மனைவியைக் கவர்ந்திழுக்க கணவர் என்ன செய்ய வேண்டும்..?

இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால் உங்களை விட மகிழ்ச்சியான மனிதர் இருக்க முடியாது.

மனைவியைக் கவர்ந்திழுக்க கணவர் என்ன செய்ய வேண்டும்..?
உறவுமுறை
  • News18
  • Last Updated: October 4, 2019, 9:31 PM IST
  • Share this:
காதலிக்கும்போதுதான் காதலியைக் கவர சில விஷயங்களை செய்ய வேண்டும் என்றில்லை. திருமணத்திற்குப் பின்னும் மனைவியைக் கவர சில விஷயங்களை செய்தால்தான் உங்கள் வாழ்க்கை ஸ்மூதாக ஹேப்பியாக இருக்கும். இப்படி செய்வது அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் மனதளவில் மகிழ்ச்சி கிடைக்கும். ரொமாண்டிக் வாழ்க்கை உடலளவிலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதற்கு என்ன செய்யலாம்..?

உடலளவில் எப்படி ஈர்ப்பது ?

உடல் சுத்தம் அவசியம் : கட்டாயம் பல பெண்களின் குற்றச்சாட்டில் இதுவும் ஒன்று. பல் துலக்குவது, குளிப்பது போன்றவற்றிற்கு சோம்பேறித்தனத்தை தவிருங்கள். விடுமுறை நாட்களிலும் இதை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.


அழகுப் பராமரிப்பு : தலை முடியை காடு போல் வளர்க்காமல் அழகாக ட்ரிம் செய்து உரிய ஜெல் பயன்படுத்தி மிடுக்காக இருங்கள். முகத்திலும் தாடி, மீசையை டிரிம் செய்து ஃபிட்டாக இருங்கள்.நறுமணம் கமழும் ஈர்ப்பு : பெண்களுக்கு நறுமணங்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் உங்கள் மேல் நல்ல வாசனை வந்தால் நிச்சயம் விழுந்துவிடுவர்கள். எனவே பயன்படுத்தும் சோப், மவுத் வாஷ், செண்ட் என அனைத்தையும் நறுமணம் கமழ பயன்படுத்துங்கள். ரொமாண்டிக் வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.ஆடையில் கவனம் : அணியும் ஆடைகளை ஏனோதானோ என அணியாமல் ஃபிட்டான ஷர்ட், பேண்ட் அணியுங்கள். மங்கிய நிறம் , பொருத்தமற்ற டிசைன்கள் என அணிவதை தவிருங்கள். பார்க்கும்போதே ஈர்க்கக் கூடிய வகையில் உங்கள் உடைகளை தேர்வு செய்யுங்கள்.

மனதளவில் ஈர்ப்பது எப்படி ?

பாதுகாவலனாக இருங்கள் : எந்த துயரத்திலும் அவரைக் காக்கும் பாதுகாவலனாக இருங்கள். அவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இல்லாமல் துணையாக இருங்கள். அவரின் விருப்பங்களுக்கு வழிவிடுங்கள்.

ஆண் கர்வம் தவிருங்கள் : எந்த விஷயத்திலும் தான் ஆண் என்கிற கர்வத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். வேலைக்குச் செல்லும்போதும், விடுமுறையில் வீட்டில் இருந்தாலும் மனைவிக்கு சிறு சிறு உதவிகளை செய்யுங்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.குழந்தைக்கும் நல்ல அப்பாவாக இருங்கள் : எப்போதும் அலுவலக வேலை, வெளியே நண்பர்கள் அழைப்பு, டென்ஷன் என்று இருக்காமல் உங்கள் பிள்ளைகளுடனும் விளையாடி மகிழுங்கள். நீங்கள் குழந்தையை கண்டுகொள்ளாமல் இருப்பதும் உங்கள் மனைவிக்கு பெரும் கவலையாக இருக்கலாம். அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதால் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மனைவியை புரிந்துகொள்ள முயலுங்கள் : உங்கள் மனைவிக்கு பிடித்த விஷயங்கள், விருப்பங்களை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சர்ப்ரைஸுகளை தெறிக்க விடுங்கள். இவை மட்டுமன்றி அவரின் மனநிலையையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள். அவர் அதிகம் கோபப்படும் விஷயங்களை தவிருங்கள். அவருடன் நேரம் ஒதுக்குங்கள். குறிப்பாக அவர் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். பிரச்னைகளை உடனிருந்து சரி செய்யுங்கள். உடலளவில் சோர்வாக இருந்தாலும் என்னவென்று கவனியுங்கள். உங்கள் அக்கறையும் கவனிப்புமே அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால் உங்களை விட மகிழ்ச்சியான மனிதர் இருக்க முடியாது.

Also see:

First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading