ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் உடலுறவு கொள்வதில் மிகவும் ஆக்டிவானவரா..? ஆனால் மனைவியுடன் திருப்தி இல்லையா..? உங்களுக்கான பதில் இதோ...

நீங்கள் உடலுறவு கொள்வதில் மிகவும் ஆக்டிவானவரா..? ஆனால் மனைவியுடன் திருப்தி இல்லையா..? உங்களுக்கான பதில் இதோ...

மூடு இல்லாத செக்ஸ் வழக்கத்தினால் சலிப்படைந்துவிட்டீர்களா. உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வு தான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டுமென்னும் ஆசை தான். இவை அனைத்திற்கும் செக்ஸ் மூடு இல்லை என்றால் திருப்பதி கிடைக்காது. மேலும் பாலுணர்வு என்பது ஒரு நபரின் செக்ஸ் மூடு, அல்லது செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஆசையை குறிக்கிறது.

மூடு இல்லாத செக்ஸ் வழக்கத்தினால் சலிப்படைந்துவிட்டீர்களா. உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வு தான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டுமென்னும் ஆசை தான். இவை அனைத்திற்கும் செக்ஸ் மூடு இல்லை என்றால் திருப்பதி கிடைக்காது. மேலும் பாலுணர்வு என்பது ஒரு நபரின் செக்ஸ் மூடு, அல்லது செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஆசையை குறிக்கிறது.

நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என நினைத்தால் நேரடியாக களத்தில் இறங்காமல் அவரை கிண்டல் செய்யுங்கள். விளையாடுங்கள், அவரை அந்த உணர்ச்சிக்கு தூண்ட வையுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேள்வி : நான் எப்போதும் பாலியல் ஆசை கொண்ட நபர். ஆனால் என் பெண் தோழிக்கு உடலுறவில் முற்றிலும் விருப்பம் இல்லை. புதுப்புது நிலைகளில் செக்ஸ் வைத்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் பல புதிய விஷயங்களையும் செய்வதில் ஆர்வம் அதிகம். நான் இன்று வரை அவளுடன் கொண்ட உடலுறவில் திருப்தி அடையவில்லை. அதனால் தினமும் ஆபாச வீடியோக்கள் பார்த்து என் இச்சைகளை தீர்த்துக்கொள்கிறேன். இதனால் என் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுமா..?

பதில் : தினமும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதும், விந்துக்களை வெளியேற்றுவதும் உடலளவில் எந்த எதிர்மறை பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இது உங்கள் உறவையும் பாதிக்காது. அதுவும் இந்த சிறு வயதில் பாலுணர்வு அதிகமாக இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்புகள் இயல்புதான்.

அதேபோல் உறவில் செக்ஸ் மட்டும்தான் எல்லாம் என்பதில்லை. அதேசமயம் ஒரு உறவில் அதுவும் முக்கிய பகுதி. திருப்தியான வாழ்க்கைக்கு திருப்தியான செக்ஸ் வாழ்க்கையும் அவசியம். அப்போதுதான் அந்த வாழ்க்கை நிறைவு பெறும்.

பெண்களைப் பொறுத்தவரை படுக்கை அறையைத் தாண்டிய செக்ஸ் வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். அதாவது செக்ஸ் அல்லாத செக்ஸ்..உதாரணத்திற்கு ரொமாண்டிக்காக இருப்பது..அவர்களுக்காக காஃபி போட்டு கொடுப்பது, நெருக்கமாக விளையாடுவது, பாராட்டுவது, அவ்வபோது அன்பு, அக்கறைகளை பொழிவது, தன்மையாக நடந்துகொள்வது, உடன் இருக்கும் தோழிகள் பொறாமை படும் அளவிற்கு காதலி வெளிப்படுத்துவது என இருந்தால் இருவருக்குள் உடலுறவு நெருக்காம் தானாக அதிகரிக்கும். உங்கள் தோழிக்கும் ஈடுபாடு அதிகரிக்கும்.

உடலுறவுகொள்ள நீங்கள் அவர்களை அழுத்தம் கொடுப்பது ஒருகட்டத்தில் எரிச்சலை உண்டாக்கலாம். இதனால் நீங்கள் சொல்வதுபோல் வெறுப்பாக நடந்துகொள்வதோ, பின்வாங்குவதோ செய்யலாம். இதற்கு சிறந்த வழியாக நீங்கள் உடலுறவு குறித்து முற்றிலும் பேசாமல் , எந்த செயலும் செய்யாமல் பின்வாங்குங்கள். நிச்சயம் நீங்கள் ஆக்டிவாக இருக்கும் சமயத்தில் இது அதிக அழுத்ததை தரலாம். ஆனால் உங்கள் உடலுறவு வாழ்க்கை திருப்தியாக இருக்க இதை முயற்சி செய்து பாருங்கள்.

வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்யுங்கள். ஃபிட்னஸ் கிளப்பில் ஜோடிகளுக்கான உடற்பயிற்சி, நடனம், ஏதேனும் திறமையை வளர்த்துக்கொள்வது என இருவரும் இணைந்து செய்யும் விஷயங்களில் முற்படுங்கள். இதனால் அவர் தானாக தூண்டப்படுவார். அவருக்குள் அந்த உணர்வு வரும்.

நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என நினைத்தால் நேரடியாக களத்தில் இறங்காமல் அவரை கிண்டல் செய்யுங்கள். விளையாடுங்கள், அவரை அந்த உணர்ச்சிக்கு தூண்ட வையுங்கள். உணர்ச்சிவசப்படுதல் மட்டும் செக்ஸ் கிடையாது. உடல் இன்பத்தைப் பொறுத்தது. பெண்களுக்கான இன்பம் கிண்டல் செய்வதிலும், காத்திருப்பிலிருந்தும் கிடைக்கிறது. அந்த எதிர்பார்ப்பு அதிகரிக்கும்போது காம உணர்ச்சி அதிகரிக்கும்.

மேலே குறிப்பிட்ட எந்த விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கவில்லை எனில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசிவிடுவது நல்லது. பேசும்போது குற்றச்சாட்டுகளாக பேசாமல் கருத்தாக வெளிப்படுத்துங்கள். மீண்டும் நினைவில் கொள்க..சிறந்த உறவில் காமம் மட்டும் அடிப்படை அல்ல.. அதைவிட சுவாரஸ்யம் தரும் விஷயங்கள் நிறைய உள்ளன. உறவில் வரும் சிக்கல்களை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு இருப்பது பெரும் பிரச்னையே கிடையாது. இருவரும் அமர்ந்து பேசினால், புரிதல் உண்டானால் சரியாகிவிடும்.

இறுதியாக தோழியின் தேவையை புரிந்துகொள்ளுங்கள். இருப்பினும் இதற்கான சிறந்த தீர்வை நீங்களே தேர்வு செய்யுங்கள். ஆனால் அதன் முடிவு இருவரும் ஒற்றுமையுடன் ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Relationship, Sex, Sex satisfaction, Sexual Wellness