முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பணிச்சுமை அதிகரித்தால் புரமோஷன் வரப்போகிறது என அர்த்தம்!!

பணிச்சுமை அதிகரித்தால் புரமோஷன் வரப்போகிறது என அர்த்தம்!!

புரமோஷன் வாங்குவது எப்படி?

புரமோஷன் வாங்குவது எப்படி?

நீங்கள் அலுவலகத்தில் ஏறு முகத்தில் சென்று கொண்டிருக்கிறீர்களா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஏதோ கிடைத்த வேலையைச் செய்தோம், மாத சம்பளத்தை வாங்கி வாழ்க்கையை ஓட்டினோம் என்பதில் எந்தவித ருசிகரமும் இருக்காது. நாம் வேலை செய்யும் இடத்தில் கடும் உழைப்பையும், நமது திறமையையும் வெளிக்காட்டி பதவி உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். அதே சமயம், அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அலுவலகத்தில் நிலவும் அரசியல் சிக்கல்கள், பிரச்சனைகள், தனிநபர் துதிபாடல் எனப் பல விஷயங்களை நாம் கடந்து செல்ல வேண்டும். கடின உழைப்பையும் தாண்டி, நேரம் தவறாமை, பொறுப்புகளை ஏற்பது போன்ற திறன்களை நாம் பெற்றிருக்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில், நமக்குப் பதவி உயர்வு வழங்க அலுவலகத்தில் உத்தேசித்துக் கொண்டிருக்கும்போது, அதை யூகித்து அறியாமல், ஏதேனும் சின்ன சண்டையிட்டு அந்த வாய்ப்பை நாமே கெடுத்துக் கொள்கிறோம். அப்படி இல்லாமல், உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது என்பதை நீங்கள் எப்படி உணர்ந்து கொள்ளலாம் என்று இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

அதிக மீட்டிங்குகளுக்கு அழைப்பு:

இதற்கு முன்னர், அலுவலகத்தின் மீட்டிங்குகளுக்கு உங்களுக்கு அழைப்பு இல்லாமல் திடீரென்று அழைப்பு வருகின்றது என்றால், உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது என்று பொருள். குறிப்பாக, அலுவலகத்தின் நடைமுறைகள், சவால்கள் உள்படப் பல விஷயங்களை உங்களுக்குப் புரிய வைக்க இருக்கிறார்கள் என்று பொருள்.

பணிச்சுமை அதிகரிப்பு:

உங்கள் கையில் அதிக பிராஜக்டுகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளை ஒப்படைக்கத் தொடங்குவார்கள். அதிக பொறுப்புகளைக் கொடுக்கும்போது, நீங்கள் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு எந்த அளவுக்கு அதைக் கையாளுகிறீர்கள் என்பதை ஆராய்ந்து பார்ப்பார்கள்.

புது ஊழியருக்கு வழிகாட்டுதல்:

அலுவலகத்தில் உள்ள புதிய ஊழியர் அல்லது இளம் ஊழியருக்கு வழிகாட்டும்படி உங்களை அறிவுறுத்துவார்கள். இது உங்களைத் தலைமை பொறுப்பை நோக்கி நகர்த்துவதற்கான அறிகுறி ஆகும். ஒருவரை வழிநடத்துவதன் மூலம் உங்கள் தலைமைப்பண்பு வெளிப்படும்.

திறமைக்குப் பாராட்டு:

மேல் அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில் உங்களுக்கான பாராட்டுகள் அதிகரிக்கும். உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இதுவும் ஒரு அறிகுறியாகும்.

அலுவலகத்தின் காலிப்பணியிடத்தைக் கண்காணிப்பது:

அலுவலகத்தில் காலிப் பணியிடங்கள் குறித்து வரும் அறிவிப்புகள் மீது கண் வைத்திருங்கள். அந்த உயர் பதவியை எட்டுவதற்கு உங்கள் மேல் அதிகாரி அல்லது சக ஊழியர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவைக் கெட்டியாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தகவல் தொடர்பு திறன்:

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணும் திறன், உத்திகளை முன்வைக்கும் திறமை மற்றும் சரளமாகப் பேசுதல், சக ஊழியர்களை அரவணைத்துச் செல்லுதல் ஆகியவை பதவி உயர்வு கிடைப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் ஆகும். அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்.

First published:

Tags: Office Work, Social skills