறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே நீங்கள் நினைப்பதுபோல் உங்கள் இருவரின் திருமணமும் உடையாமல் இருக்கும். ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் நிச்சயமில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.