ஆணாக இருந்தும் பெண்ணாக உணரும் உங்கள் விருப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது என தயக்கமா..? பதிலளிக்கிறார் மனநல ஆலோசகர் பல்லவி..!

மாதிரி படம்

ஏராளமான மக்கள் தாங்கள் விரும்பும் இன்பத்தை, குறிப்பாக பாலியல் இன்பத்தை கட்டுப்படுத்திக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

  • Share this:
கேள்வி : நான் இதுவரை யாரிடமும் இது குறித்து வெளிப்படையாக பேசியதில்லை. இதை சொன்னால் குடும்பத்தில் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் நான் மறைத்துகொண்டிருக்கிறேன். அதாவது நான் பெண்களின் உடை, பாவனைகளால் மிகவும் ஈர்க்கப்படுகிறேன். பெண் ஆளுமை என்னிடம் உள்ளதோ என்று தோன்றுகிறது. நான் ஆணாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..  அதேசமயம் பெண்ணாக உணர்வதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக பெண்களைப்போல் இருக்கவே அதிகம் விரும்புகிறேன். அவர்களின் உடைகளை அணிய விரும்புறேன். திருநங்கைகளைப் பார்த்தாலும் ஈர்க்கப்படுகிறேன். நான் என்ன செய்வது..?

பதில் : நீங்கள் உணரும் இந்த அனுபவமானது பாலின மாற்றத்தில் பொதுவான ஒன்றுதான். இருப்பினும் உங்கள் ஆசைகள், விருப்பங்களை உங்களுக்குள்ளேயே ஒளித்து வைத்திருப்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதேசமயம் அதை வெளிப்படுத்தக் கூடாது என்று என்னும் அளவிற்கு அசிங்கமான விஷயமும் இல்லை. ஆண்கள் பலரும் இந்த உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள்.

பாலினம் என்பது நம் வாழ்வின் பெரும்பகுதிகளில் மறுக்கமுடியாத முக்கிய பகுதியாகும். மனித இனத்தில் இரண்டு பாலினம் மட்டுமே இருப்பதாக சிறு வயதிலிருந்தே கற்றிருக்கிறோம். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றே அறியப்பட்டுள்ளோம். ஆனால் அவை முற்றிலும் கட்டுக்கதை.

செக்ஸ் என்பது நமது குரோமோசோம்களின் உருவாக்கத்தின் அடிப்படையில் பிறப்புறுப்பு உருவாகிறது. அதை வைத்துதான் பிறப்பிலேயே நாம் ஆணா , பெண்ணா என வகைப்படுத்தப்படுத்தப்படுகிறோம். இருப்பினும், இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் போலவே, பிறப்புறுப்பு மற்றும் குரோமோசோம்கள் வேறுபடுகின்றன, மேலும் எல்லோரும் இந்த பைனரி வகைகளுக்குள் சுத்தமாக வருவதில்லை.அதேபோல் பாலினம் என்பது உயிரியல் சார்ந்த விஷயமும் அல்ல. நாம் சிறு வயதிலிருந்தே நம் பிறப்புறுப்புக்கு ஏற்ப வளர்க்கப்படுகிறோம்.. அதுதான் உண்மை... இது சமூக கட்டமைப்பு.. இந்த கட்டமைப்பை நம் விருப்பத்திற்கு ஏற்ப கட்டியமைத்துள்ளோம். பாலினத்திற்கு ஏற்ப நாம் எவ்வாறு உடை அணிய வேண்டும், சாப்பிட வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் , திருமணம் என எல்லாவற்றிலும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொண்டுள்ளோம்.

READ ALSO: வயதிற்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில்தான் உடலுறவு கொள்ள வேண்டுமாம்..! உங்க வயதிற்கு எது ஏற்ற நேரம் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஆண்கள் எனில் பேண்ட் சட்டைதான் அணிய வேண்டும்.. பெண் எனில் புடவைதான் கட்ட வேண்டும். ஆண்கள் முடியை குறைவாகவும், பெண்கள் நீளமாகவும் வளர்க்க வேண்டும் என்பதும் கற்பிக்கப்பட்ட ஒன்று. இந்த பாலினத்திற்குள்தான் நீ இருக்க வேண்டும் என நமக்கே தெரியாமல் வெளிப்படையாகவும்.. அதேசமயம் மறைமுகமாகவும் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதைத்தாண்டி புதிவிதமான ஒரு விஷயம் தெரியும்போது அது வட்டத்திற்குள் அடங்காத வித்தியாசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே பெரியவர்கள் கற்றுக்கொடுத்த அந்த வட்டத்திற்குள் நீங்கள் ஃபிட் ஆகவில்லை என்பதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. அசிங்கமாக நினைக்கவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு , உங்களுக்குள்ளான உணர்ச்சிகளுக்கேற்ப வாழ்கிறீர்கள்.

ஆணாகப் பிறந்தவர்கள் பெண்களின் உடை அணிய விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெண்மையில் என்னதான் உள்ளது என தெரிந்துகொள்வதற்கான உங்களுடைய விருப்பமாகவும் இருக்கலாம். புதிய ஆடைகள், அதன் நிறம், அச்சு என ஆணாக நீங்கள் அனுபவிக்காத ஒன்று பெண்களிடம் இருப்பதை அனுபவிக்க விரும்புவதாக இருக்கலாம். பெண்களின் உணர்ச்சி, மென்மை, பண்பு, ஆளுமை போன்றவற்றையும் நீங்கள் அனுபவிக்க விரும்பலாம். எனவே இந்த ஆடைகளை அணியும்போது உங்களுக்குள் இருக்கும் பெண்மையை தட்டி எழுப்பலாம்.உங்களுடைய இரண்டாவது பிரச்னை ஒரு பெண்மை உங்களுக்குள் ஆதிக்கம் செலுத்துவது... இதுவும் தவறான விஷயமல்ல. இதுவும் பொதுவான ஆசைதான். இதுவும் நீங்கள் உடை அணிய விரும்பும் விஷயம் போன்றதுதான். இதற்குக் காரணம் ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டிப்போட்டுள்ள வட்டத்திற்குள் பயணிப்பதன் வெளிப்பாடுதான் காரணம். நீங்கள் உங்கள் ஆசைகளைப்போல் பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். பெண்மைக்கான விஷயங்களில் ஒன்றிணைந்திருங்கள். பொதுவாக ஒரு விஷயத்திற்கு அழுத்தம் தரும்போது அது உடைத்துக்கொண்டு மேலெழும்பும். அதுபோல் நீங்கள் குடும்ப அழுத்தம், பொறுருப்புகளால் கட்டப்பட்டிருக்கும் முடிச்சுகளை அவிழ்த்துவிட்டு தினசரி வாழ்க்கையை வாழ விருப்பம்போல் முடிவெடுங்கள்.

 ஏராளமான மக்கள் தாங்கள் விரும்பும் இன்பத்தை, குறிப்பாக பாலியல் இன்பத்தை கட்டுப்படுத்திக்கொண்டுதான் வாழ்கிறார்கள். ஏனெனில் இது நமது பாரம்பரிய உலகில் பிரதானமாகக் கருதப்படுவதில்லை. நம்முடைய விருப்பம்போல் பாலியல் வாழ்க்கையை வாழ ஒரு வித தைரியம் தேவைப்படுகிறது. முதலில் உங்களின் தேவை, ஆசைகள் குறித்து உங்களுக்குள் உரையாடல் நடத்த வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை காதலிக்க வேண்டும். முதலில் நீங்கள் யார் என்பதில் உங்களுக்கு உங்கள் மீது காதல் இருக்க வேண்டும். இதற்கு சிறந்த வழி.. உங்களைப்போன்ற உணர்ச்சிகள் கொண்டவர்களிடம் பேச வேண்டும். இதற்கென தனியாக ஆன்லைன் சமூக வலைதளங்களும் உள்ளன.
Published by:Sivaranjani E
First published: