Home /News /lifestyle /

உங்கள் கணவருக்கு செக்ஸ் மூடு வரவழைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா..? கவலையை விடுங்க...அதற்கான மந்திரம் இதோ...

உங்கள் கணவருக்கு செக்ஸ் மூடு வரவழைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா..? கவலையை விடுங்க...அதற்கான மந்திரம் இதோ...

கோவிட் வைரஸ் பாதிப்புக்கும் விறைப்புத்தன்மை செயலிழப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எந்த ஆய்வும் இதுவரை கூறவில்லை என தெரிவித்துள்ள அவர், கோவிட் பாதிக்கப்பட்ட சிலருக்கு விறைப்புதன்மை செயலிழப்பு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டியிருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஜெயின், விறைப்புதன்மை செயலிழப்புக்கான காரணங்களை முன்வைக்கிறார்.

கோவிட் வைரஸ் பாதிப்புக்கும் விறைப்புத்தன்மை செயலிழப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எந்த ஆய்வும் இதுவரை கூறவில்லை என தெரிவித்துள்ள அவர், கோவிட் பாதிக்கப்பட்ட சிலருக்கு விறைப்புதன்மை செயலிழப்பு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டியிருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஜெயின், விறைப்புதன்மை செயலிழப்புக்கான காரணங்களை முன்வைக்கிறார்.

பொதுவாக உங்கள் கணவருக்கு உங்கள் மீது செக்ஸ் ஆசை வந்து விட்டால் அவர்கள் சில உடல் மொழிகள் மூலம் ஆசையை வெளிப்படுத்துவார்கள். அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதிஷ்டத்தை இழந்து வீட்டீர்கள் என அர்த்தம்.

இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலைமை ஓரளவிற்கு பரவாயில்லை என்றாலும் பல கணவன்மார்கள் இன்னமும் ஒர்க் ப்ரம் ஹோமில் தான் உள்ளனர். வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் மனைவி கணவரின் ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும். உங்களுக்கு ஆசை இருந்தாலும் உங்கள் கணவருக்கு மூடில்லையா? கவலைய விடுங்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்க போதும்.


நீங்களே தொடங்குங்கள் : முதலில் யார் தொடங்குவது என்ற கவலை ஆண், பெண் இருவரின் மனதிலும் எழும். உங்கள் கணவர் ஸ்ட்ராட் செய்யவில்லை என்றால் கூச்சப்படாமல் நீங்களே தொடங்குங்கள். உடலுறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்பு என்னவென்றால் எல்லாத்தையும் நான்தான் முதலில் தொடங்க வேண்டும். பெண்கள் எப்பவும் முதல்ல அமைதியா இருப்பாங்க. பொதுவாக ஆண்கள்தான் உடலுறவை ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் உங்கள் கணவரை முந்துங்கள்.


நேரமும் இடமும் : உடலுறவின் போது உங்கள் அறை நல்ல நறுமணத்துடனும், காற்றோற்றமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் இடமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் எந்த நேரத்திலும் கணவரது மனநிலை மாறாமல் உங்கள் செக்ஸ் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பொதுவாக பெண்கள் பொறுமையாக, மெதுவான, அழகான செக்ஸ் அனுபவங்களை தான் விரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் கணவராகிய நீங்கள் உங்கள் மனைவியுடன் தனியாக இருந்தாலும் நேரம் குறைவு காரணமாக செயல்படாதீர்கள். செக்ஸ்ஸிற்கு முதலில் அவர்களது சம்மதத்தை வாங்குங்கள். அவர்கள் உங்களுடன் போனில் செக்ஸியாக பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை நீங்கள் தொடலாம் என்பதில்லை. இதற்கு அவரின் சம்மதமும் முக்கியம். அப்போது தான் சிக்கலின்றி இருக்க முடியும். நேரத்தை கருத்தில் கொள்ளும்போது உங்கள் நேரம் மட்டுமல்ல உங்கள் கணவரின் நேரமும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.


மசாஜ் செய்து மயக்குங்கள்: நீங்கள் ஒருவருக்கொருவர் செக்ஸ் மசாஜ் செய்து துவங்கலாம். செக்ஸ் மசாஜ்கள் உங்களைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க செய்யும். பாலியல் மசாஜ் செய்ய, லிபிடோ அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட சில நல்ல அத்தியாவசிய எண்ணெய்கள் தேவை. மனைவியாகிய நீங்கள் மசாஜ் செய்ய தேவையானவற்றை ஏற்பாடு செய்து நீங்களே மசாஜையும் தொடங்குங்கள்.


செக்ஸ் மூடிற்கு கொண்டுவாருங்கள்: உங்கள் கணவரை பாலியல் ரீதியாக தூண்டுவதற்கான மற்றொரு எளிய வழி, உங்கள் இருவருக்கும் இடையிலான பாலியல் சந்திப்பை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுவது. சத்தம் எழுப்புங்கள், அவரது காதுகளில் புத்திசாலித்தனமான ஒன்றைக் கிசுகிசுக்கவும், அவரிடமிருந்து படுக்கையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், அவர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவரது செக்ஸ் மனநிலையைப் பெற நீங்கள் அவரது தொலைபேசியை கவர்ச்சியான செய்திகளுடன் பிங் செய்யலாம். செக்ஸ் நேரம் வந்ததும் போனை ஆப் செய்துவிட்டு இருவரும் குலாவுங்கள்.


ரொமென்ஸை மறக்காதீங்க: உங்கள் கணவரின் சம்மதம் கிடைத்து விட்டால் உடனடியாக தொடங்கி விடாதீர்கள். செக்ஸ் மூடை அதிகரிக்க முதலில் உங்கள் கணவர் மீது நீங்கள் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர வேண்டும் அதே நேரத்தில் அந்த நேரத்தை நீங்கள் ரொமென்டிக்காகவும் மாற்ற வேண்டும். உங்கள் கணவரின் தலை முடியை மெதுவாக கொதிவிடுவது. அவர்களது விரல்களை பிடித்து வருடுவது அன்பான வார்த்தைகளை பேசுவது போன்ற செயல்களை செய்யலாம்.


உடல் மொழிகள் : பொதுவாக உங்கள் கணவருக்கு உங்கள் மீது செக்ஸ் ஆசை வந்து விட்டால் அவர்கள் சில உடல் மொழிகள் மூலம் ஆசையை வெளிப்படுத்துவார்கள். அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதிஷ்டத்தை இழந்து வீட்டீர்கள் என அர்த்தம். பொதுவாக முத்தம் கொடுப்பார்களே தவிர அவர்களுக்கு பெரும்பாலும் துவக்க பிரச்னை இருக்கும். அதனால் இந்த விஷயத்தை நீங்கள் முதலில் துவங்குவது நல்லது. செக்ஸ் மூடிற்கு வேகமாக ஸ்டார்ட் செய்யாதீர்கள். மெதுவாக உங்கள் கணவருக்கு நீங்கள் முத்தம் கொடுத்து முக்கியமாக அவர்கள் நெற்றியில் முத்தத்தை ஆரம்பித்து, துவங்குங்கள். பின்னர் உங்கள் கணவரை ஒருமுறை பாருங்கள் சிக்னல் எப்படி உள்ளதென்று. பாஸிட்டிவாகத்தான் இருக்கும். இப்போது இருவரும் என்ஜாய் செய்யுங்கள்.


 
Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy sex Life, Relationship, Sex

அடுத்த செய்தி