பெண்களை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா..? அதை மாற்ற உங்களுக்கான ஆலோசனை

பெண்களை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா..? அதை மாற்ற உங்களுக்கான ஆலோசனை

மாதிரி படம்

பெண்களை வெறும் உடல் சார்ந்து மட்டும் , உறுப்புகள் சார்ந்து மட்டும் அணுகாமல் மரியாதையுடன் பாருங்கள்.

  • Share this:
கேள்வி : என்னுடைய கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியும் என நம்புகிறேன்... சமீப நாட்களாக எனக்கு பாலியல் உணர்வு அதிகத்திருப்பதாக உணர்கிறேன். குறிப்பாக சற்று உடல் பருமனான, பெரிய மார்பகங்கள், தடித்த, நீளமான உதடுகளைக் கொண்ட பெண்களைக் கண்டால் மிகவும் ஈர்க்கப்படுகிறேன். அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றுகிறது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை தினமும் காண நேர்ந்தால் அவ்வாறு தோன்றுவதில்லை. நான் ரசிக்கும் பெண்களிடமும் அவ்வாறு தோன்றுவதில்லை. வெளியிடங்களில் பார்க்கும், கடந்து செல்லும் பெண்களிடமே இவ்வாறு தோன்றுகிறது.

நான் என்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொள்கிறேன். அந்த பெண்களை வெளியிடங்களில் காண நேர்ந்தாலோ , பேச நேர்ந்தாலோ அவர்களின் கண்களைப் பார்த்து என்னால் பேச முடியவில்லை. சில நேரங்களில் அந்த பெண்களுக்கு நான் எங்கு பார்க்கிறேன் என என்றைக்காவது தெரிந்தால் பெரும் சங்கடமாகிவிடும். இதனால் பிரச்னைகள் உருவாவதை விரும்பவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன்.அதேபோல் பெண்களை இப்படி பார்ப்பதும், நினைப்பதும் மிகவும் தவறு என்பதையும் முழுமையாக உணர்கிறேன். என்னால் அந்த பெண்கள் அசௌகரியமாக உணர்வதையும் நான் விரும்பவில்லை. இருப்பினும் இந்த மாதிரியான பெண்களை தினம் தினம் கடக்க நேரிடும். தவிர்க்கவியலாது. எனவே நான் என்ன செய்ய வேண்டும்..?

பதில் : முதலில் பாலியல் ஈர்ப்பு என்பது இயல்பானது. இயற்கையானது என்கிற உங்கள் புரிதலை மிகவும் பாராட்டுகிறேன். அதேபோல் பெண்கள் சந்திக்கும் தினசரி பிரச்னைகளைப் பற்றி புரிந்து வைத்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்காக நீங்கள் எண்ணுவதும் பாராட்டத்தக்கது. உங்கள் கேள்விகளிலிருந்து இரண்டு விஷயங்களை என்னால் உங்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. என்னால் ஏன் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலையை மாற்றிக்கொள்ள முடியவில்லை மற்றும் பாலியல் ரீதியாக மட்டுமே அவர்களைப் பார்க்க என்ன காரணம்..? அப்படி ஒருவர் மீது ஈர்க்கப்பட்டால் அவர்களிடம் எப்படி சிறந்த முறையில் என் விருப்பத்தை கூறி அணுகுவது..? இவை இரண்டு குழப்பம்தான் உங்களிடம் இருக்கிறது என நினைக்கிறேன்.



முதலில் இதுபோன்ற எண்ணம் , உணர்வு உங்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்பது உண்மையல்ல..உங்களைப்போன்று பலர் இருக்கிறார்கள். எனவே நீங்கள் பாலியல் ஈர்ப்பு சார்ந்து தவறானவர் என எண்ணுவதை தவிருங்கள். நீங்கள் ஒரு மனிதன்..எனவே இந்த ஆசைகள் வருவது இயல்பு. முதலில் இதை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.

நீங்கள் எப்படி ஒரு மனிதனோ..அதேபோல்தான் அந்த பெண்களும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதன் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மனிதன் சில உறுப்புகளை உள்ளடக்கிய உயிரினம் மட்டுமல்ல. அதேபோல் பெண்கள் ஆண்களால் ஈர்க்கக் கூடியவர்கள் மட்டுமல்ல. நீங்கள் சொல்வது போல் பெரிய மார்பகங்கள், உதடு என உறுப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பாலியல் ஈர்ப்பு சார்ந்த பொருள் அல்ல...

அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகள் உள்ளன..சோகம், கவலை, சந்தோஷம், ஆசை , ஏக்கம், கனவு என எல்லாம் உள்ளது. உங்களைப்போன்று அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது..அவர்களின் வாழ்க்கைக்கென தனிக் கதையும் உள்ளது. எனவே அவர்களை வெறும் உடல் சார்ந்து மட்டும் , உறுப்புகள் சார்ந்து மட்டும் அணுகாமல் மரியாதையுடன் பாருங்கள். உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடுங்கள். அவர்கள் அழகாக இருந்தால் அதை நேரடியாக அவர்களிடமே கண்ணியமான முறையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறுங்கள். அது நேர்மையாக இருப்பின் நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சிக்கொள்வார்கள். அதோடு உங்களிடம் பேசவும் விரும்புவார்கள். ஒதுங்கியிருந்து பார்த்தால் இப்படியான உணர்ச்சிகள்தான் தோன்றும். எனவே நேராக சென்று பேசிவிட்டால் அந்த எண்ணம் போய்விடும்.



அடுத்ததாக பெண்களைக் குறித்து ஆபாசமான உங்களின் கற்பனை மற்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதாக கூறினீர்கள். கட்டுப்படுத்துவதும் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதாவது சிறு வயதில் பெற்றோர் ஒரு விஷயம் தவறு என விலக்கி வைத்தால் அதன் மீதுதான் விருப்பம் அதிகரிக்கும். அதுபோலத்தான் உங்களுக்கு இயற்கையாக தோன்றும் இந்த ஈர்ப்பு , ஆசைகளைக் கட்டுப்படுத்துவது உங்களுக்குள் வேறுமாதிரியான விளைவை உண்டாக்கக் கூடும்.

முழுமையான உடலுறவுக்குப் பின் களைப்பாக உணர என்ன காரணம்..?

எனவே இதற்கு சிறந்த வழி பெண்களை உறுப்புகளால் அல்லாமல் அவர்களின் ஆளுமை, சொந்த வாழ்க்கை, திறமை , நேர்மை இதன் வழியாக காணுங்கள். ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அவர்களிடம் நேரடியாக சென்று பேசுங்கள். அவர்கள் அழகாக இருந்தால் அதை நேர்மையாக சொல்லுங்கள். அவர்களுடன் ஒரு உறவை பலப்படுத்துங்கள். இப்படியாகத்தான் உங்களின் எண்ணங்கள், கற்பனைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதுதான் சிறந்த வழியாகவும் இருக்கும்.

அவர்களுடன் பேசும்போது தானாக உங்கள் மனம் அவர்களின் குணங்களைத்தான் மதிக்கத் துவங்கும். இதனால் தானாக உங்களின் தவறான பார்வை விலகிவிடும். இதனால் கட்டுப்படுத்துதலும் இருக்காது. அவர்களுடனான நட்புறவு நீடித்தால் சந்தர்ப்பம் வரும்போது விருப்பத்தை வெளிப்படுத்துங்கள்... முயற்சி திருவினையாகும்..
Published by:Sivaranjani E
First published: