துணை உங்களிடம் காட்டுவது அன்பா ? கட்டுப்பாடா ? கண்டறிய சில வழிமுறைகள்

கட்டுப்படுத்த நினைக்கும் துணை; அன்பு, பாதுகாப்பு இரண்டையும் ஆளத் தெரியாமல் இருப்பார்கள்.

Web Desk | news18
Updated: February 26, 2019, 9:09 PM IST
துணை உங்களிடம் காட்டுவது அன்பா ? கட்டுப்பாடா ? கண்டறிய சில வழிமுறைகள்
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: February 26, 2019, 9:09 PM IST
உங்களை கட்டுப்படுத்தும் துணையாக இருந்தால் நிச்சயம் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. ஆனால் சிலருக்கு தன் துணை தன்னைக் கட்டுப்படுத்துவது கூட தெரியாமல் அதை காதல் என நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி உங்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் துணை; அன்பு, பாதுகாப்பு இவை இரண்டையும் கையாளத் தெரியாமல் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் வாழ்கையில் வெறுப்பு வந்துவிடும். அதை எவ்வாறு கண்டறிவது, எப்படி அதிலிருந்து வெளியேறுவது என்று பார்க்கலாம்.எப்போதும் தொடர்பில் இருக்க நினைப்பது : பலராலும் இதைக் கண்டறியவே முடியாது.  கட்டுப்படுத்த நினைக்கும் துணையின் செயலுக்கும், உண்மையிலேயே உங்கள் பிரிவால் வருந்தும் துணையின் செயலுக்கும் வேறுபாடுகள் பல இருக்கின்றன. உண்மையான துணை, தன்னுடைய பிசியான வேலைகளுக்கு நடுவே தொடர்பு கொண்டு பேசுவது, காலையில் முதல் குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவது, உங்களின் நினைப்பு வந்தால் உடனே மெசேஜ் செய்து பேசுவது என்றுதான் இருப்பார்கள்.

ஆனால், கட்டுப்படுத்த நினைக்கும் துணை தான் எண்ண செய்தாலும் அதை உடனுக்குடன் சொல்வார்கள். இதனால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என தெரிந்து கொள்வார்கள். நீங்கள் நண்பர்களுடன் இருந்தாலும் தொடர்ந்து ஃபோன், மெசேஜ் செய்து கொண்டே இருப்பது, நீங்கள் நண்பர்களுடன் வெளியே செய்ய திட்டமிட்டிருந்தால் உடனே அவர் நாம் உனக்கு பிடித்த இடத்திற்கு, எங்கேயாவது போலாமா என வேறொரு திட்டம் போட்டு அழைத்துச் சென்றுவிடுவார்கள். துணையின் ஃபோன் அல்லது மெசேஜிற்கு பதில் அளிக்கவில்லை என்றால் கடுமையாகக் கோபப்படுவது என உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பார்.நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தவிர்த்தல் : துணை உங்கள் மீது அளவு கடந்த அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துவதால் அதில் மனம் உருகியிருப்பீர்கள். அதனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களைக் கூட முக்கியமானவர்களாக நினைக்கமாட்டீர்கள். அவர்களுடன் பேசும் போது கூட முழு ஈடுபாட்டோடு இருக்க மாட்டீர்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு விலக நினைப்பீர்கள். உங்கள் துணையும் அவர்களுடன் நேரம் ஒதுக்கக் கூட இடமளிக்கமாட்டார். ஆனால் அது தெரியாமல் அவரின் பாச வலையில் சிக்கிக் கொள்வீர்கள். ஒரு கட்டத்தில் உங்களைச் சுற்றி யாரும் இல்லாதபோதுதான் அதை உணர்வீர்கள். அப்போதுதான் நீங்கள் செய்த தவறு புரியும். இந்த வாழ்க்கை சரியானதுதானா என்று யோசிப்பீர்கள்.விமர்சனங்களால் மனவருத்தம் அடைவீர்கள் : இந்தச் செயல் உடனே நடந்துவிடாது. திருமணம் அல்லது அவரைவிட்டு இனி விலகவே மாட்டீர்கள் என்ற எண்ணம் வரும்போதுதான் உங்களை விமர்சனம் செய்வார்கள். உங்களை தாழ்வாகக் கருதும்  வகையில் உங்கள் செயல்களை விமர்சனம் செய்வார்கள். அதுவும் நேரடியாக இருக்காது. நகைச்சுவையாக உங்களைக் கிண்டல் செய்வது போல் விமர்சிப்பார். உங்கள் பணி தொடர்பான விஷயங்களை கூறினாலும், அதைப் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் கிண்டலாக விமர்சிப்பார். உங்களை மட்டம் தட்டி அவரின் பாதையில் உங்களை வழி நடத்துவார். ஆனால், அதை நீங்கள் அக்கறையாக வழிகாட்டுகிறார் என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை சிந்திக்கவிடாமல், அவரின் கட்டளைகளை அன்பாகக் கூறி அதை செய்யச்சொல்வார். அவரை மட்டுமே சார்ந்து வாழும் வகையில் மாற்றி வைத்திருப்பார்.முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் : சுதந்திரமில்லாமல் துணையை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என நினைக்கும் துணையுடன் வாழும் வாழ்க்கை மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்லும். அது ஆரோக்கியமான உறவாகவும் இருக்காது. உங்கள் சுதந்திரத்தையும் மறந்துவிடுவீர்கள். அதனால் ஆரம்பத்திலேயே அந்த உறவை வளரவிடாமல் அவரின் கட்டுப்பாடுகளை உணர வையுங்கள். கட்டுப்பாடுகளைத் தாண்டியும் சில நற்பண்புகள் அவரிடம் இருந்தால் அவரை சமாளிக்க முடியும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அவரிடம் பொறுமையாக புரியவைத்து நம்பிக்கையை ஏற்படுத்தி, ஆனந்தமாக வாழுங்கள். அன்பு அனைத்தையும் மாற்றக்கூடியதே...
First published: February 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...