Home /News /lifestyle /

50 வயதை ஒட்டிய தம்பதியர்கள் எத்தனை முறை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது..?

50 வயதை ஒட்டிய தம்பதியர்கள் எத்தனை முறை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது..?

தாம்பத்திய உறவு

தாம்பத்திய உறவு

40 வயதுக்கு மேற்பட்ட தம்பதியர்கள் அல்லது 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தாம்பத்ய உறவு கொள்கின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்பதியர்கள் பலருக்கு வயது அதிகரித்துக் கொண்டே செல்லுகையில் தாம்பத்ய வாழ்க்கை மீதான நாட்டம் குறைந்து கொண்டே போகிறது என்ற விஷயம் வெறும் கட்டுக்கதை அல்ல. பெரும்பாலான தம்பதியர்கள் வயதான பிறகு மெத்தையில் ஏதேனும் குதூகலமான விஷயத்தை அரங்கேற்றம் செய்ய விரும்புவதில்லை.

நாள் முழுவதும் ஓடி, ஆடி களைத்துப் போன நிலையில் உடனடியாக தூங்கிவிட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு, அலுவலக வேலை என நாள் முழுவதும் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியர்களுக்கு தங்களுக்கான நேரம் ஒதுக்குவதுற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

குறிப்பாக, வயதான தம்பதியர் தாம்பத்ய வாழ்வுக்கு கொஞ்சமும் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 50 வயதை நெருங்கும் பலர் தங்கள் பாலியல் ஆசைகளை வெகுவாகக் குறைத்துக் கொள்கின்றனர். மெத்தையில் வயதான தம்பதியர் விரும்பும் விஷயம் என்ன? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர் என்ற விஷயங்களை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.



ஆய்வாளர்கள் சொல்வது என்ன

40 வயதுக்கு மேற்பட்ட தம்பதியர்கள் அல்லது 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தாம்பத்ய உறவு கொள்கின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வெகு சில மக்கள் தாங்கள் 50 வயதை கடந்தாலும் கூட தாம்பத்ய வாழ்க்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

படுக்கையறையில் நெருக்கத்தை விரும்புகிறார்களா

வயதான பிறகு பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தங்களுக்கு ஏற்படுவதில்லை என்று பெரும்பாலான தம்பதியர்கள் தெரிவித்திருக்கின்றனர். செக்ஸ் உறவைக் காட்டிலும், தரமான திருமண வாழ்க்கை மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய உடல்நல பரிசோதனைகள்

50 வயது நெருங்கும் பெண்களுக்கு மாதவிலக்கு நின்று மோனோபாஸ் எட்டிவிடுவதால், இனி அவர்கள் கர்ப்பம் அடையக் கூடும் என்ற அச்சம் இன்றியும், கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இனிமையான தாம்பத்ய வாழ்க்கையை நடத்த முடிகிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.



ஆனந்தமாய் வாழும் சில தம்பதியர்கள்

ஆண், பெண் இருவருக்குமே வயதான பிறகு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை, அழகானவராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதில்லை. குறிப்பாக, ஆடைகளை களைந்து பிறந்த மேனியாக இருக்கும்போது அழகாக இருக்க வேண்டும் என்ற கவலை இனி கிடையாது. அத்துடன் வயதான காலத்தில் பாலியல் உறவில் சற்று செயல்திறன் குறைந்து காணப்படுவது இயல்பானது என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். ஆகவே, அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பதை வைத்து ஆனந்தமாய் வாழும் மனநிலை இயல்பாகவே வந்துவிடுகிறது.

கணவன் மனைவி சேர்ந்து ஆபாச படங்கள் பார்த்தால் தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலே வராது : எப்படி தெரியுமா?

பாலியல் ஆசை நீர்த்துப் போவது ஏன்

வயதாகும் தம்பதியர்கள் பலருக்கு பாலியல் உறவு மீதான ஆசை நீர்த்துப் போவதற்கு காரணம் இதுதான். உடல் சோர்வு, மன அழுத்தம், தீர்க்கப்படாத பிரச்சினைகள் போண்றவற்றால் அதை தவிர்க்கின்றனர். இது மட்டுமல்லாமல், மோனோபாஸ் காலத்திற்குப் பிறகு பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறண்ட நிலையும் தாம்பத்ய உறவை தவிர்ப்பதற்கான காரணமாக இருக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sex tips

அடுத்த செய்தி