• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • வாழ்க்கை துணை உங்களுக்கு தகுதியானவர் இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள்..

வாழ்க்கை துணை உங்களுக்கு தகுதியானவர் இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள்..

காட்சி படம்

காட்சி படம்

வாழ்க்கை துணை உங்களுக்கு ஏற்றவர் இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள் இதோ..

 • Share this:
  ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைவது என்பது சிறந்த வரம். இது எல்லோருக்கும் கிடைக்காது. நண்பர் போல வாழ்க்கை துணை அமைய காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆண், பெண் என இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். ஓரு வருடம் அல்லது 5 வருடம் என ஆண்டு கணக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் காதலித்த போது இருந்ததை போல பாசமாகவும், நட்புடனும் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதே. காதலிக்கும் போது இருந்ததை போல மண வாழ்க்கையிலும் இருக்கும் ஜோடிகளை விரல் விட்டு தான் எண்ண வேண்டும்.

  காதல் திருமணம் அல்லது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு செய்யப்படும் திருமணங்கள் என்று இரண்டிலுமே பெரும்பாலும் வாழ்க்கை துணையினர் ஒருவருக்கொருவர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது. கொஞ்சம் பூசல்கள் நிறைந்தது தான் கல்யாண வாழ்க்கை என்றாலும், சிலருக்கு தங்களது துணையால் முழுக்க ஏமாற்றமும், வேதனையும் தான் மிஞ்சும். ஒரு ஆரோக்கியமான உறவு உங்கள் வாழ்வை உயர்த்தி வளர்ச்சியடைய வாய்ப்பளிக்கிறது. எனவே உங்கள் வாழ்க்கை துணை முற்றிலும் உங்களுக்கு தகுதியானவர் இல்லை என்பதை தெரிந்து கொள்வது எவ்வாறு.?

  மறைமுக அவமதிப்பு: எப்போதும் மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாக உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் குணமுடைய நீங்கள் வழக்கத்திற்கு மாறாக பல காரணங்களினால் சோர்வடைந்திருக்கும் போது, சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கை துணை உங்களை மறைமுகமாக அவமதிக்க கூடும். சோர்வடைந்திருக்கும் உங்களை கண்டு கொள்ளாமல் முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பார்களேயானால் நிச்சயம் உங்களுக்கு ஏற்றவர் இல்லை உங்கள் துணை.

  பேச்சிற்கான முக்கியத்துவம்: முக்கியமான விஷயம் அல்லது இல்லாவிட்டாலும் கூட எப்போது பேசினாலும் நீங்கள் பேசுவதை காத்து கொடுத்து கேட்காத நிலை அல்லது உங்கள் துணையுடன் பேசி கொண்டிருந்தால் மனது ரிலாக்ஸாக இருக்கும் என்று நினைத்து பேச துவங்கினால், அவர் அதை கவனிக்காமல் இருப்பது, எப்போது பேசினாலும் அதை கவனிக்காமல் டிவி, மொபைல் நோண்டுவது என்று குறைந்தபட்ச ஆர்வத்தையே வெளிப்படுத்துவார்கள்.

  வாக்குறுதியை மறப்பது: உங்கள் துணை உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி மற்றும் சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற எப்போதுமே முயற்சி எடுக்காமல் இருப்பார். உங்களை பற்றிய நினைப்பே இல்லாமல் இருப்பது. உங்கள் பிறந்த நாளை கூட மறந்து விடுவது, வேறு முக்கியமான நாட்களை பற்றி நீங்களே அவருக்கு நினைவூட்டினாலும், உங்கள் வார்த்தைக்கு அவர் மதிப்பளிக்காமல் இருப்பார். இதெல்லாம் அவர் உங்கள் மீது போதுமான அக்கறை காட்டவில்லை என்பதற்கான அறிகுறிகள்.

  also read : உங்கள் லைஃப் பார்ட்னரை காலையில் தூக்கத்திலிருந்து உற்சாகமாக எழுப்ப சில ரொமான்டிக் வழிகள்!

  சிந்தனை: உங்களை பற்றிய கவலைகள் துளியும் இல்லாமல் எந்நேரமும் அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பார். உங்கள் கனவுகள், லட்சியங்கள், விருப்பு வெறுப்புகள் பற்றியெல்லாம் யோசிக்காமல் பழிவாங்குவார். எப்போதும் தனக்கும் தனது வேலைக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்து கூடுதலாக உங்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவார். அதையும் மீறி உங்கள் லட்சியங்கள் குறித்து அவரிடம் பேசினால் உங்களை கேலி செய்வார்.

  பிடிக்காத வார்த்தை மன்னிப்பு: சில விஷயங்களில் தவறு உங்கள் துணை மீது தான் இருக்கிறது என்பது அவர் உணர்ந்தாலும் கூட அதற்காக சிறிதும் வருந்த மாட்டார், மன்னிப்பும் கேட்க மாட்டார். சுட்டி காட்டினால் கூட தனது தவறுகளை ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார். தான் செய்தது சரி தான் தவறு இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே கவனம் செலுத்துவார்.

  சுயசந்தேகம் : எப்போதுமே நீங்கள் செலக்ட் செய்யும் பொருட்களுக்காக உங்களை கிண்டல் செய்து கொண்டே இருப்பார். இதனால் ஒரு கட்டத்தில் நாம் சரியாக தான் தேர்வு செய்துள்ளோமா என்ற சந்தேகம் உங்களுக்கே வந்து விடும். உங்களை அவரின் விருப்பத்திற்கு மாற கட்டாயப்படுத்துவார்.

  தேவையற்ற ஆதிக்கம்.. நண்பர்கள் அல்லது பொது இடங்களுக்கு நீங்கள் இருவரும் ஒன்றாக செல்லும் போது உங்கள் மீது அவர் ஆதிக்கம் செலுத்துவார். உங்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சிப்பார். பிறர் முன்னிலையில் உங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: