Home /News /lifestyle /

ஒரு தலைக் காதலில் ஏமாற்றம் : மீள்வதற்கு இதுதான் வழி..!

ஒரு தலைக் காதலில் ஏமாற்றம் : மீள்வதற்கு இதுதான் வழி..!

ஒரு தலைக் காதல்

ஒரு தலைக் காதல்

புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுதல், உங்களுக்கு பிடித்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுங்கள்.

    நிராகரிப்புகளை ஏற்கும் பக்குவமும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளும் தெரிந்தாலே வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள்தான். இதை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் தற்கொலை வரை செல்கின்றனர். இந்த ஏமாற்றம் முடிவல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த விஷயங்களை பின்பற்றத் துவங்குங்கள்.

    எதார்தத்தை புரிந்துகொள்ளுதல் : அவருக்கு உங்கள் மீது விருப்பம் இல்லை எனில் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர் மீது உங்களுக்குக் காதல் வர சில காரணங்கள் இருக்கும்போது அவருக்கும் உங்கள் மீது காதல் வராமலிருக்க சில காரணங்கள் இருக்கலாம். அதை நீங்கள் ஏற்றுகொள்ளும் பக்குவமே தலை சிறந்தது. எனவே இதுதான் எதார்த்த நிலை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    விலகி இருங்கள் : அவரை அடிக்கடி சந்திப்பதோ, பார்ப்பதையோ தவிருங்கள். பேசுவதையும் தவிர்த்தல் நல்லது. இல்லையெனில் அந்த வலி இன்னும் அதிகரிக்கும்.

    சமூக வலைதளங்களிலும் அவரைக் கண்காணித்தல், புகைப்படங்களைப் பார்த்தல், ஸ்டேட்டஸ் பார்த்தல் போன்றவற்றை தவிருங்கள்.



    மாற்றங்கள் : காதலிலிருந்து வெளியேற மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுதல், உங்களுக்கு பிடித்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுங்கள்.

    வெளிப்படையாக பேசுங்கள் : காதல் வலியால் தீராத துயரத்தை அனுபவிக்கிறீர்கள், வெளிவர முடியவில்லை எனில் நண்பர்கள், உறவினர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். மருத்துவ ஆலோசனைகளையும் பெறுதல் நல்லது. இதனால் மனதளவில் பக்குவப்படுவீர்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Love

    அடுத்த செய்தி