ஆன்லைனில் டேட்டிங் செய்யும் இளசுகளே...! இந்த விஷயங்களில் கோட்டை விட்டுவிடாதீர்கள்

ஊரடங்கால் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்ள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், அதற்கான சில டிப்ஸ்கள்

ஆன்லைனில் டேட்டிங் செய்யும் இளசுகளே...! இந்த விஷயங்களில் கோட்டை விட்டுவிடாதீர்கள்
ஆன்லைன் டேட்டிங்
  • Share this:
கொரோனா வைரஸ் நமக்கெல்லாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம். இதுதான் எதார்த்தம் என்பதை புரிய வைத்து அதோடு வாழக் கற்றுக்கொடுத்துள்ளது. இந்த ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் மாற்றங்களை நோக்கிய பயணமே என நினைத்து அடுத்தது என்ன? என்று கடந்து செல்வதே வாழ்க்கை.

அந்த வகையில் தற்போதைய இளைய வயதினரின் குதூகல வாழ்க்கையில் முட்டுக்கட்டையாய் வந்துவிட்டது கொரோனா. இருப்பினும் இருப்பதை வைத்து எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஆன்லைன் டேட்டிங், வீடியோ கால் என அதற்குள் என்ன முடியுமோ அதை வைத்து மகிழ்ச்சி அடைந்துகொள்கின்றனர். இது நல்ல விஷயம்தான் என்றாலும் ஆன்லைன் டேட்டிங் நேருக்கு நேர் சந்தித்து புரிய வைக்கும் உணர்வுகளுக்கு ஈடு இணையாகாது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் டேட்டிங் செய்யும் போது சில விஷயங்களை செய்தால்தான் அதிலும் நீங்கள் வெற்றியடைய முடியும். அது என்னென்ன பார்க்கலாம்.

சுய விவரத்தில் கவனம் : ஆன்லைனில் ஒருவரை பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ள உதவுவது நம்முடைய சுய விவரங்கள்தான். எனவே அதைக் குறிப்பிடும்போது பொய்கள் இல்லாமல் நேர்மையாக செய்யுங்கள். இளமையான புகைப்படம் வைப்பது, வயதைக் குறைப்பது, வேலை குறித்து பொய்யான தகவல் இப்படி சில காரியங்கள் செய்வதை தவிருங்கள். அப்லோட் செய்யும் புகைப்படங்களையும் ஓவர் எடிட்டிங் செய்யாமல் சற்று இயற்கையாக வைப்பதும் அழகுதான்.


உங்கள் தகவல்களை அப்லோட் செய்யும் முன் நண்பர்களிடம் காட்டிவிட்டு அப்லோட் செய்யுங்கள்.திறந்த புத்தகமாக இருக்காதீர்கள் : ஆன்லைன் டேட்டிங்கை சுவாரஸ்யமாக்க ஆரம்ப இண்ட்ரோவிலேயே எல்லாவற்றையும் பேசிவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை வரலாறை கொட்டித் தீர்க்காதீர்கள். கொஞ்சம் அடுத்த பேச்சுக்கு விட்டு வையுங்கள். அதேபோல் அந்த நபரின் இணைப்பை பலப்படுத்த, உங்கள் உரையாடல் சுவாரஸ்யமாக்க அவ்வபோது ஏதாவது புதுமையான விஷயங்கள், பேச்சுகளை செய்தால் உங்கள் மீது நல்ல எண்ணங்கள் உதிர்க்கும்.செக்ஸ் பேச்சுகளை தவிறுங்கள் : ஆன்லைன் டேட்டிங் என்றாலே செக்ஸுவல் விஷயங்களுக்கானதுதான் என்ற புரிதலை முதலில் மாற்றுங்கள். இது உங்கள் தனிமையை போக்குவதற்கான இடம். உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்குவதற்கான இடமாக நினையுங்கள். எனவே பேசும்போது செக்ஸுக்காகத்தான் என பேசாதீர்கள். முற்றிலும் அதுபோன்ற பேச்சுக்கள், வார்த்தைகளை தவிர்த்தல் நல்லது.

தினமும் இரவில் ’இயர் ஃபோன்’ மாட்டிக் கொண்டே தூங்கிவிடும் பழக்கம் இருக்கா..? கண்டிப்பா படிங்க

எதார்த்தமாக கொண்டு செல்லுங்கள் டிராமா வேண்டாம் : படங்கள் பார்த்துவிட்டு அதைபோல் பேச வேண்டும் என ரொம்ப டிராமாவாக இருக்காதீர்கள். எதார்த்தமாக பேசுங்கள். கருத்துப் பரிமாற்றங்கள், உரையாடலை சாதாரணமாகக் கொண்டு செல்லுங்கள்.லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க : 

 

 
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading