குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல - சத்குரு

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல - சத்குரு

சத்குரு

இந்தியாவில் விவசாயிகளை விட 2 மடங்கு அதிகமாக குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது உங்களுக்கு தெரியுமா?

 • Share this:
  “குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல. இது சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

  பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான திருமதி. சமிக்கா ரவி அவர்கள், “இந்தியாவில் விவசாயிகளை விட 2 மடங்கு அதிகமாக குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்காக யார் குரல் கொடுக்கப்போகிறார்கள்?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

   

      

  இந்த பதிவை ரீட்விட் செய்துள்ள சத்குரு, “ஒரு பெண் குடும்ப அமைப்பின் அச்சாணியாக திகழ்கிறாள். வீட்டுத்தலைவியர் தற்கொலை செய்வது சமூகத்திற்கு நல்லதில்லை; இது சமூகத்தின் அடிக்கற்களையே அசைத்துவிடும்.

  அலுவலகத்தில் உயரதிகாரியை கையாளுவது எப்படி? - சத்குரு பதில்...

     நம் உள்நலன் நமக்கு தலையாயதாக மாறவேண்டும் - நம்மை சுற்றியுள்ளோர் நலனை உறுதிசெய்ய இது அத்தியாவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Sivaranjani E
  First published: