துணையின் கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொள்வதா.. மறுப்பதா.. ஊசலாடும் மனதிற்கு தீர்வு என்ன?

கடந்த காலத்தின் பாதிப்புகள் தொற்றிக் கொண்டிருந்தால் என்ன செய்வது..?

துணையின் கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொள்வதா.. மறுப்பதா.. ஊசலாடும் மனதிற்கு தீர்வு என்ன?
கடந்த காலத் தவறுகள்
  • News18
  • Last Updated: August 10, 2019, 2:55 PM IST
  • Share this:
கடந்த விஷயங்கள் கடந்ததுதான். அதனால் எந்த பலனும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த கடந்த காலத்தின் பாதிப்புகள் தொற்றிக் கொண்டிருந்தால் என்ன செய்வது..? பரிசீலனை செய்வது அவசியம்தானே. உறவை தற்காத்துக்கொள்வதா அல்லது முற்றுப்புள்ளி வைப்பதா என முடிவெடுப்பது அவர்களின் நடவடிக்கைகள்தான் உத்திரவாதம் அளிக்கும். அவ்வாறு சிலவற்றை நீங்கள் பரிசீலனை செய்ய சில பரிந்துரைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.

முந்தையக் காதலில் ஏமாற்றியுள்ளார் : கடந்த கால காதல் நிகழ்காலக் காதலில் எப்போதும் தொல்லைதான். அப்படி கடந்த காலத்தின் துணையை அவர் ஏமாற்றி விலகியுள்ளார் எனில் நிகழ்கால காதலுக்கும் ஆபத்துதான். கடந்த கால துணையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார், இரக்கம் கொள்கிறார் வருந்துகிறார் எனில் உங்கள் காதலுக்கு பிரச்னை இல்லை. அதேபோல் அவர் எந்த சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அவருடைய எல்லாக் கடந்த கால காதலிலும் இது தொடர்கதையாக இருக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்வது நல்லது.
முந்தைய காதலில் முதுர்ச்சியற்ற நடவடிக்கைகள் : தவறுகளிலிருந்துதான் திருத்திக்கொள்ள முடியும் என்பார்கள். அப்படி கடந்த கால உறவில் செய்த தவறுகளை புரிந்துகொண்டு திருத்திக் கொள்பவராக இருப்பின் பிரச்னை இல்லை. அதேசமயம் நீங்கள் அவரை கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவறு. ஒவ்வொரு உறவும் அவரவர் குணாதிசயங்கள் , பழக்க வழக்கங்களை வைத்து மாறுபடும். அதுபோல் உங்கள் துணையின் கடந்த காதல் மற்றும் உங்களுடனான காதலும் மாறுபடலாம். எனவே அதை புரிந்துகொண்டு முடிவுக்கு வருவது நல்லது.

கடந்த கால தகாத உறவுகள் : கடந்த காலத்தில் உடலுறவில் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தார் எனில் அது உங்கள் உறவை பாதிக்காது என்கிறார் மார்க் போர்க் இவர் மனநல மருத்துவத்தில் பி.எச் டி பட்டம் பெற்ற வல்லுநராவார். அவர்களின் கடந்த காலத்தை தெரிந்துகொள்ள விழைவோர் நிகழ்காலத்தோடு ஒப்பிடுவது தவறு என்றும் கூறுகிறார். இது போன்ற கடந்த கால உடலுறவுகளால் அவருக்கு மருத்துவ ரீதியாக பாதிப்புகள் உள்ளனவா என்பதை தெரிந்து கொண்டபின் பரிசீலனை செய்யலாம்.

கடந்த கால துணை : கடந்த கால துணையோடு தொடர்பு இருக்குமா. அப்படி இருக்கிறார் எனில் மீண்டும் தொடர்வாரா என்று அச்சப்பட வேண்டாம். அவருக்கு அந்த உறவில் நாட்டம் இல்லை என்பதால்தான் இன்று உங்களுடன் உறவில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவும். அவருக்கு மீண்டும் அவர் மீது காதல் மலருமா என்பது உங்களுடைய அன்பும் , அரவணைப்பும்தான் தீர்மானிக்கும். அவரிடம் கண்ட குறை உங்களிடம் இல்லை என்பதால்தான் இணைந்திருக்கிறார். அது என்ன என்பதை அறிந்து ஆழமாக நேசியுங்கள்.

பணத்தைக் கையாளுவதில் சிக்கல் : இன்று உறவுகளைத் தீர்மானிப்பதில் பணமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி பண விஷயத்தில் கடந்த காலத்தில் பெரும் தவறுகள் செய்து அதிலிருந்து தன்னை திருத்திக் கொண்டிருக்கிறார் எனில் கவலை இல்லை. அவர் திருத்திக் கொண்டு மீண்டும் முன்னேற முயற்சிக்கிறார் எனில் நீங்கள் தோள் கொடுத்து கைக்கோர்க்கலாம். ஆனால் மீண்டும் அந்த தவறுகளை செய்கிறார் எனில் பரிசீலனை செய்வது நல்லது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்