டிக் டாக் செயலி அடிமைக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமா... வெளியேற என்ன வழி ?

Sivaranjani E | news18
Updated: July 10, 2019, 6:21 PM IST
டிக் டாக் செயலி அடிமைக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமா... வெளியேற என்ன வழி ?
டிக் டாக்
Sivaranjani E | news18
Updated: July 10, 2019, 6:21 PM IST
டிக் டாக் பயன்படுத்திய மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்... டிக் டாக்கில் மூழ்கிய கணவரை விவாகரத்து செய்த மனைவி!  இப்படி தினம் தினம் டிக் டாக் செயலியால் நடக்கும் சம்பவங்களை கடந்து கொண்டுதான் இருக்கிறோம்.

சில மாதங்களுக்கு முன் டிக் டாக்கைத் தடை செய்ய பெரிய விவாதமே எழுந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதி மன்றமும் இடைக்காலத் தடை விதித்தது. பின் இது அவரவர் விருப்பம். பயன்படுத்துவோர் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தடை ஒரு முடிவல்ல என்று டிக் டாக் தரப்பிலிருந்து பேசிய பதிலை ஏற்று இடைக்காலத் தடையை நீக்கியது நீதிமன்றம்.

உண்மைதான்.. இணையவாசிகளுக்கு எப்போதும் மனக் கட்டுப்பாடு அவசியம். ஆனால் இதை எத்தனைபேர் பின்பற்றுகின்றனர் என்பதுதான் கேள்விக்குறி..! ஒரு செயலியால் குடும்பமே சிதைந்து போகுமேயானால் அதன் வீரியம் எந்த அளவிற்கு அவர்களின் ஆழ் மனதை அடைகிறது..! இதற்கெல்லாம் காரணம் அவர்களின் தாழ்வு மனைப்பான்மைதான் என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அர்விந்த்.
இந்த டிக் டாக் பயன்படுத்துவோரில் இரண்டு வகைகள் உள்ளனர். ஒன்று எப்போதாவது மன ஓய்விற்க்காக வீடியோ பதிவு செய்து தன் குழுக்களுக்குள் மட்டும் அனுப்பிக் கொள்வது..

இரண்டாவதுதான் போதைக்கு அடிமை போன்று ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு வீடியோ போடவில்லை என்றாலும் பதட்டமடைவார்கள். எப்படியாவது போட வேண்டும் என முயற்சி செய்வார்கள்.

Loading...

இதில் முதல் வகையைக் காட்டிலும் இரண்டாம் வகை பயணார்கள்தான் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் சித்ரா. ”இவர்களை உடல் ரீதியாக அணுகும்போது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய டோபமைன் என்னும் இரசாயணம் வெளியேறுகிறது. அது அவர்களை சளிப்படையும் வாழ்க்கையிலிருந்து உற்சாகமளிக்கிறது. மன ரீதியாக அணுகும்போது தாழ்வு மனப்பான்மையே முதன்மைக் காரணமாக இருக்கிறது. மேலும் அதனால் வரும் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளால் மனம் தனக்கான அங்கீகாரம் கிடைத்ததைப் போல் மன நிறைவுப் பெறுகிறது. இந்த உணர்வை தினம் தினம் பெறவே இப்படி வீடியோ போடுகின்றனர். நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். குறிப்பாக பெண்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு இது சிறந்த தளமாக உணர்கின்றனர்” என்கிறார் சித்ரா.

உளவியல் நிபுணர் சித்ரா


இப்படி முற்றிலுமாக அழிக்கும் டிக் டாக் அடிமையிலிருந்து வெளியேற சில ஆலோசனைகளையும் அளிக்கிறார்.

"முதலில் டிக் டாக்கில் அடிமையாகி இருப்பதை உணர வேண்டும். இதனால் தங்களுடைய வாழ்க்கை, வேலை உறவுகள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருவதற்கு முயற்சி செய்ய முடியும்.

உணர்ந்து முடிவு செய்த பின் அதற்கான படிகளை வகுக்க வேண்டும். சைக்காலஜி படி ஒரு விஷயத்தை 21 நாட்கள் செய்தால் அது பழக்கமாக மாறும் என்பார்கள். அப்படிப் பார்க்கும்போது இந்த டிக் டாக்கும் பழக்கமாக மாறுகிறது என்கிறார் சித்ரா. அது பழக்கமாக மாறும்போது அதிலிருந்து வெளியேறுவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் முடியாத காரியம் இல்லை.

டிக் டாக்கைக் கைவிட முடிவு செய்தால் அதற்கு ஈடு செய்யும் விதமாக வேறு விஷயங்களில் உங்கள் மனதை ஈடுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி, ஹாபியில் அதிக கவனம், பிடித்த கலையில் அதிக ஈடுபாடு செலுத்துவது என பிடித்த விஷயங்களில் உங்கள் மூளையும் உட்செலுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து எப்படியாவது 21 நாட்கள் செய்துவிட்டீர்களானால் டிக் டாக்கை மறந்து அதில் கவனம் செலுத்தத் துவங்குவீர்கள்.அதேபோல் உங்களுக்குள் ஒரு இலக்கை வகுத்துக்கொள்ளுங்கள். அந்த இலக்கை நோக்கி செயல்படுங்கள். அதை எழுத்தாக எழுதி பார்க்கும் இடங்களிலெல்லாம் ஒட்டி வையுங்கள்.
சமூக வலைதளங்கள் செல்வதையே கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வையுங்கள். சமூக வலைதளங்களிலும் டிக் டாக் வீடியோக்கள் பகிர்கின்றனர். அதைக் காணும்போது உங்களுக்கு தூண்டுதல் ஏற்படலாம்.

உங்களை நீங்களே காதலியுங்கள். காதலிக்கத் தொடங்கினால் அடுத்தவர்களின் பாராட்டு தேவைப்படாது. தாழ்வு மனப்பான்மை இருக்காது. உங்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து அதை நினைத்து பெருமைக்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் ரசிக்கத் தொடங்கினால் தானாக பாராட்டுக்கள் தேடி வரும்".
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...