உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒருவர் மற்றொரு நபரை விமர்சிக்க, சங்கடப்படுத்த, அவமானப்படுத்த மற்றும் குற்றம் சாட்ட அல்லது வேறுவிதமாக ஒருவரை கையாள உணர்ச்சிகளை ஆயுதமாக பயன்படுத்துவதாகும். சுருக்கமாக சொன்னால் ஒரு நபர் மற்றொருவரை கட்டுப்படுத்த அவரது உணர்ச்சிகளை பயன்படுத்தி கொள்ளும் தவறான அணுகுமுறையே உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம். உணர்ச்சி ரீதியாக துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் கண்டு செயல்படுவது மிகவும் கடினம்.
நீங்கள் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால், நீங்கள் தான் தவறு செய்தீர்கள் என்று உங்களை நீங்களே நம்பும்படி அவர் செய்யும் போது உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் ஏற்படுகிறது. உங்கள் உணர்வுகளை புறக்கணித்து குறிப்பிட்ட சம்பவங்களுக்கு உங்களை மட்டுமே குற்றவாளியாக்குவதன் மூலம் அவர்கள் கவனத்தை தங்களுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். தனக்கு நடக்கும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தை ஒருவர் அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்.
கேஸ்லைட்டிங் (Gaslighting):
கேஸ்லைட்டிங் என்பது ஒரு சரியில்லாத உறவுவில் அடிக்கடி ஏற்படும் கையாளுதலின் ஒரு வடிவமாகும். இந்த வகை உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தில், ஒரு நபர் தனது பார்ட்னர் தவறு செய்யும் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவரை குற்றவாளியாக உணர வைக்கிறார். உண்மை வேறு ஒன்றாக இருந்தாலும் கூட இந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர் தனது பார்ட்னரை முற்றிலும் வித்தியாசமான ஒன்றை நம்ப வைக்கிறார். ஒரு தவறான கதையை உருவாக்கி பார்ட்னர்ஸின் யதார்த்த செயல்களை கூட கேள்விக்குட்படுத்துகிறார்கள் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவார்.
நார்சிசிசம் (Narcissism):
இவ்வகை துஷ்பிரயோகம் செய்பவர் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு பேசும் மற்றும் செயல்படும் ஒரு வகை உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் செய்பவராக இருக்கிறார். இப்படி செய்பவர் தன்னைத்தானே பெருமை பேசி கொண்டே இருப்பார் மற்றும் மிகவும் அகங்காரமாக இருக்கிறார். தான் எல்லோரையும் விட உரிமையுள்ளவர் மற்றும் உயர்ந்தவர்கள் என்று எண்ணத்திலேயே வாழ்வார்கள். இப்படிப்பட்டவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஒருவர் தன்னை மிகவும் தாழ்ந்தவராக உணர்வார்.
Also Read : உங்களுக்கு இரத்த அழுத்தம் சார்ந்த நோய் பாதிப்பு உள்ளதா..? அப்போ அவசியம் இதை படிங்க..
மேனிப்யூலேஷன் (Manipulation):
இந்த வகையில் ஒரு நபர் அவர்கள் விரும்புவதை பெற ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுவார். இவர்கள் தங்கள் துணையை நேர்மையற்ற வழியில் உணர்வுபூர்வமாக கையாள்வார்கள். தங்கள் பார்ட்னர்களை அவர்கள் அறியாமலேயே சூழ்நிலைக்கு பொறுப்பாக உணர வைப்பார்கள் இந்த மேனிப்யூலேஷன் வகை உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தை செய்பவர்கள்.
கட்டாய தனிமைப்படுத்துதல் (Forced isolation):
இவ்வகை துஷ்பிரயோகம் செய்பவர் தன்னுடன் உறவில் இருக்கும் நபர் அவருடன் இருக்கும் உறவை தவிர அனைத்து உணர்ச்சி ரீதியான உறவுகளையும் மெல்ல மெல்ல துண்டிக்க வைக்கிறார். இறுதியாக தனது பார்ட்னருக்கு தான் மட்டுமே உறவு என்கிற நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறார். இந்த செயலால் உணர்ச்சி துஷ்பிரயோகம் செய்பவரின் பார்ட்னர் தனிமை மட்டும் வெறுமையை உணர்வார். இது பாதிக்கப்படுவோருக்கு மிகுந்த கவலை, சுயமரியாதை பிரச்சினைகள் மற்றும் குற்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
Also Read : அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காதல் பாடங்கள்...
விழுங்குதல் (Engulfment):
'engulf' என்ற வினைச்சொல் எதையாவது விழுங்குவது அல்லது மூழ்குவதை குறிக்கிறது. இங்கே நாம் ஒரு உளவியல் அர்த்தத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும் போது Engulfment என்பது உறவுகளில் ஒருவரை அதிகமாக மூழ்கடிக்கு போக்கை குறிக்கிறது. அதாவது எந்த அல்லது எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒருவர் தனது பார்ட்னரை மட்டுமே சார்ந்து இருப்பது. இந்த வகை துஷ்பிரயோகத்தை செய்பவர்கள் தங்கள் பார்ட்னர் எல்லா விஷயங்களுக்கும் பார்ட்னர் தங்களை சார்ந்து இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.