Home /News /lifestyle /

திருமணத்திற்கு பிறகு உங்கள் இணைப்பு பெயரை மாற்றுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன

திருமணத்திற்கு பிறகு உங்கள் இணைப்பு பெயரை மாற்றுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன

Wedding

Wedding

Wedding | சொத்து ரீதியான ஆவணங்களை தயார் செய்யும்போது கணவர் பெயர் உங்களுடன் இணைந்திருந்தால், அது உதவிகரமாக இருக்கும். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்க விரும்பினால், அந்த காரியம் எளிதாக நடக்கும்.

பெண்களின் பெயருக்குப் பின்னால்,  ஒரு ஆணின் பெயர் எப்போதுமே அடையாளப் பெயராக அல்லது இணைப்புப் பெயராக சேர்ந்து வருகிறது. திருமணத்திற்கு முன்பு வரையில் தந்தையின் பெயரை, இணைப்புப் பெயராக பயன்படுத்தி வரும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவர் பெயரை சேர்த்து பயன்படுத்த தொடங்குகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இணைப்புப் பெயரை மாற்ற வேண்டும் என்று சட்ட ரீதியான கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால், இணைப்புப் பெயரை மாற்றுவது மரியாதைக்கு உரிய விஷயமாக சமூகத்தில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கணவரின் பெயரை, தன் பெயருக்குப் பின்னால் பெண் ஒருவர் இணைத்துக் கொள்ளும்போது, அவர் அந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக உருவெடுக்கிறார். அதே சமயம், ஒரு சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும் கூட தங்கள் தந்தை பெயரை இணைப்பு பெயராக தொடருகின்றனர்.

இணைப்பு பெயரை மாற்றுவதால் கிடைக்கும் சாதகங்கள்

கணவரின் பெயரை இணைப்பு பெயராக மாற்றிக் கொள்ளும்போது தான் ஒரு திருமண பந்தம் முழுமை அடைவதாக சமூகத்தினரும், குடும்பத்திலும் நினைக்கிறார்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான புனிதமான விஷயமாக இது கருதப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, கணவர் பெயரை இணைப்புப் பெயராக நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், புகுந்த வீட்டில் உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று சிலர் கருதத் தொடங்குவார்கள். பெயரை சேர்த்துக் கொண்டால் அந்தக் குழப்பத்தை தவிர்க்கலாம்.

சொத்து ரீதியான ஆவணங்களை தயார் செய்யும்போது கணவர் பெயர் உங்களுடன் இணைந்திருந்தால், அது உதவிகரமாக இருக்கும். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்க விரும்பினால், அந்த காரியம் எளிதாக நடக்கும். உங்கள் குழந்தைக்கு எந்த இணைப்புப் பெயரை பயன்படுத்த போகிறீர்கள் என்ற விவாதம் குறையும்.



 

இணைப்புப் பெயரை மாற்றுவதால் ஏற்படும் பாதகங்கள்

இத்தனை நாட்களாக நீங்கள் பெருமையுடன் பயன்படுத்தி உங்கள் குடும்பத்தின் பாரம்பரிய பெயர் அல்லது தந்தையின் பாசத்திற்குரிய பெயரை இழப்பீர்கள். நீங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் அடையாள அட்டைகள், பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்ட பல ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும்.

Also Read : உங்கள் திருமணத்திற்கு தயாராக சில டிப்ஸ்

நீங்கள் உங்கள் கணவர் பெயரை இணைப்பு பெயராக இணைத்துக் கொள்வதைப் போல, உங்கள் பெயரை இணைப்புப் பெயராக இணைத்துக் கொள்ள அவர் விரும்பமாட்டார். உங்கள் கணவர், அவரது தந்தை பெயர் அல்லது குடும்பத்தின் பாரம்பரிய பெயரையே இணைப்புப் பெயராக தொடர்ந்து கொண்டிருப்பார். இதனால், உங்கள் இருவருக்கும் இடையே பொறாமை காரணமாக சண்டை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Also Read : திருமணத்துக்கு ‘சரி’ என்று சொல்வதற்கு முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

சமூகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும், உங்கள் பெயர் தனித்து தெரியாது. கூடவே உங்கள் கணவர் பெயரும் சேர்ந்திருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Lifestyle, Relationship

அடுத்த செய்தி