Home /News /lifestyle /

30 வயதுக்கு பின் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இந்த விஷயங்கள் அவசியம்..!

30 வயதுக்கு பின் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இந்த விஷயங்கள் அவசியம்..!

காதல்

காதல்

கணவன் மனைவி உறவில் தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை விட மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவ் வேண்டி வரும். பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் இருந்தாலும், தோற்றம், உடல் மாற்றங்கள், சோர்வு உள்ளிட்டவை தடையாக அமையும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆரோக்கியமான மற்றும் நிறைவான பாலியல் வாழ்க்கைக்கு வயது என்பது ஒரு தடையே கிடையாது. இருபதுகளில் பாலியல் உறவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், திருமணமான புதிதில் இருக்கும் சுவாரசியமும் பாலியல் உறவின் மீது இருக்கும் விருப்பம் நாளடைவில் குறைவது இயற்கைதான். ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல பாலியல் உறவில் நாட்டம் குறைய வேண்டும் என்று எந்த விதியும் கிடையாது. 30களில் கூடுதல் பொறுப்புகள் உடல் ஆரோக்கியத்தையும், வாழ்க்கை முறையையும் பாதிக்கும்.

கணவன் மனைவி உறவில் தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை விட மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவ் வேண்டி வரும். பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் இருந்தாலும், தோற்றம், உடல் மாற்றங்கள், சோர்வு உள்ளிட்டவை தடையாக அமையும். நீங்கள் 30+ வயதினராக இருந்தால், உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி என்பதற்கான டிப்ஸ் இங்கே.

உங்களுடைய ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள் :

இருபதுகளில் அல்லது இளம் வயதில் பாலியல் சம்பந்தமான விஷயங்கள் அரைகுறையாக தெரிந்து இருக்கும். ஆனால் முப்பதுகளில் கிட்டத்தட்ட பாலியல் உறவு பற்றி அனைத்துமே அறிந்து வைத்திருப்பீர்கள். எனவே உங்களுக்கு உங்களுக்கென்று பிரத்யேகமான சில ஆசைகள் இருக்கும். எனவே அதை நீங்கள் நிறைவேற்ற அல்லது முயற்சி செய்து பார்க்கலாம். மேலும், திருமணமான புதிதில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் கணவன் அல்லது மனைவி என்ன நினைப்பாரோ என்ற தயக்கமும் இருக்கலாம். சில ஆண்டுகள் கழித்து ஒருவருக்கொருவர் நன்றாக புரிதல் ஏற்பட்டிருக்கும். எனவே உங்களுடைய பாலியல் ரீதியான ஆசைகளை வெளிப்படுத்தி அதை முயற்சி செய்து பார்க்கலாம்.



புதிய செக்ஸ் பொசிஷன்கள்

பாலியல் உறவு என்று வரும்பொழுது இப்படித் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த வரைமுறையும் கிடையாது. ஒரு சில தடைகளும் தனக்குத் தானே விதித்துக் கொண்ட வரைமுறைகளும் இருக்கலாம். ஒரே மாதிரியான செக்ஸ் என்பது போரடித்துவிடும். முப்பதுகளில், செக்ஸ் லைஃபை மேம்படுத்த, நீங்கள் பலவிதமான முயற்சிகளை பரிசோதனை செய்து பார்க்கலாம். இதன் மூலம் கணவன் மனைவி பிணைப்பு அதிகரிக்கும், புதிதாக பாலியல் உறவில் முயற்சி செய்யும்பொழுது நீங்கள் அதிக நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

பெண்கள் ஏன் வயதான ஆண்கள் மீது காதல் கொள்கிறார்கள் தெரியுமா..?

லூப்ரிகன்ட் தவறாமல் பயன்படுத்துங்கள்

பாலியல் உறவு குறித்து பலவிதமான தவறான கருத்துக்கள் நிலவி வருகிறது. அதில் முக்கியமானது லூப்ரிகன்ட் பயன்படுத்துவது. லூப்ரிகன்ட் பயன்படுத்தினால் கருத்தரிக்க முடியாது, ஆர்காசம் கிடைக்காது; அது மட்டுமல்லாமல் முதல் முதலாக பாலியல் உறவு வைத்துக் கொள்ள மட்டுமே லூப்ரிகன்ட் தேவை, என்று பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் லூப்ரிகன்ட் பயன்படுத்தினால் உங்களுடைய பாலுறவில் அசௌகரியம் உண்டாகும் என்பது தவறான கருத்து. எல்லா காலத்திலும் லூப்ரிகன்ட் பயன்படுத்தலாம். குறிப்பாக, சுகப்பிரசவம் ஆக குறைந்த பிறந்த பெண்களுக்கு லூப்ரிகன்ட் தேவை. வஜைனல் டெலிவரியால் பெண்களின் பிறப்புறுப்பில் டிரைனஸ் அதிகமாக இருக்கும். எனவே, லூப்ரிகன்ட் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். எனவே தண்ணீர் அடிப்படையிலான லூப்ரிகன்ட் வாங்கிப் பயன்படுத்தலாம்.



பெல்விக் உடற்பயிற்சிகள்

உடல் வலிமை பெறுவதற்கு மற்றும் ஆக்டிவாக செயல்படுவதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். இடுப்புப் பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடைந்து, புறப்புறுப்பு பகுதிகளில் ரத்த ஓட்டம் மேம்பட, பெல்விக் உடல்பயிற்சிகள் செய்யலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sex satisfaction, Sexual life

அடுத்த செய்தி