ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் நெகட்டிவாகவே பேசக்கூடியவரா..? சமாளிக்க ஈசியான டிப்ஸ்..!

உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் நெகட்டிவாகவே பேசக்கூடியவரா..? சமாளிக்க ஈசியான டிப்ஸ்..!

இத்தகைய நபர்களை பொறுமையோடு சகித்துக்கொள்வது என்பதை விட, அவர்களுடன் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணரச் செய்யும். தொடர்ந்து ஒருவரின் எதிர்மறையான செயல்களை, நடத்தையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

இத்தகைய நபர்களை பொறுமையோடு சகித்துக்கொள்வது என்பதை விட, அவர்களுடன் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணரச் செய்யும். தொடர்ந்து ஒருவரின் எதிர்மறையான செயல்களை, நடத்தையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

இத்தகைய நபர்களை பொறுமையோடு சகித்துக்கொள்வது என்பதை விட, அவர்களுடன் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணரச் செய்யும். தொடர்ந்து ஒருவரின் எதிர்மறையான செயல்களை, நடத்தையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

நெகட்டிவ் என்று கூறப்படும் எதிர்மறையான வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து வாழ்வது மிகவும் கடினமானது. இத்தகைய நபர்களை பொறுமையோடு சகித்துக்கொள்வது என்பதை விட, அவர்களுடன் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணரச் செய்யும். தொடர்ந்து ஒருவரின் எதிர்மறையான செயல்களை, நடத்தையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. குறிப்பாக, அது வாழ்க்கைத்துணை என்று வரும் போது, சகிக்கும் தன்மை மிகவும் குறைந்து விடும்.

உங்கள் துணையின் இயல்பான மனநிலையே எதிர்மறையானது என்றால், அதை எதிர்கொள்வது கிட்டத்தட்ட இயலாத ஒன்று. இதைப் போன்ற வாழ்க்கைத்துணையை கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே.,

வாழ்க்கைத்துணையின் செயல்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் :

எப்போதுமே மற்றவர்களின் செயல்கள் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர்க்க முடியாதது. ஆனால், அதற்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். அதே போல, துணையின் எதிர்மறை குணத்துக்கும், உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் அவர்களின் மனப்போராட்டம். நீங்கள் அவர்களுடன் வாழ்வதால், அது உங்கள் மீது பிரதிபலிக்கிறது. எனவே, அது எப்போதும் உங்களால் ஏற்பட்டது அல்லது உங்களைப் பற்றியது அல்ல.

இந்த எதிர்மறை குணங்கள் அல்லது நடத்தை உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே உங்கள் பொறுப்பு. உண்மையாகவே, நெகட்டிவ் ஆன நபருடன் / பெண்ணுடன் வாழ்வது சவாலானது. ஆனால், அதை உங்களால் எதிர்கொண்டு, வெல்ல முடியும்.

நேர்மறை எண்ணங்கள், செயல்களை விதைத்திடுங்கள் :

நீங்கள் ஒரு பாசிட்டிவ்வான நபராக இருந்தால், உங்கள் வீட்டில் உங்களின் நேர்மறை சிந்தனைகளை, செயல்களை விதைக்க வேண்டும். உங்கள் துணை எதிர்மறையாக ஏதேனும் சொன்னால், நீங்கள் அதற்கு உடனடியாக நேர்மறையாக பேச வேண்டும். இப்படி செய்வது, வாழ்வின் நல்ல விஷயங்களில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப உதவும். அது மட்டுமின்றி, நீங்களும் உங்கள் துணையும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது அவசியம்.

எதில் தவறு நிகழ்கிறது என்பதை கண்டறியுங்கள் :

ஒருவர் நெகட்டிவான நபர் என்பதை முடிவு செய்யும் முன்பு, நீங்கள் அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். யாருமே, முழுக்க முழுக்க எதிர்மறை நடத்தை அல்லது சிந்தனையோடு எப்போதும் இருப்பதில்லை. சில நேரங்களில், அவ்வாறு நடப்பதற்கான காரணங்கள் இருக்கக் கூடும் அல்லது சூழ்நிலைகள் அவர்களை பாதித்து இருக்கலாம். அவர்களுடன் உரையாடி, என்ன பிரச்சனை என்பதை கண்டறியலாம். பல நேரங்களில், மனம் விட்டுப் பேசுவது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

ஒரு வேளை, அந்த சூழ்நிலையிலும் அவர்கள் பேச மறுத்தால், நீங்களே முயற்சி செய்யலாம். எதிர்மறை துணையை சகித்துக்கொள்வது, வெறுப்பாக உணர்வது அல்லது கோபத்தைக் காட்டுவதை விட, அவர்களுக்கு உதவி செய்வது இருவருக்குமே நன்மையாக இருக்கும்.

வாழ்க்கைத்துணை சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள் :

பெரும்பாலான தம்பதிகள், தன்னுடைய வாழ்க்கைத்துணை தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக் கூட கவனிப்பதில் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

எனவே, உங்கள் வாழ்க்கைத்துணை தனக்கு நேர்ந்ததைப் பற்றி உங்களிடம் ஏதேனும் கூறினால், அதனை கவனமாகக் கேட்கவும். பல நேரம், வெளிப்படையாக பேசாமல், மறைமுகமாகத் தெரிவிக்க அல்லது குறிப்பால் உணர்த்த முயற்சி செய்வார்கள். எனவே, உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொண்டு, அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

நேர்மறை குணங்களை பாராட்டி, அழகான நினைவுகளின் மீது கவனம் செலுத்துங்கள் :

நீங்கள் ஒருவரை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அவர்கள் முழுக்க முழுக்க எதிர்மறையான நபராக இருக்க முடியாது. நிச்சயமாக நேர்மறை குணங்கள் இருக்கும்.

தொடர்ந்து எதிர்மறையான நடத்தையையே எதிர்கொண்ட உங்களுக்கு, உங்கள் துணையின் நேர்மறை நடத்தை அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் நினைவில் கொண்டுவருவது கடிமனாகவே இருக்கும். ஆனால், அவை உங்களை பெரிய அளவில் மகிழ்விக்கும். அதே போல, அந்த அழகான மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் துணைக்கு நினைவூட்டு, எதிர்மறை எண்ணங்களை குறைக்க உதவி செய்யலாம்.

மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டெடுப்பது, உங்களையும் திருப்தியான மனநிலையை அடைய உதவும்.

எல்லைகள் வகுக்கவும் :

எந்த உறவாக இருந்தாலும், எதிர்மறையான நபர்களிடம் சில எல்லைகள் வகுப்பது நல்லது. குறிப்பாக, வாழ்க்கைத்துணையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் பெரிய பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, எல்லைகளை வகுக்க வேண்டும்.

குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே துணையின் எதிர்மறையான செயல் அல்லது பேச்சை தாங்கிக்கொள்வது என்ற எல்லையை நிர்ணயிக்கவும். இவ்வாறு எல்லைகளை வகுப்பது, இரண்டு விதமாக உங்களுக்கு உதவக் கூடும்.

முதாலாவது, உங்கள் வாழ்க்கைத்துணை எதிர்மறையாக தன் எல்லையை மீறி நடந்து கொள்கிறார் என்பதை வெளிப்படையாக அவருக்குத் தெரியப்படுத்தும். சில நேரங்களில், தான் என்ன செய்கிறோம் அல்லது பேசுகிறோம் என்பதே எதிர்மறையான நபர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டு. நீங்கள் அதைக் கூறும் போது, தங்களின் தவறை உணரலாம்.

இரண்டாவது, நீங்கள் எல்லைகள் வகுப்பது எதிர்மறை தாக்கத்தை குறைத்து, உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். தொடர்ச்சியான எதிர்மறை தாக்குதல், மனம் மற்றும் சில நேரங்களில் உடலளவில் சோர்வை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள, எதிர்மறையான சிந்தனைகள் பாதிப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

உங்களைச் சுற்றி நேர்மறையான நபர்களின் நட்பும், உறவும் இருப்பதை உறுதி செய்யுங்கள் :

பாசிட்டிவ் எண்ணங்கள் வளர்ப்பதற்கும், அதை செயல்படுத்துவதற்கும், உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் நேர்மறை சிந்தனையாளர்களாக, பாசிட்டிவ் நடத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

எதிர்மறை ஆற்றலை விலக்க, நேர்மறை நபர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வதற்கும் இது மிகவும் அவசியம். நீங்கள் நேசிப்பவர்களிடம், உங்கள் நெருக்கமான நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது, உங்களைத் தாக்கும் எதிர்மறை ஆற்றலிடமிருந்து விடுபட உதவி செய்யும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Love Tips, Marriage, Relationship Tips