• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மருமகளுடன் அடிக்கடி சண்டை வருகிறதா? நல்ல மாமியாராக உங்கள் மருமகளை புரிந்துகொள்ள சில டிப்ஸ்

மருமகளுடன் அடிக்கடி சண்டை வருகிறதா? நல்ல மாமியாராக உங்கள் மருமகளை புரிந்துகொள்ள சில டிப்ஸ்

உறவுமுறை டிப்ஸ்

உறவுமுறை டிப்ஸ்

உங்கள் மகள் அல்லது மருமகனைப் பற்றி பேசும்போது எப்போதும் பாசிட்டிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

  • Share this:
உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதால் மாமியாராக இருப்பது சில நேரங்களில் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா?. உங்களுடைய குடும்பத்தில் ஒரு புதிய நபரை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். அதுவே பெரிய சவாலாக உங்கள் கண்முன்னே தோன்றக்கூடும். எதுவாக இருந்தாலும், அந்த நபர் உங்கள் மகன் அல்லது மகளின் வாழ்க்கைத் துணை என்பதால் நீங்கள் அவருடன் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் மகனின் மனைவி உங்களை மாமியார் என்று அழைப்பதில் பெருமைப்பட வேண்டும். எனவே, ஒரு நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் :

உங்கள் மகனிற்கு திருமணம் நடப்பதற்கு முன்னர் அவரது வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் முன்னுரிமையாக இருந்தீர்கள். ஆனால் இப்போது அவர்கள் திருமணம் செய்தவுடன், அவரின் மனைவி அந்த இடத்தை பிடிப்பார். எனவே நீங்கள் அந்த இடத்தை இழந்த மாதிரியாக உணரலாம். கவலைப்படாதீர்கள், நீங்கள் அப்படி உணர்ந்தால், உங்கள் மகனிடம் மனம் விட்டி பேசுங்கள் அல்லது இல்லையெனில், உண்மையை நேரடியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

பாசிட்டிவாக யோசிக்க வேண்டும் :

உங்கள் மகள் அல்லது மருமகனைப் பற்றி பேசும்போது எப்போதும் பாசிட்டிவாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு பாசிட்டிவாக நினைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அவர்களுடன் பிணைக்கப்படுவீர்கள். அவர்களின் நல்ல குணங்களில் கவனம் செலுத்துங்கள் மற்றும் அதற்காக அவர்களைப் பாராட்டுங்கள். இதனால் அவர்கள் உடனடியாக மகிழ்ச்சியாகவும், அக்கறையுடனும் உணர்வார்கள்.



ஆர்வமாக இருக்க வேண்டாம் :

உங்கள் மகன், அவரது மனைவியுடன் அடிக்கடி வெளியில் சென்று வந்தால் நீங்கள் கோபப்பட வேண்டாம். அவர்களின் நாள் எப்படி சென்றது என்று மெதுவாக அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுடன் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை என்றால், அதனை தவிர்த்து விடுவது நல்லது. அதிகமாக அழுத்தி கேட்க வேண்டாம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால், அவர்கள் நிச்சயமாக செய்வார்கள். இதுவே உங்கள் இருவருக்குமிடையே உள்ள அன்பை அதிகரிக்கும்.

40 வயதுக்கு மேல் பெண்கள் எடைக்கூட காரணம் இதுதானாம்..

சமமாக நடத்துங்கள் :

உங்கள் மகன், மருமகளுக்கு ஏதாவது பரிசளிக்கும்போது இருவரையும் சமமாக நடத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் மகனுக்கு ஒரு ஆடம்பரமான பரிசை வாங்குகிறீர்கள் என்றால், அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு பரிசையும் வாங்குங்கள். நீங்கள் சமமற்றவராக இருப்பது போல் உங்கள் மருமகளை உணர வைக்கும், இது மிகவும் கவலை அல்லது பிரச்னைக்குரியதாக மாறும். இதனால் உறவில் உள்ள விரிசல் மேலும் அதிகரிக்கலாம்.



வாழ்த்துங்கள் :

உங்கள் மகனின் வாழ்க்கைத் துணை உங்களுக்கு சொன்ன செய்தியை ஞாபகத்தில் வந்திருந்து அதனை அவரிடம் கூறி அவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். மருமகளின் பிறந்தநாள், அவர்கள் பற்றிய தகவல்களை நினைவில் கொள்ளுங்கள். அவ்வப்போது அவர்கள் செய்யும் பணியை பாராட்டுவது, பிறந்தாளுக்கு வாழ்த்து கூறுவது போன்றவை உங்கள் இருவர் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: