HOME»NEWS»LIFESTYLE»relationship how to create sex feel to your wife esr swpb

உங்கள் மனைவிக்கு செக்ஸ் ஆசையே இல்லையா..? இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்..? பதிலளிக்கிறார் பல்லவி..!

மனிதனில் உடலளவிலும் மனதளவிலும் செக்ஸ் ஈர்ப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவற்றில் இரண்டு வகைகள் உண்டு.

உங்கள் மனைவிக்கு செக்ஸ் ஆசையே இல்லையா..? இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்..? பதிலளிக்கிறார் பல்லவி..!
மாதிரி படம்
  • Share this:

கேள்வி : இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை....நானும் என் மனைவியும் உடலுறவு வைத்து பல மாதங்கள் ஆகின்றன. பெரும்பாலான நாட்கள் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. என் தேவையை எப்படி பூர்த்தி செய்துகொள்வது..?

பதில் : இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று துணைக்கு பாலியல் ஆசை குறைவாக இருக்கலாம். இரண்டாவது பாரம்பரிய வழக்கத்தின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் எனில் செக்ஸ் அவர்களுக்கு அசிங்கமான  விஷயமாக இருக்கலாம். இந்த பிற்போக்கு மனநிலையில் உங்கள் மனைவி இருந்தால் இதை சரி செய்தே ஆக வேண்டும். அதற்கு சில கைத்தேர்ந்த இயக்குநர்களின் படங்களை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டுங்கள்.

அபர்ணா சென், அலங்கிரிதா ஷிரிவஸ்தவா மற்றும் லீலா யாதவ் ஆகியோர் தங்கள் திரைப்படங்களில் மிடில் கிளாஸ் பெண்களின் வாழ்க்கையில் உடலுறவு ஆசைகளை எப்படி கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருப்பார்கள். குறிப்பாக பரமா, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, பார்சத் போன்ற படங்கள் மிகவும் சிறப்பு மிக்க படங்களாகும். இந்த படங்களை துணையுடன் சேர்ந்து வீட்டில் பாருங்கள். அதுகுறித்து கலந்துரையாடுங்கள். செக்ஸ் அழுத்தம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம். ஒரு உறவுக்கு அது ஏன் அவசியம் போன்ற விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுங்கள். இதனால் அவர்கள் அந்த எண்ணத்திலிருந்து வெளிவரலாம்.





ஒருவேளை அவருக்கு செக்ஸ் மீது குறைவான ஆசைதான் காரணமாக இருந்தால் அதன் காரணத்தை ஆராயுங்கள். மனிதனில் இரு வகை செக்ஸ் ஆசை கொண்டவர்கள் உள்ளனர். குறைந்த அல்லது அதீத ஆசைக்கொண்டவர்கள் உள்ளனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள் மனிதனில் உடலளவிலும் மனதளவிலும் செக்ஸ் ஈர்ப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவற்றில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தொடர்ச்சியான செக்ஸ் ஆசை கொண்டவர்கள். இரண்டாவது சிக்னல் கொடுத்தால் மட்டும் இயங்கக் கூடியது. இவை இரண்டும் முற்றிலும் எதிர் திசையில் இருக்கக் கூடியவை. இப்படிப்பட்ட இருவரும் இணையும்போதுதான் அவர்களுக்குள் குழப்பம், ஏமாற்றம் ஏற்படுகிறது. பொதுவான ஆண்கள் தொடர்ச்சியான செக்ஸ் ஆசைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். பெண்கள் சிக்னல் கொடுத்தால் மட்டும் இயங்குவார்கள்.

குண்டாக இருப்பதால் அசிங்கமாக நினைக்கிறீர்களா..? மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே வெறுக்கிறீர்களா..? உங்களுக்கான சிறந்த பதில் இதோ...

 

இதில் தொடர்ச்சியான செக்ஸ் ஆசைக் கொண்ட அதாவது...ஆண்கள்தான் உடலுறவுக்கு பெண்ணை தூண்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான செக்ஸ் ஆசைக் கொண்ட ஆண்களுக்கு ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் , ஒரு நாளைக்கு 4 , 5 முறைக் கூட செக்ஸ் மூட் வரும். ஆனால் சிக்னல் கொடுத்தால் மட்டும் இயங்கும் பெண்களுக்கு எப்போதாவது மட்டும்தான் செக்ஸ் ஆசை வரும். ஆனாலும் சில பெண்களுக்கு அது செக்ஸ் ஆசை என்பது கூட தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு குறிப்பிட்ட இடம், நேரம், சூழலைப் பொருத்து கூட செக்ஸ் மூட் வரும்.

ஆனால் பலரும் சில திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு செக்ஸ் ஆசை என்பது எப்போது வேண்டுமானாலும் , தொடர்ச்சியாக வரக்கூடியது என்ற எண்ணம்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மைக் கிடையாது. இப்படி வெவ்வேறான செக்ஸ் ஈர்ப்பு கொண்டவர்களால் இணைந்து வாழ முடியாது என்பதும் தவறான கருத்து. இப்படிபட்ட துணை அமைந்தால் சற்று நீங்கள் கூடுதல் உழைப்பை அளிக்க வேண்டும். அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு செக்ஸ் மூட் வருவதற்கான சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். அவர்களுக்கு எந்த விஷயம் செக்ஸ் மூடை கொண்டு வரும் என்பதை அறிந்து அதை செய்தாலே உங்கள் பிரச்னை முடிந்தது.



செக்ஸ் ஆசையை தூண்டிவிடுவதிலும் இரண்டு வகைகள் உள்ளன. உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் முயற்சி செய்யலாம். உடலளவில் எனில் அவர்களுக்கு அதிக உணர்ச்சியை உண்டாக்கக் கூடிய இடங்களில் கை வைத்தல், முத்தமிடுதல் என செய்தால் அவர்களுக்கு செக்ஸ் ஆசை உண்டாகும்.

மனதளவில் எனில் அவர்களுக்கு செக்ஸ் செய்யும் போது எழும் சத்தம், முத்தச் சத்தம், செக்ஸ் ஆசையை தூண்டும் பாடல்கள், படங்கள் போன்றவை அவர்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும். தொடர்ச்சியான செக்ஸ் ஆசைக் கொண்டவர்களுக்கு இப்படியான விஷயங்கள் உடலளவில் ஈடுபடும் முன்பே மனதளவில் கற்பனையில் உடலுறவில் ஈடுபட்டுவிடுவார்கள். அதனால்தான் துணையைப் பார்த்ததும் பாய்ந்து ஓடுவார்கள். ஆனால் சிக்னல் கொடுத்தால் மட்டும் இயங்கக் கூடியவர்களுக்கு இந்த மனதளவு விஷயங்களைக் காட்டிலும் உடலளவில் ஆசையைத் தூண்ட வேண்டும்.

எனவே நீங்கள் தொடர்ச்சியான செக்ஸ் ஆசைக் கொண்டவர் எனில் உடலில் கை வைப்பதன் மூலமோ முத்தமிடுவதன் மூலமோ செக்ஸ் ஆசையை தூண்டுங்கள். ஒருவேளை நீங்கள் சிக்னல் கொடுத்தால் இயங்கக் கூடியவர் எனில் துணையிடம் வெளிப்படையாக கூறி செக்ஸ் ஆசையை தூண்டச்சொல்லுங்கள். அதேபோல் இப்படிப்பட்ட உறவில் பல கற்பனைகளுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் தொடங்குங்கள். முதலில் உடலளவில் ஆசையைத் தூண்ட அவர்களை முதுகில் செல்லமாக தடவலாம். கைகளை இறுக்கப் பிடித்து முத்தமிடலாம். கழுத்தில் முத்தமிடலாம். கால் பாதங்களைப் பிடித்து மசாஜ் செய்யலாம். அவர் எவ்வளவு செக்ஸியாக இருக்கிறார் என வார்த்தைகளால் விவரித்து ஆசையை தூண்டலாம். இப்படி உடலளவில் ஆசையைத் தூண்டி பின் செக்ஸில் ஈடுபட்டால் அது திருப்தியான உடலுறவாக அமையும்.

 

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: