மனித குணங்களில் பல வகைகள் உள்ளன. பொறாமை, பொய் கூறுதல், மற்றவரை தாழ்வாக நினைத்தல் போன்ற குணங்கள் ஒருவரை மனிதராக இருக்க விடாது. இந்த குணங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறது என்றாலும், அதை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பது மிகவும் முக்கியம். இந்த மோசமான குணங்களை முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தாலே இதை எளிதில் வென்று விடலாம். இந்த பதிவில் நட்பில் ஏற்படும் பொறாமை உணர்வை கையாளும் வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஏற்று கொள்ளுதல்
பொறாமை உணர்விலிருந்து விடுபடுவதற்கான முதல் படி ஒருவரை அப்படியே ஏற்றுக்கொள்வது தான். இப்படி செய்வதால் உங்களுக்கு எந்த வித அவமானமோ குற்ற உணர்ச்சியோ ஏற்பட போவதில்லை. மேலும் அதில் கோபத்தைக் கலக்காதீர்கள். உங்களை நீங்களே மோசமானவர் என்று மதிப்பிடாதீர்கள். பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நீங்கள் எல்லா உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் தயாராக இருந்தால், எதிர்மறை உணர்ச்சிகளை ஒப்புக்கொண்டால், அவற்றை மிக சுலபமாக கையாள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்
பொதுவாக உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மேலும் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக அவற்றை தணிக்க பாருங்கள். உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை நியாயப்படுத்த வேண்டாம். மேலும் நீங்கள் உங்களை மற்றவர்களுடம் ஒப்பீடு செய்யாதீர்கள், உங்கள் நண்பரின் குறைபாடுகளைப் பார்ப்பதை நிறுத்துங்கள். அவர் உங்களை விட வேறொருவரை விரும்புவதாகக் கருத வேண்டாம். அவர்களின் இதயத்தில் உங்களுக்கும் வேறொரு இடம் இருக்கலாம். எனவே நல்ல மனதுடன் அவரை அணுக பழகுங்கள்.
தொந்தரவுகள் பற்றி எழுதுங்கள்
உங்களை மிகவும் தொந்தரவு செய்ய விஷயங்களை தனியாக நேரம் ஒதுக்கி அவற்றை பற்றி எழுதுங்கள். நீங்கள் உங்களை தனிமைப்படுத்தப்பட்டவரா உணர்கிறீர்களா? அதையும் குறிப்பிடுங்கள். உங்கள் நண்பரால் மதிக்கப்படவில்லை அல்லது அவர் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்ற உணர்வுகளாலும் இது போன்று ஏற்பட்டு இருக்கலாம். மேலும் இந்த உணர்வுகள் முற்றிலும் வேறொரு பிரச்சினையிலிருந்து தோன்றியிருக்கலாம். எனவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை முதலில் கண்டுபிடித்து கையாள கற்று கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளிடம் போலியாக பழகும் நண்பர்களை கண்டறிவது எப்படி?
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
உங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படாதீர்கள். அதே போன்று தவறான தருணத்தில் உங்களை மோசமானவராக வெளிக்காட்டாதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சியுங்கள். இது குறித்து பகுத்தறிவுடன் சிந்திக்க பழகுங்கள். எதையும் நிதானமாக மேற்கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அவசரத்தில் எதையும் பேசி விடாதீர்கள். ஏனெனில் இது உங்கள் உறவை மேலும் சேதப்படுத்த கூடும்.
மனம்விட்டு பேசுங்கள்
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உங்கள் நண்பரிடம் மனம்விட்டு பேசுவதே இந்த எல்லா பிரச்சனைகளுக்குமான சிறந்த தீர்வாக இருக்கும். இதைப் பற்றி யோசித்து கொண்டே உங்கள் தூக்கத்தை இழக்காமல், நேரடியாக அவருடன் கலந்து பேசுங்கள். உங்கள் இருவருக்குமிடையில் உள்ள தவறான புரிதலில் இருந்து விடுபட இது சரியான வழியாக இருக்கும். மேலும் நீங்கள் அவரை மதிக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பருக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவருடன் பேசும்போது, உங்கள் தரப்பு வாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் மட்டும் சொல்லி கொண்டே இருக்காதீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மனம்விட்டு பேசினால் தீர்வு நிச்சயம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Friends, Friendship, Lifestyle, Relationship, Relationship Fights